இணைப்பு கொடுக்க

இணைவோம்!

RSS feed

வந்தவர்கள்

கட்டுரைகள்

திரிணாமுல் காங்கிரசின் பொய்களும் ... உண்மையும்

posted Apr 29, 2011, 2:00 AM by theekkathir news   [ updated Apr 29, 2011, 2:01 AM ]

-அ.அன்வர்உசேன்

“நான் பொய்யே பேசுவதில்லை”- இது மம்தா பானர்ஜி சமீபத்தில் அளித்த பேட்டி யில் கூறியது! ஆனால் நடைமுறையில் பொய் பேசாமல் அவரால் இருக்க முடியாது என்பதே உண்மை. அவர் இடது முன்ன ணிக்கு எதிராகக் கூறிவரும் சில பொய்கள்:

பொய் 1 :

ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் கிலோ அரிசி இரண்டு ரூபாய் எனும் திட்டம் மத்திய அரசுடையது! இடதுமுன்னணி அரசி னுடையது அல்ல!

உண்மை :

இத்திட்டத்திற்கு மத்திய அரசு கிலோ அரிசி ரூ.5.65க்கு விற்கிறது. இடது முன் னணி அரசு ஒரு கிலோவிற்கு ரூ.3.65 மானி யம் தந்து இரண்டு ரூபாய்க்கு தருகிறது. தற் சமயம் 2.64 கோடி மக்கள் இத்திட்டத்தால் பயன்பெறுகின்றனர். அடுத்து ஆட்சிக்கு வரும் 8வது இடது முன்னணி அரசு இத் திட்டத்தை மேலும் இரண்டு கோடி மக் களுக்கு விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.

பொய் 2 :

மேற்கு வங்கத்தில் 50சதவீதம் கிராமங் களுக்கு மின்சாரமே இல்லை!

உண்மை :

இது வடிகட்டின பொய். மேற்குவங்கத் தில் 37910 கிராமங்கள் உள்ளன. 37765 கிரா மங்களுக்கு அதாவது 99.61சதவீத கிராமங் களுக்கு மின்வசதி செய்து தரப்பட்டுவிட்டது. மீதமுள்ள கிராமங்களுக்கும் அடுத்து ஆட் சிக்கு வரும் 8வது இடது முன்னணி அரசு மின்சாரத்தை அளிக்கும்.

பொய் 3 :

மேற்குவங்கத்திற்கு மட்டும் நான் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களை அறிவித்துள்ளேன்.

உண்மை :

2010-11ம் ஆண்டில் இரயில்வே பட்ஜெட் நாடு முழுமைக்குமே ரூ.41626 கோடிதான்! 2011-12ல் ரூ.57630 கோடிதான். நாடு முழு மைக்கும் சேர்த்து இரண்டு ஆண்டுகளுக் கான பட்ஜெட் ரூ 1இலட்சம் கோடிக்கும் குறைவாகவே உள்ளது. அப்படியிருக்க, மேற்குத் வங்கத்தில் மட்டுமே எப்படி ஒரு இலட்சம் கோடி ரூபாய் சாத்தியம்? மம்தா வின் மகத்தான பொய்களின் ஒன்று இது!

பொய் 4:

முறைசாரா தொழிலாளர்களுக்கு மத்திய திட்டங்கள்தான் உள்ளன. இடது முன்னணி அரசு அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை!

உண்மை:

மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் வறு மைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்குத் தான்! ஆனால் மிகக்குறைவான வருமானம் பெற்றாலும் மத்திய அரசாங்கம் நிர்ணயித் துள்ள மிகக்குறைவான வறுமைக்கோடு தொகை காரணமாக முறைசாரா தொழி லாளர்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள வர்களாக கருதப்பட்டு , மத்திய திட்டங்கள் தரப்படுவது இல்லை.

ஆனால் இடதுமுன்னணி அரசு, முறை சாரா தொழிலாளர்களுக்கு கீழ்க்கண்ட நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. 

* 25 லட்சம் முறைசாரா தொழிலாளர் களுக்கு வருங்கால வைப்பு நிதி.

* விவசாயத் தொழிலாளர்களுக்கு வருங் கால வைப்பு நிதி மற்றும் மருத்துவ நலத் திட்டங்கள்.

* கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் (பென்சன்)

* போக்குவரத்து தொழிலாளர்களின் குழந் தைகளுக்கு கல்வி உதவி நிதி.

* பீடித் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி

இப்படி பட்டியல் நீளும்.

பொய் 4 :

இரயில்வேத்துறையில் நான் பயணிகள் கட்டணத்தையோ அல்லது சரக்கு கட்டணத் தையோ உயர்த்தவில்லை. வரியும் போட மாட் டேன்.

உண்மை:

இரயில்வே பட்ஜெட்டிற்காக மம்தா மத்திய அரசிடமிருந்து கடந்த இரு ஆண்டு களில் ரூ.35875 கோடி கடன் பெற்றுள்ளார். வெளிச்சந்தைகளிலிருந்து ரூ.29714 கோடி கடன் பெற்றுள்ளார். இப்படி இரயில்வே ஒரு போதும் கடனாளியாக இருந்தது இல்லை. இதன் காரணமாக இரயில்வேத்துறை நிதி பற்றாக்குறையால் திணருகிறது.

மேலும் கடந்த இரு ஆண்டுகளிலும் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என் பதை நாடே அறியும்.

பொய் 5:

கடந்த ஒரு ஆண்டில் 710 கி.மீ. புதிய இருப்புப்பாதை போட்டுள்ளேன்.

உண்மை: தான் 710 கி.மீ. புதிய இருப்புப் பாதை போட்டுள்ளேன் என்கிறார் மம்தா. ஆனால் நிதி அமைச்சகத்தின் புள்ளி விவரங் கள் 59 கி.மீ. மட்டுமே புதிய இருப்புப்பாதை போடப்பட்டதாக தெரிவிக்கிறது.

இரட்டை இருப்புப்பாதைகள் 700 கி.மீ. போட்டதாக மம்தா கூறுகிறார். ஆனால் நிதி அமைச்சகத்தின் ஆவணங்கள் 55 கி.மீ. மட்டுமே போடப்பட்டதாக கூறுகின்றன. அதே போல 1000 கி.மீ. இருப்புப்பாதை மின்மயமாக்கப்பட்டதாக மம்தா கூறுகிறார். ஆனால் 243 கி.மீ. தான் மின்மயமாக்கப் பட்டதாக அரசின் ஆவணங்கள் கூறுகின் றன. இப்படி மம்தாவின் பொய்கள் அமைந் துள்ளன.

பொய் 6:

நான் 1.80 இலட்சம் பேருக்கு இரயில்வே யில் வேலை வாய்ப்பு அளித்துள்ளேன்.

உண்மை:

இரு ஒரு இமாலயப் பொய் எனில் மிகை அல்ல. இரயில்வேயில் பல்லாயிரக்கணக் கான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பக்கோரி தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளில் இந்த இடங்களை நிரப்பிட இரயில்வே போர்டு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டதாகவோ அல்லது இர யில்வே பட்ஜெட்டில் 1.8 இலட்சம் பேருக்கு புதியதாக ஊதியம் தந்திடவோ எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. எனவே இது மம்தாவின் இமலாயப் பொய் என்பதே உண்மை.

