கிருஷ்ணகிரி தப்பாட்ட கலைக்குழுவினரின் நீங்களே சொல் லுங்கள் என்ற நாடகம் புதுச்சேரியில் மக்களை கவர்ந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பாலமோகனனுக்கு ஆதர வாக கிருஷ்ணகிரி தப்பாட்ட கலைக்குழுவினர் வீதி வீதியாக வாக்கு சேகரித்து வருகின்றனர். முதலில் தப்பாட்டத்தை அடித்து மக்களை கவர்ந்து கூட்டம் கூடிய உடன் பின்னர் நீங்களே சொல்லுங்கள் என்ற வீதி நாடகம் அரங்கேற்றபடுகிறது. இந்த நாடகத்தில் திருமணம் செய்வதற்கு மாப்பிளை வீட்டார் பெண் பார்க்க செல்கின்றனர். பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரைப் பார்த்து எவ்வளவு வரதட்சணையாக தங்கம் எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்க வரதட்சணையா அதெல்லாம் தேவையில்லை ஒரு கிலோ வெங்காயம், ஒரு கிலோ பூண்டு, ஒரு கிலோ சமையல் எண்ணை உள்ளிட்ட பொருட்களை மட்டும் கொடுத்தாபோதும் எனக்கூற அதற்கு பெண் வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் நடைபெறுகிறது. தாலி கட்டும் நேரத்தின்போது கேட்ட பொருட் களில் 100 கிராம் எடை குறைகிறது. உடனே மாப்பிள்ளை வீட் டார் திருமணத்தை நடத்த மறுக்கின்றனர். அப்போது பெண் வீட் டார் நீங்கள் கேட்ட பொருட்களை வரதட்சணையாக கொடுத் துள்ளேன் எனக்கூற பின்னர் குறைந்த பருப்பை திருப்பி தந்தவு டன் கல் யாணத்திற்கு மாப்பிளை வீட்டார் சம்மதிக்கின்றனர். விலை உயர்ந்த தங்கத்தைவிட மளிகை காய்கறிகள் விலை உயர்ந்திருப்பதை எடுத்துக் காட்டும் விதமாக நடகத்தின் கருத்து அமைந்தது. இந்நாடகத்தை பார்த்த மக்கள் நம்மை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை பற்றி தெரிந்து கொண்டனர். நீங்களே சொல்லுங்கள் என்ற நாடகத்தின் தலைப்புக்கிணங்க மார்க் சிஸ்ட் கட்சிக்கு தான் எங்கள் ஓட்டு என்று வாக்காளர்கள் கை தட்டலுடன் உரக்கத் தெரிவித்தனர். |