பொய் 7:

மாவோயிஸ்டுகள் மார்க்சிஸ்ட் கட்சியின ரால் உருவாக்கப்பட்டவர்கள்.

உண்மை:

மாவோயிஸ்டுகள் மார்க்சிஸ்ட் கட்சியின ரால் உருவாக்கப்பட்டவர்கள் எனில் அவர் கள் ஏன் மம்தா முதல்வர் ஆவதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்? மார்க்சிஸ்ட் கட்சி யின் ஊழியர்களை ஏன் அவர்கள் கொன்று குவிக்க வேண்டும்?

பொய் 8 :

சிறுபான்மை மக்களுக்கு செய்யப்பட் டுள்ள இட ஒதுக்கீட்டிலிருந்து இந்துக்களின் கோட்டாவிலிருந்து செய்யப்பட்டுள்ளது.

உண்மை: 

இந்து சமூகத்தில் உள்ள அனைத்து பிற் படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய் யப்பட்டதற்கும் மேலாக தனியாக முஸ்லிம் உட்பட அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் 10 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மேற்குவங்கத்தில் மட்டும் தான் 10 சதவீதம் அளவுக்கு செய்யப்பட்டுள் ளது.

சிறுபான்மை மக்களுக்கு தரப்பட்டுள்ள ஒதுக்கீடு இந்துக்களின் ஒதுக்கீட்டிலிருந்து செய்யப்பட்டுள்ளது என மம்தா கூறுவது மத மோதல்களை உருவாக்கிடும் ஆபத்தான அணுகுமுறை, பாரதிய ஜனதா கட்சியைவிட மோசமாக மம்தா பேசுகிறார்.

பொய் 9:

மார்க்சிஸ்ட் கட்சி கோமாவில் உள்ளது.

உண்மை: 

சமீபத்தில் பிரிகேடியர் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பேரணியில் 10 லட்சம் பேருக்கும் அதிகமாக மக்கள் பங்கேற்றனர். கடந்த 50 ஆண்டுகளில் இதுபோல ஒரு பேரணியை பார்த்தது இல்லை என எதிர்க் கருத்துகள் கொண்ட ஊடகங்களே எழுத வேண்டி வந்தது. 

இரு மாதங்களுக்கு முன்பு நடந்த கல் லூரி தேர்தல்களில் இந்திய மாணவர் சங்கம் மகத்தான வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆசிரியர் தேர்தல் களிலும் இடதுசாரி வேட்பாளர்கள் வென் றனர். இந்த உண்மைகளை எல்லாம் மம்தா மறக்க முயல்கிறார் அல்லது ஊடகங்களின் துணையோடு மறைக்கப்பார்க்கிறார். 

இவ்வாறாக பொய்களையே சுவாசிக்கும் மம்தாவிற்கு பல ஊடகங்களும் ஆதரவு தெரி வித்து வருகின்றன. எனினும் இடதுமுன்ன ணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதன் மூலம் மேற்குவங்க மக்கள் இந்த பொய்யர் களின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுவர் என்பது உறுதி

நாட்பட்ட நோய்கள் இருப்பினும் நல்வாழ்க்கை வாழ முடியும்

posted Apr 28, 2011, 1:23 AM by theekkathir news   [ updated Apr 28, 2011, 1:24 AM ]

-பேராசிரியர் கே. ராஜு

உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் பொதுவாக நோய் வருவ தற்குமுன் தடுக்க வேண்டிய அவ சியம் பற்றியும் வழிமுறைகள் பற்றியும் பிரச்சாரம் செய்கின்றன. ஆனால் ஏற்கனவே நீடித்த நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் என்ன செய்வது என்பது பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் தேவை.

`தீராத’ நோய் எனக் கருதப்படும் நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் கூட நீண்ட ஆயுளுடன் நன்கு வாழ முடியும் என்ற கருத்துக்கு தற்போது மருத்துவர்கள் வந்துள்ளனர். டாக்டர் மோகன் நீரிழிவு சிகிச்சை மையம் இரண்டு லட்சம் நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில் சுமார் 250 பேர் 50, 60 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வாழ்ந்து வருவதாகத் தெரியவந்தது.

`தீராத’ நோய்கள் வருடக் கணக் காக நீடிக்கக் கூடியவை. சிலருக்கு அவர்களுடைய வாழ்நாள் முழுவ துமே சிகிச்சை தேவைப்படலாம். இப் படிப்பட்ட நோய் அல்லது நோய்களு டன் வாழ்வது எளிதானதல்ல. உண வுப் பழக்கங்களில் சில கட்டுப்பாடு கள், விதவிதமான மாத்திரைகள், அவ்வப்போது மருத்துவ பரிசோத னைகள் போன்ற நிர்ப்பந்தங்களுக் கிடையே அவர்கள் வாழவேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இதன் காரணமாக நீடித்த நோய் உள்ள வர்களில் சுமார் 75 சதவீதம் பேர் மனச் சோர்வுக்கு ஆளாகிவிடுகின்றனர். `நாட்பட்ட நோய் உள்ளவர்கள் இந்த அம்சத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனஅழுத்தம் தோன்றும் சூழ்நிலைகளில் மனநல மருத்துவர் களிடம் தகுந்த ஆலோசனைகளைப் பெறுவது அவசியம்’ என்கிறார் டாக்டர் எஸ். தணிகாசலம்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயம்-ரத்தக் குழாய்களில் கோளா றுகள், புற்றுநோய், பாரிசவாயு போன்ற நீடித்த நோய்களினால் பீடிக்கப்பட்ட வர்கள் தங்களுடைய உடல்நிலை யை நன்கு புரிந்துகொண்டு அதற் கேற்றபடி வாழ்க்கை முறைகளை மாற் றியமைத்துக் கொள்வதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. இது பற்றி இணையதளத்தில் இன்று ஏரா ளமான தகவல்கள் கிடைக்கின்றன. ஆனாலும் தீவிரமான மாற்றத்தை மேற்கொள்ளுமுன் சிகிச்சை எடுத் துக் கொள்ளும் டாக்டரிடம் ஆலோ சனை பெறுவது அவசியம்.

நோய்க் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதில் டாக்டருக்கு ஒரு முக்கியமான பங்கு இருப்பது போல நோயாளிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. உரிய மையங்களில் மருத்துவ பரிசோதனைகளை அவ் வப்போது செய்துகொள்ள வேண்டும். அதே சமயம், டாக்டரிடம் போகாம லேயே ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொலஸ்டிரால் போன்ற அளவுகளை பரிசோதித்துத் தெரிந்து கொள்ள நவீன கருவிகள் வந்து விட்டன. அவற்றையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

40 ஆண்டுகளுக்கு மேலாக நீரிழிவு பாதிப்புடன் வாழ்பவர்கள் உணவுப் பழக்கத்தில் கவனமாக இருந்திருக்கிறார்கள்.. அன்றாடம் உடற்பயிற்சி செய்து வந்திருக்கிறார் கள்.. குறிப்பிட்ட கால இடைவெளி யில் ரத்த சர்க்கரை அளவை சோதித்து வந்திருக்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீடித்த நோய்கள் இருப்பினும் வாழ்க்கை முறைகளில் தேவையான மாற்றங்களைச் செய்து கொண்டுவிட்டால், நன்கு வாழ முடி யும் என்பதை இந்த ஆய்வுகள் உறு திப்படுத்துகின்றன. முறையான எச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்வதால், மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர வேண்டிய அவசியத்தையும் அதன் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினங்களை யும் தவிர்க்க முடியும்.

நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பு, கார்போஹைட்ரேட் குறை வாகவும் உள்ள உணவே பொதுவா கப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொருவரது உடல்நிலைக்கும் ஏற்ற வகையில் உணவுப் பழக்கம் அமைவது நல்லது. நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் சர்க்கரையையும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பை யும் தவிர்க்க வேண்டும் என்பது பர வலாகத் தெரிந்த விஷயம். ஆனால், காச நோய், புற்று நோய் உள்ளவர் களுக்கு கலோரி அதிகம் உள்ள உணவு தேவை. அதே போல் உடற் பயிற்சி என்பதும் உடல்நிலைக்குத் தகுந்த பயிற்சியாக இருக்க வேண் டும். மூட்டுவலி, கண்புரை, மூச்சு விடுவதில் சிரமங்கள் போன்ற பாதிப் புகள் உள்ளவர்கள் அவரவர் உடல் நிலைக்கேற்ற பயிச்சி மேற்கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர் ஏ. பன்னீர்செல்வம்.

(ஆதாரம் : தி இந்து நாளிதழில் ரம்யா கண்ணன் எழுதிய கட்டுரை)

கோயபல்ஸ் பிரச்சாரம் எடுபடாது

posted Apr 28, 2011, 1:21 AM by theekkathir news   [ updated Apr 28, 2011, 1:22 AM ]

-கி.இலக்குவன்

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடதுமுன்னணியின் ஆட்சிக்காலத்தில் எதுவுமே செய்யப்படவில்லை என்று தடா லடியாகப் பேசிவருகிறார் மம்தா பானர்ஜி, ஆமாம் ஆமாம் என்று உரத்த குரலில் முழங்குகிறார் சோனியாகாந்தி,ஏழை மக்களைப்பற்றி இடது முன்னணி கவ லைப்படவே இல்லை என்கிறார் “இளவர சர்” ராகுல் காந்தி. இவர்களின் இந்த பேச் சுக்கள் மேற்கு வங்க மக்களையே அவ மதிப்பதுபோல் இருக்கின்றன என்று சரியாகவே வருணித்துள்ளார் சோமநாத் சட்டர்ஜி, இடதுமுன்னணி எதையுமே செய்யவில்லை என்றால் மேற்கு வங்க மக்கள் ஏழுதேர்தல்களில் தொடர்ந்து அதற்கு வாக்களித்திருப்பார்களா என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். புளு கினாலும் பொருத்தமாகப் புளுக வேண் டும் என்பார்கள். கடந்த 34 ஆண்டுகளாக சிறப்பான முறையில் சாதனைகளை நிகழ்த்தியுள்ள மேற்கு வங்க இடது முன் னணியின் ஆட்சியை நேரில் கண்டுவரும் வங்கமக்கள், இந்த கோயபல்ஸ் பிரச்சா ரத்திற்கு பலியாகிவிடுவார்கள், என்று மம்தா கும்பல் நினைத்தால், அது பகற் கனவாகவே முடியும்.

30 ஆண்டுகளாக எகிப்து நாட்டை ஆட்சி புரிந்த முபாரக்கின் ஆட்சியை மாற்றமுடியும் என்றால், மேற்கு வங்க ஆட்சியை மாற்ற முடியாதா என்று கேட் கிறார் மம்தா பானர்ஜி. எகிப்து நாட்டில் நடைபெற்று வந்தது ஒரு சர்வாதிகார ஆட்சி. ஆட்சிமாற்றத்துக்கு வாய்ப்பளிக் கும் வகையில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இங்கு போல் அங்கெல்லாம் முறை யாகத்தேர்தல்கள் நடத்தப்பட்டது கிடை யாதே. 1977க்குப் பிறகு ஐந்தாண்டுக ளுக்கு ஒருமுறை தேர்தல்களை நடத்தி, மக்களின் கட்டளையைப்பெற்றுத்தானே ஆட்சி பீடத்தில் இடது முன்னணி நீடித்து வருகிறது அப்போதெல்லாம் பல பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டு நீங்கள் செய்த பிரச்சாரங்கள் வங்கமக்கள் மத்தியில் எடுபடவில்லையே. அதை நாடு மறக்கவில்லை. எனவே மாற்றம் வேண் டும் என்று நீங்கள் கூக்குரலிடுவதால் எந்த பயனும் விளையாது, இப்போது இந்த சேர்ந்திசையில் தன்னையும் இணைத் துக் கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், ஆட்சி மாற்றத்துக்கான தருணம் வந்துவிட்டது என்கிறார். இடது முன் னணி ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று கடந்தகாலங்களில் இந்திரா காந்தி பிரச்சாரம் செய்துள்ளார். ராஜீவ்காந்தி பிரச்சாரம் செய்துள்ளார். அப்போதெல் லாம் வராத தருணம் இப்போது வந்துவிட் டதாக மன்மோகன் சிங் கூறுவது ஏன்? இந்தியாவை தனது இளைய பங்காளி யாக மாற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், அதற்கு இடதுசாரிகளின் அரசியல் வலிமை தடையாக இருக்கிறது. எனவே அவர்கள் பலவீனப்படுத்தப்படவேண்டும். தோற் கடிக்கப்படவேண்டும். அதே நேரத்தில் மம்தா பானர்ஜி மேற்குவங்க முதல்வரா னால்,அவர் நம்முடன் நன்கு ஒத்துழைப் பார் என அமெரிக்கா கருதிவருவதை விக் கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தி யுள்ளது. அமெரிக்கா கூறுவதை வேத வாக்காக கருதி செயல்படக்கூடிய மன் மோகன்சிங், அவர்கள் விருப்பத்தை மன தில் வைத்துக்கொண்டுதான் ஆட்சிமாற் றத்துக்கான தருணம் வந்து விட்டது என்று கூறுகிறாரோ?

சாதாரண மக்களுடன் குறிப்பாக இளைஞர்களுடனான தொடர்பை இடது முன்னணி அரசாங்கம் இழந்துவிட்டது என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அப் படியானால் கடந்த ஆண்டில் பெரும் பாலான கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தல்களில் இந்திய மாணவர் சங்கம் அமோக வெற்றிபெற்றது எப்படி, அவர்களுடன் நல்ல புரிதல் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இருப்பதனால் தானே இந்த வெற்றி சாத்தியமாயிற்று. முதலீடு, விவசாயம், கல்வி போன்றவற் றில் உறுதியான கொள்கை எதுவும் இடது முன்னணிக்கு இல்லையாம்! கூறுகிறார் மன்மோகன் சிங்.

கடந்த சில ஆண்டுகளில் தொழில் முனைவோருடன் மேற்கு வங்க அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்களின் எண் ணிக்கை 1362, இதன்முலம் பெறப்பட் டுள்ள முதலீடுகளின் அளவு 237000 கோடி. குஜராத், மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக முதலீடுகளை ஈர்த்துள்ள மாநிலம் மேற்குவங்கம். இரும்பு, எக்கு, உணவுப் பதப்படுத்தும் தொழில், தகவல் தொழில்நுட்பம், சுற்று லாத்துறை போன்றவற்றில் அம்மாநிலத் திற்கு கடந்த சில ஆண்டுகளில் பல்லா யிரம் கோடி ரூபாய் புதிய முதலீடு கிடைத் துள்ளது. மின்வெட்டு என்ற ஒன்று இல்லாத மாநிலம் மேற்கு வங்கம். 1977ல் ஆட்சிப்பொறுப்பை இடது முன்னணி ஏற்றபோது கொல்கத்தா நகரம் இருண்ட நகரம் என்ற பெயரைப் பெற்றிருந்தது. மின் சார உற்பத்தி அதிகரிப்புக்காக ஏராள மான திட்டங்கள் வகுக்கப்பட்டு, போர்க் கால அடிப்படையில் இடது முன்னணி அரசால் நிறைவேற்றப்பட்டதால்தான் இன்று மின்சாரத்தை மற்ற மாநிலங் களுக்கு வழங்கக்கூடிய மாநிலமாக மேற்கு வங்கம் உயர்ந்துள்ளது. மின் வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் என்று மாறும் என ஏங்கி வரும் தமிழக மக்களால் மேற்கு வங்க அரசின் மகத் தான சாதனையை நன்கு புரிந்துகொள்ள முடியும்.

நிலச்சீர்திருத்தங்களின் மூலம் 30 லட்சம் நிலமற்ற விவசாயக் குடும்பங் களுக்கு அளிக்கப்பட்ட நிலம் 13 லட்சம் ஏக்கர், 15 லட்சம் குத்தகைதாரர்களின் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. சரியான விவசாயக்கொள்கை கடைப்பிடிக்கப் பட்டதால்தான் உணவுதானிய உற்பத்தி யில் தன்னிறைவை எட்டிமேற்கு வங்கம் சாதனை நிகழ்த்தியுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களின் உற்பத்தியில் முதலி டத்தில் உள்ள மாநிலம் மேற்கு வங்கம். சிறு தொழில் மற்றும் கிராமத் தொழில் களை வளர்த்துள்ளதிலும் முதலிடத்தில் உள்ள மாநிலம் மேற்கு வங்கம்.

பொது சுகாதாரத்திலும் பெரும் சாத னைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அம் மாநிலத்தின் 70 சதவீதம் நோயாளிகள் பொதுமருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்கள் மற்றும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் தேசிய சராசரியை விடக் கூடுதலாக உயர்ந்துள்ளது. குழந்தை இறப்பு விகிதம் 1981ல் 1000க்கு 62 ஆக இருந்தது. 2008ல் 1000க்கு 35 ஆகக் குறைந்துள்ளது.

ஆரம்பப் பள்ளிகளில் சேரத் தகுதி படைத்த மாணவர்களில் 99.06 சதவீதம் பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கல்வி- வேலைவாய்ப்புகளில் முஸ் லிம் சிறுபான்மையினர் பின்தங்கிய நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள முதல் மாநிலம் மேற்கு வங்கம், முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்காக தனி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் மூலம் பல ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

இவ்வாறு மேற்கு வங்க இடது முன் னணியின் சாதனைகளைக் கூறிக் கொண்டே போகலாம். ஐந்தாண்டுகாலம் ஆட்சியில் இருந்தால் ஏற்படும் அதிருப்தி காரணமாக அடுத்த தேர்தலில் ஆட்சி யை விட்டு இறக்கப்படுவதே காங்கிரஸ், பாஜக மற்றும் திமுக போன்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அனுபவமாக இருந்து வந்துள்ளது. மக்களின் வாழ்க்கை யில் மாற்றத்தை ஏற்படுத்தும் பல சாத னைகளைப் புரிந்து வந்துள்ளதால்தான் மேற்கு வங்க இடது முன்னணியை கடந்த 34 ஆண்டுகளாக எதிரிகளால் ஆட் டவோ அசைக்கவோ முடியவில்லை. இடது முன்னணி அரசை வங்கக்கடலில் வீசுவோம் என்று முந்தையகாலங்களில் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் கனிகான் சவுத்ரி முழங்கிவந்தார். அவரது ஆயுட்காலம் முழுவதிலும் அவரால் அதனை செய்யமுடியவில்லை. கடந்த தேர்தலின்போதே இதேபோன்ற முழக் கத்துடன் தேர்தலை சந்தித்த மம்தா பானர்ஜி தோல்வியைத்தழுவினார். இடது முன்னணியை ஆட்சியை விட்டு எப்ப டியாவது இறக்கிவிடவேண்டும், எத்த கைய தில்லுமுல்லையும் செய்தாவது மேற்கு வங்க முதல்வராகிவிடவேண்டும். இதற்காக நக்சலைட்டுகள் உள்ளிட்ட எவரை வேண்டுமானாலும் பயன்படுத் திக் கொள்ளலாம் என்பதை தவிர, வேறு கொள்கையோ, கோட்பாடோ இல்லாத மம்தா, மேற்கு வங்கத்தில் ஆட்டம் போட்டு வருகிறார். மம்தாவின் துணை இல்லை என்றால் ஏற்கெனவே கிடைத்த சில எம்எல்ஏ பதவிகள் கூட இல்லாமல் போய்விடுமே என்ற அச்சத்தால் காங் கிரஸ் கட்சி வெட்கமின்றி மம்தாவின் அரா ஜகத்துக்கு உடந்தையாக இருந்து வரு கிறது. அறிவாற்றலிலும் அரசியல் உணர் விலும் முன்னணியில் உள்ள மேற்கு வங்க மக்கள் இந்த சந்தர்ப்பவாதக் கூட் டணிக்கு நல்ல பாடத்தைக் கற்பிப்பார்கள் என்பது உறுதி.

ஊழல்பேர்வழிகள் குற்றவாளிக் கூண்டில்

posted Apr 26, 2011, 7:59 PM by theekkathir news   [ updated Apr 26, 2011, 8:00 PM ]

“லஞ்ச ஊழல் பிரச்சனையிலும் அதில் ஈடுபட்ட நபர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியதிலும் இடதுசாரிகளுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பங்குண்டு. இது மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மை மக்களின் உணர்வாக இருக்கிறது’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் சீத்தாராம் யெச்சூரி பிரச்சாரம் செய்து வருகிறார். தன்னுடைய பிரச்சாரம் குறித்து “கணசக்தி” இணையதளத்திற்கு அவர் பேட்டியளித்தார். அதன் விவரங்கள் வருமாறு:

கேள்வி: இதுவரை நடை பெற்றுள்ள இரு கட்ட வாக்குப் பதிவு குறித்து தங்கள் மதிப்பீடு என்ன?

சீத்தாராம் யெச்சூரி: வடக்கு வங்கத்தில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவு இடது சாரிகளுக்கு ஆதரவாகவே நடைபெற்றுள் ளது. 2009ல் இருந்ததைவிட அதிகமான அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றிருக் கிறது. வடக்கு வங்கத்தில் ‘அரசாங்கத்தில் மாற்றம்தேவை’ என்கிற மனோபாவம் இல்லை என்பது தெளிவு. இது நமக்கு உடன் பாடான ஓர் சமிக்ஞை. மக்கள் மிகவும் உணர் வுப்பூர்வமாகவும், மனமுதிர்ச்சியுடனும் வாக் களித்திருக்கிறார்கள் என்றே நாங்கள் கருது கிறோம். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடை பெற்ற நாடியா மாவட்டத்தின் பல பகுதிகளில் நான் பிரச்சாரம் மேற்கொண்டேன். நான் பிரச்சாரம் செய்த அதே நாளன்று சில பகுதிகளில் சோனியா காந்தியும் பிரச்சாரம் செய்தார். இரு கூட்டத்திலும் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகை யில், அவரது கூட்டத்திற்குக் கூடியதைவிட பல மடங்கு அதிகமாக நம் கூட்டத்திற்கு மக்கள் வந்து கலந்துகொண்டதைப் பார்த் தோம். மக்களவைத் தேர்தலின்போது, நாடியா மாவட்டத்தின் 17 சட்டமன்றத் தொகுதிகளில் 16ல் இடதுசாரிகளுக்குப் பின்னடைவு ஏற் பட்டிருந்தது. ஆனால் இப்போது பிரச்சாரத் தின்போது நம் கூட்டங்களில் மக்கள் பங் கேற்பைப் பார்க்கும்போது, நிலைமைகள் நமக்குச் சாதகமாக மாறியிருப்பதை நிச்சய மாகக் கூறமுடியும்.

கேள்வி: இடது முன்னணி யின் 34 ஆண்டு கால ஆட்சி யில் மக்கள் சோர்வடைந்து விட்டார்கள் என்றும், எனவே அவர்கள் மாற்றத்தை விரும்பு கிறார்கள் என்றும் ஊடகங் களில் பிரச்சாரம் செய்யப்படு கிறதே?

சீத்தாராம் யெச்சூரி: வரலாற்றில் இவ் வாறு இதற்கு முன் எங்கும் நடைபெற்ற தில்லை. நம் நாட்டிலும் சரி, உலகின் பிற பகு திகளிலும் சரி, எங்கும் ஏழு தடவை தொடர் ந்து வெற்றி பெற்ற நிலைமை கிடையாது. இது எதார்த்த உண்மை. இத்தனை ஆண்டு காலமும் மக்கள் நமக்கு வாக்களித்து வந்தி ருக்கிறார்கள். ஆயினும் இன்றைய வாக்காளர் களில் கணிசமான பகுதியினர் நாம் 1977ல் ஆட் சிக்கு வந்த பின்னர் பிறந்தவர்களேயாவர். அவர்கள் நம் திட்டம் மற்றும் கொள்கைகளின் அடிப்படையிலேயே நம்மை மதிப்பிடுவார் கள். மெல்ல, மெல்ல ஆனால் உறுதியாக அவர்களும் வங்கத்திற்கு அமைதியும் வளர்ச் சியும் தேவை என்பதையும், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இவை இரண்டினையும் மீறக்கூடியது என் பதையும் புரிந்துகொள்வார்கள் என்று நான் கருதுகிறேன். எனவே, அவர்களும் இடது முன்னணி அரசாங்கத்தையே ஆதரிப்பார் கள்.

கேள்வி: மம்தா பானர்ஜி யின் செயல்பாடு மத்திய ரயில்வே அமைச்சராக எவ் வாறு இருந்தது?

சீத்தாராம் யெச்சூரி: ரயில்வே அமைச் சராக அவரது செயல்பாடு என்ன என்பது அனைவரும் அறிந்ததே. ஏகப்பட்ட வாக்கு றுதிகளை அள்ளித் தெளித்திருக்கிறார். ஆனால் உருப்படியாக எதையும் அவர் நிறை வேற்றியதில்லை. மேலும் தன் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, எண்ணற்ற விளம்பரங்கள் கொடுப்பதன் மூலமாகவும், தனக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடுவதற்காக பணம் அளிப்பதன் மூலமாகவும் ரயில்வே துறையை தவறாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மேற்கு வங்கத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவது தொடர்பாக அவர் அளித்திடும் வாக்குறுதிகள் எல்லாம் என்னவாகும் என்பதை அவர், சிங்கூர், நந்திகிராமம் ஆகிய இடங்களில் நடந்துகொண்ட விதத்திலிருந்து மக்கள் நன்கு அறிவார்கள்.

கேள்வி: தேர்தலில் மற்ற மாநிலங்களில் நடைபெறுவது போல் பண பலமும், அடியாள் பலமும் மேற்கு வங்கத்திற் குள்ளும் வந்துவிட்டதா?

சீத்தாராம் யெச்சூரி: இந்தத் தடவை வங்கத்திற்குள்ளும் இத்தகைய போக்கு வந்திருப்பதை துரதிர்ஷ்டவசமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஒரு புதிய போக்கு. வங்கத்தில் அரசியல் இதுநாள்வரை, திட்டங் கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படை யிலேயே அமைந்திருந்தது. அவற்றைச் சுற் றியே ஆரோக்கியமான விவாதங்கள் நடை பெற்றிருக்கின்றன. ஆனால் முதன் முறை யாக இங்கு சட்டவிரோதமாகப் பணம் மிகப் பெரிய அளவில் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். இங்கே கறுப்புப் பணம் எவ்வாறு

பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தக்க ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திற்குச் சுட்டிக்காட்டி இருக்கிறோம். மூன்றாவது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முன், சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங் களும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். வங்க அரசியலில் பணபலத்தை யும், அடியாள் பலத்தையும் பயன்படுத்துவது திரிணாமுல் காங்கிரசின் புதிய பங்களிப்பாகும்.

கேள்வி: தேர்தலில் திரிணா முல் காங்கிரசுக்கும் மாவோ யிஸ்ட்டுகளுக்கும் இடையே யுள்ள தொடர்பு ஒரு பெரிய பிரச் சனையாக மாறியிருக்கிறதா?

சீத்தாராம் யெச்சூரி: இது ஒரு பெரிய பிரச்சனை. அராஜகத்தைக் கட்டவிழ்த்து விடவும், இடது முன்னணி ஆதரவாளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்திடவும், திரிணா முல் காங்கிரஸ், மாவோயிஸ்ட்டுகளுடன் கை கோர்த்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர் தலில் மாவோயிஸ்ட்டுகள், திரிணாமுல் காங்கிரசுக்கு நேரடியாகவே உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற ஜன நாயகத்தில் நம்பிக்கை கிடையாது என்று கூறிக்கொண்டிருப்பவர்களின் உதவியை திரிணாமுல் காங்கிரஸ் பெற்றிருக்கிறது. இன் றைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை முற்றிலுமாக நிராகரிக்கிறோம் என்று சொல் லும் மாவோயிஸ்ட்டுகள், திரிணாமுல் காங் கிரசுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நாணங்கெட்ட முரண்பாடுகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இரண்டாவதாக, வங்கத்தில் அறுபதுகளி லும் எழுபதுகளிலும் நடைபெற்றதைப்போல் வன்முறைச் சம்பவங்கள் இப்போது மீண்டும் எழுந்திருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. திரி ணாமுல் - மாவோயிஸ்ட் கூட்டணிக்கு மக் கள் தேர்தலில் சரியான பதிலடி கொடுப்பார்கள்.

மூன்றாவதாக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரசுடன் வைத்துக்கொண்டுள்ள கூட் டணி மற்றொரு முரண்பாட்டை வெளிப் படுத்துகிறது. நாட்டின் உள்நாட்டுப் பாது காப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பது மாவோயிஸ்ட்டுகள் என்று பிரதமர் கூறு கிறார். ஆயினும் இத்தகைய கட்சியுடன் வெளிப்படையாகவே திரிணாமுல் உறவு கொண்டிருக்கிறது. இந்த முரண்பாடும் மக் கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.

கேள்வி: மேற்கு வங்கத்தில் தேர்தல் தொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுப் பியுள்ள பல்வேறு பிரச்சனை கள் குறித்தும் தேர்தல் ஆணை யம் போதுமான அளவில் கவ னம் செலுத்தியுள்ளதா?

சீத்தாராம் யெச்சூரி: நாம் கூறியவற்றைக் கவனத்துடன் கேட்டு, பதிவு செய்து கொள் கிறது. ஆயினும் ஸ்தலத்தில் எந்த அசைவும் இல்லை.

கேள்வி: தேசிய அளவில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகளின் விளைவு எப்படி இருக்கும் என்று தாங்கள் மதிப் பிடுகிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: விளைவு இருவிதங் களில் இருக்கும் என்று நான் கருதுகிறேன். நீண்டகால விளைவு மற்றும் குறுகியகால விளைவு என்று இரு விதங்களில் இருக்கும். ஐ.மு..கூட்டணி வலுப்படுமா, நலிவுறுமா என்பது குறுகிய கால விளைவாகும். மத்தி யில் கூட்டணியில் உள்ள திமுக-தான் அனைத்துவிதமான ஊழலுக்கும், பிரச்சனை களுக்கும் முக்கிய காரணமாகும். தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக தோல்வியுற் றால் அது ஐ.மு. கூட்டணியில் உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து மத்தியி லும் ஸ்திரமற்ற நிலை ஏற்படும். நீண்ட கால விளைவு என்பது, இடது முன்னணியின் செல்வாக்கு மற்றும் பங்கு குறித்ததாகும். மத்திய ஆட்சியாளர்களின் நவீன தாராளமயக் கொள்கைகளை இடது முன்னணி உறுதியாக எதிர்த்து வந்திருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாற மத்திய ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை அது எதிர் த்து வந்திருக்கிறது. லஞ்ச ஊழல் பிரச்ச னையை வெளிக்கொண்டு வந்ததிலும், அதில் குற்றமிழைத்தவர்களைக் குற்றவா ளிக் கூண்டில் ஏற்றியதிலும் இடதுசாரிகள் மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். இவ்வாறான இடதுசாரி களின் பங்கு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் உணர்கிறார்கள். அது நீண்டகால அளவில் பிரதிபலிக்கும்.

- தமிழில் ச.வீரமணி

வர்க்கப்போராட்டங்களுக்கு வலுவூட்டும் மாநாடு

posted Apr 26, 2011, 7:55 PM by theekkathir news   [ updated Apr 26, 2011, 7:57 PM ]

-ஏ.கே.பத்மநாபன்

மனிதகுல வரலாற்றில் பல்வகை சிறப்புகளைக்கொண்ட கிரேக்க நாட்டின், புகழ்மிக்க தலைநகரம் ஏதென்ஸ். சிறிய நாடானாலும், கிரேக்கத்தின் பண்டைய புகழுக்குஏற்றாற்போல், இன்றும் பல் வகை சிறப்புகளைக்கொண்டநாடு. உலகம் முழு வதும் முதலாளித்துவ நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அந்த நெருக்கடியின் கோரவிளைவு களால் பெரிதும் பாதிப்புக்குள் ளாகியுள்ள மக்கள். இந்த நெருக்கடிகளின் விளைவுகளுக்கு எதிராக வீரஞ்செறிந்த வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள், கிளர்ச் சிகளால் உலகத் தொழிலாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நாடு !

இந்த கிரேக்க மண்ணில், தலைநகர் ஏதென்ஸில் தான் உலகத்தொழிற்சங்க சம் மேளனம் (றுடிசடன குநனநசயவiடிn டிக கூசயனந ருniடிளே-றுகுகூரு) நடத்திய 16வது உலகத் தொழிற்சங்க மாநாடு ஏப்ரல் 6 முதல் 10வரையிலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மாநாட்டுப் பின்னணி

தொழிற்சங்கங்களை உலகரீதியாக ஓரணி யில் திரட்டி, பாசிசத்திற்கு எதிராகவும், ஏகாதி பத்திய, முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு எதி ராகவும் வர்க்க ரீதியான பார்வையுடனும், சமூக மாற்றத்திற்காகவும் போராடும் நோக்கோடு 1945ல் துவங்கப்பட்டது உலகத்தொழிற்சங்க சம்மேளனம். 1945 அக்டோபர் 3 முதல் 10வரையிலும் பாரீஸ் நகரில் இதன் அமைப்பு மாநாடு நடைபெற்றது. அக்டோபர்3, அமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு மிக்க பணிகள், போராட்டங்கள், ஒருமைப் பாடு இயக்கங்கள் என புரட்சிகர பாரம்பரியம் கொண்ட சம்மேளனம், உலகளாவிய தத்து வார்த்த சருக்கல் காலங்களில் முந்தைய வர்க்கப்பார்வையுடனான செயல்பாடுகளில் பலவீனங்களைக் கண்டது. 1990ம் ஆண்டு களுக்கு பிறகு, சம்மேளனப் பணிகள், பல் வகை நெருக்கடிகளைச் சந்தித்தது.

உலகளாவிய அரசியல் பலாபலங்களில் வந்த பாதகமான மாறுதல்களால், உலக முத லாளித்துவ சக்திகளின் பேராதரவோடு, சீர் திருத்தவாத தொழிற்சங்கங்களின் உலகளா விய பணிகள் ஒருமுகப்படுத்தப்பட்டன. வர்க்கப்போராட்டங்களின் வரலாறு முடிந்து விட்டது என மூலதன சக்திகள் கொக்கரிக்கத் துவங்கின. இந்த சூழ்நிலைகளின் பாதிப்பு களை 1990ம் ஆண்டு மாஸ்கோவில் நடை பெற்ற 12வது மாநாட்டில் நேரடியாக உணரும் வாய்ப்பும் எனக்கும் கிடைத்தது.

13வது, 14வது மாநாடுகள் ( டமாஸ்கஸ், புதுதில்லி) நிலைமைகளை மாற்ற உதவ வில்லை. ஆனால் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் 2005ல் நடைபெற்ற 15வது மாநாடு, புதிய பாதையிலான பயணத்திற்கு வித்திட்டது. கடந்த 5 ஆண்டுகள், புரட்சிகர வர்க்கப்பாதையில், சுரண்டலற்ற புதிய உலகம் எனும், ஆரம்பகால லட்சியப்பார்வையை முன் னிறுத்தி செயல்பட்ட காலமாக இருந்தது. 15வது மாநாட்டில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட, கிரேக்க நாட்டின் ‘பாமே’(ஞஹஆநு) எனும் போர்க் குணமிக்க அமைப்பைச் சார்ந்த தோழர் ஜார்ஜ் மாவ்ரி கோஸ் உட்பட்ட தலைமைக்குழுவின் பணி கள், சம்மேளனத்தின் விஸ்தரிப்புக்கும் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழி வகுத்தது.

சிஐடியுவின் இணைப்பு

அமைக்கப்பட்ட நாள் முதல் சம்மேளனத் தோடு தோழமையுடன் செயல்பட்டாலும், சிஐடியு, சம்மேளனத்துடன் இணைய வில்லை. சம்மேளனத்தின் கொள்கை நிலை பாடுகள்தான் சிஐடியு இந்த நிலையை மேற் கொள்வதற்கான காரணமாக இருந்தது.

15வது மாநாட்டுக்குப்பின் ஏற்பட்ட மாறு தல்களின் பின்னணியில் சிஐடியு, இணைப்பு பிரச்சனையை மறுபரிசீலனை செய்தது. சிஐடியுவின் சண்டிகர் மாநாட்டில் பங்கேற்ற சம்மேளனப் பொதுச்செயலாளர், சிஐடியு தலைமையுடன் விரிவாக விவாதித்தார். 2010 அக்டோபர் - நவம்பரில் சிஐடியு பிரதிநிதிகள் குழு ஏதென்ஸ் சென்று விவாதங் களைத்தொடர்ந்தது. சிஐடியுவை, உலகத் தொழிற்சங்க சம்மேளனத்துடன் இணைப்ப தென்று சிஐடியு செயற்குழு, நிர்வாகக்குழு, பொதுக்குழு என முறையாக விவாதித்து முடிவு செய்தது.

இணைப்பை உறுதிப்படுத்த, தோழர் மாவ்ரிகோஸ் மார்ச் 12 அன்று சிஐடியு தலை மையகத்துக்கு வருகைபுரிந்தார். இந்தப் பின்னணியில்தான் சிஐடியுவின் 20 பிரதி நிதிகள் கொண்ட குழு, 16வது மாநாட்டில் பங் கேற்றது.

உற்சாகப் பெருவிழா

ஏப்ரல் 6மாலையில், ஏதென்ஸ் நகரில் ஃபலீரோ காம்ப்ளக்சிலுள்ள பிரம்மாண்ட விளையாட்டரங்கில் துவக்கவிழா நடை பெற்றது. விளையாட்டரங்கின் இருப்பிடங்கள் நிரம்பி வழிய, ஏதென்ஸ் நகரின் தொழிலாளர் களும், இளைஞர்களும் அணிதிரண்டனர். சம்மேளனத்தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் தலைமையில் பிரதிநிதிகள், அரங் கிற்குள் அணிவகுத்து வர, உரக்க கோஷங் களை எழுப்பியும், பதாகைகளை அசைத்தும் வரவேற்ற நிகழ்வு உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்து சேர்ந்த பிரதி நிதிகளை பெரிதும் உணர்ச்சிவசப்படுத் தியது.

பாரம்பரிய இசைப்பாடல்களுக்குப்பின், சம்மேளனத்தின் 65 ஆண்டுகால வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பை, பிரம்மாண்ட திரைகளில் ஒளிபரப்பினார்கள்.

வர்க்கப்போராட்டம், சர்வதேச ஒரு மைப்பாடு, ஜனநாயகம்,ஒற்றுமை ஆகிய வற்றோடு, நவீன செயல்பாட்டு முறை யையும் இணைத்த கோஷங்கள் எங்கும் எதிரொலித்தன. விழாமேடையிலும், அரங்கம் முழுவதும் பன்மொழிகளில் இதே கோஷங்கள் பொறித்த பதாகைகள் நிரம்பியிருந்தன.

பங்கேற்ற பிரதிநிதிகள் பற்றிய சுருக்க மான விபரங்களை இந்தியாவிலிருந்து வந்த பெண் பிரதிநிதியொருவர் அறிவிக்க, தென் அமெரிக்க பிரதிநிதியொருவர் இரங்கல் - அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிய, சம் மேளனத்தலைவர் தலைமையில் சம் மேளனத் தலைமைக்குழு உறுப்பினர்களு டன் மக்கள் சீனத்தின் ஏசிஎப்டியு (ஹஊகுகூரு) பிரதிநிதி மற்றும் சிஐடியுவின் அகில இந்திய செயலாளர் டாக்டர் கே.ஹேமலதா உட்பட தலைமைக்குழுவினர் பொறுப் பேற்றனர்.

கிரேக்கத்தின் ‘பாமே’யின் பொதுச்செய லாளர் ஜார்ஜ் பெரோஸ் வரவேற்புரையாற் றினார். சம்மேளனத்தலைவரும் சிரியா நாட்டைச் சார்ந்தவருமான முகமது ஷாபான் அசூஸ் தலைமை உரையாற்றினார். துவக்க உரையாற்றிய பொதுச்செயலாளர், ‘ஏகாதி பத்தியத்திற்கும் மூலதனத்திற்கும் எதிராக நமது ஒன்றுபட்ட போராட்டத்தை முன் னெடுத்துச்செல்ல இந்த மாநாடு வர்க்கப் பார்வையுடன், ஜனநாயகப்பூர்வமாகவும் பகிரங்கத்தன்மையுடனும் செயல்படும்’ என் பதை தெளிவுப்படுத்தினார்.

கிரேக்க நாட்டின் துணை ஜனாதிபதி, அட்டிக் எனும் மாநிலத்தின் ஆளுனர், ஏதென்ஸ் மற்றும் பியரஸ் நகர மேயர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

கிரேக்க ஜனாதிபதியின் வாழ்த்துரை படிக்கப்பட்டது. வேலையின்மையும், கடுமை யான பாதுகாப்பின்மையும் நிறைந்த சூழலை கிரேக்கம் சந்தித்து வருவதாக அவரது வாழ்த் துச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

பிரதிநிதிகள் மாநாடு

சம்மேளனத்தலைவருடன், பல்வேறு நாடுகளைச் சார்ந்த தலைவர்களும் உள் ளடங்கிய தலைமைக்குழு ஒவ்வொரு நாளும் தேர்வு செய்யப்பட்டது.

பிரதிநிதிகள் மாநாட்டின் துவக்க நாளில் சிஐடியுவின் சார்பில் ஏ.கே.பத்மநாபன் தலை மைக்குழுவில் இடம் பெற்றார். தொடர் நிகழ்வு களில் சிஐடியு துணைத்தலைவர் சுகுமால் சென், எஸ்.தேவ்ராய் ஆகியோரும் தலை மைக்குழுக்களில் இடம்பெற்றனர்.

கடந்த மாநாட்டுக்குப்பின் நடைபெற்ற பணிகள் பற்றிய அறிக்கை ஏழு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. ஆங் கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், அரபு, ரஷியன், போர்த்துகீஸ் மற்றும் கிரேக்க மொழிகளில் மாநாட்டு நிகழ்ச்சிகள் உடனுக்குடன் மொழி பெயர்க்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது. எவ்வித சிரமமும் இன்றி, பிரதிநிதிகள் அனை வரும் மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க முடிந்தது சிறப்பானதாகும்.

நடைபெற்ற பணிகள் பற்றிய அறிக்கை யின் சுருக்கம், வீடியோ காட்சியாக, பெரிய திரையில் ஒளிபரப்பினர்.

மாநாட்டின் அடிப்படை ஆவணமாக “ஏதென்ஸ் பிரகடனம்”(ஹகூழநுசூளு ஞஹஊகூ) பொதுச் செயலாளரால் முன்மொழியப்பட்டது.

இந்த பிரகடனத்தின் நகல் முன்கூட் டியே வெளியிடப்பட்டு, உலகம் முழுவது மிருந்தும் 1085 ஆலோசனைகள் கிடைக்கப் பெற்றதை குறிப்பிட்ட அவர், பிரதிநிதிகள் ஆக் கப்பூர்வ விவாதத்தின் மூலம் ஆவணத்தை வலுப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

சர்வதேச பொருளாதார நெருக்கடி, தொழி லாளர் மற்றும் மக்கள் மீதான தாக்கங்கள், அதையொட்டி நடைபெறும் போராட்டங் களின் தன்மைகள், திட்டமிட்டும் ஒருமுகப் படுத்தப்பட்டும் போராட்டங்களை நடத்த வேண்டியதன் அவசியம், முற்றிவரும் தொழி லாளர் பிரச்சனைகளை சந்திப்பதற்கான வழி முறைகள், வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம், பெண்கள், இளை ஞர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களையும் திரட்டுதல், பிறநாடுகளிலிருந்து வரும் தொழி லாளர்களை திரட்டுதல் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங் களை வலுப்படுத்தல் என முக்கிய அம்சங் களை ஆவணம் முன்வைத்தது.

இதையெல்லாம் நிறைவேற்ற, சம்மே ளனத்தை வலுப்படுத்துவது, பிராந்திய வாரி யாகவும் தொழில் வாரியாகவுமான செயல் பாடுகளை விரிவாக்குவது, உறுதிப்படுத்துவது என கடமைகளை ஆவணம் வலியுறுத்தியது.

வாழ்த்துரைகள்

ஐ.நா.சபையின் தலைமைச்செயலாளர் பான்கிமூன் மற்றும் கியூபா, பொலிவியா, சிரியா, பாலஸ்தீனம், சைப்பரஸ் நாட்டு ஜனாதிபதிகள் வாழ்த்துச்செய்திகளை அனுப்பியிருந்தனர்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐடுடீ), சீனத்தொழிற்சங்க சம்மேளனம் (ஹஊகுகூரு), ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளின் தொழிற்சங்க கூட்டமைப்புகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் உலக அமைப்புகள் மற்றும் உலக அமைதி கவுன்சில் சார்பில் வாழ்த்துரைகள் வழங்கப்பட்டன.

விவாதம்

மாநாட்டு பிரகடனத்தின் மீதான விவாதம், அனைத்து கண்டங்களிலும், அனைத்து நாடுகளிலும் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்தியம்பும் அரங்கமாக இருந்தது. நாடுகளும், மொழிகளும் அமைப்பு களும் வேறுபட்டாலும் நூற்றுக்கு மேற்பட் டோரின் பேச்சுகள், இன்றைய முதலாளித் துவ நெருக்கடி மற்றும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களின் பொதுத்தன்மையை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

வேலையின்மை, ஆட்குறைப்பு, ஊதிய வெட்டு, ஓய்வூதியம் பறிப்பு, வேலைநேர அதிகரிப்பு, ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு, தொழிற்சங்க உரிமை-கூட்டுப்பேர உரிமை பறிப்பு என துவங்கி தொழிற்சங்க தலைவர் கள், ஊழியர்களை சிறைப்படுத்துதல், படு கொலைகள் வரையிலுமான பொதுப்பிரச் சனைகளும், ஆர்ப்பாட்டங்கள்,பேரணிகள், அரங்கவாரி மற்றும் நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றுடன் மூன்றுமுறை சர்வதேச கிளர்ச்சி தினங்கள் அனுசரிக்கப் பட்ட விபரங்களும் இந்த பொதுத்தன்மையை வெளிப்படுத்தியது.

சிஐடியுவின் சார்பில் ஏ.கே.பத்மநாபன், எரிசக்திக்கான சர்வதேச தொழிற்சங்க கூட் டமைப்பின் சார்பில் அதன் தலைவரும், சிஐ டியு செயலாளருமான எஸ்.தேவ்ராய் உட்பட இந்தியாவிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் 6 பேர் விவாதத்தில் பங்கேற்றனர்.

பெண் பிரதிநிதிகள் கூட்டம்

உழைக்கும் பெண்களின் ஒருங்கிணைப்பை உலகளாவிய முறையில் வலுப்படுத்தும் நோக் கோடு, பெண் பிரதிநிதிகளின் கூட்டம் தனி யாக நடத்தப்பட்டு, தொடர் நடவடிக்கை களுக்கு திட்டமிடப்பட்டது. மொத்தமுள்ள பிரதிநிதிகளில் பெண்கள் 30சதவீதமாகும்.

இதேபோன்று ஆசிய-பசிபிக், ஐரோப்பா, அமெரிக்கா,ஆப்பிரிக்கா என மண்டல வாரி யாக அனைத்து பிரதிநிதிகள் கூட்டங்களும் நடைபெற்றன. பொதுச்செயலாளர் தொகுப்பு ரையோடு பிரகடனம் ஏற்கப்பட்டது.

சம்மேளன விதிகளிலும், நோக்கம் குறித்த முன்னுரை குறிப்பிலும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டதை புதிய செயற்குழு இறுதிப்படுத்துவதென முடிவாயிற்று.

புதிய நிர்வாகிகள்

42 உறுப்பினர்கள் கொண்ட தலைமைக் குழுதான் சம்மேளனத்தின் உயரிய அமைப்பு. தலைமைக்குழு தேர்வுக்கு முன் பொதுச்செய லாளராக ஜார்ஜ் மாவ்ரிகோஸின் வேட்புமனு மட்டும் தான் தாக்கலாகியிருந்ததால், அவர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். தலைவ ராக, தற்போதைய தலைவர் முகமது ஷாபான் அசூஸ் அவர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக் கப்பட்டார்.

மேலும், தலைமைக்குழுவிற்காக 40 பெயர்கள் அறிவிக்கப்பட்டன. 40பேர்களை தேர்வு செய்ய வேண்டுமென்றாலும், ரகசிய வாக்குகளை பதிவு செய்யும் முறை அமலாக் கப்பட்டது. 5பேர் கொண்ட நிதி ஆய்வுக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது. தலைமைக் குழுவில் 5 பேர் பெண்கள்.

இவர்களுடன் தொழில்வாரி கூட்டமைப்பு களின் பொதுச்செயலாளர்களும், மண்டல அலுவலக பொறுப்பாளர்களும் தலைமைக் குழு கூட்டங்களுக்கு அழைக்கப்படுவார்கள். கட்டுமானத் தொழிலுக்கான உலக கூட்ட மைப்பின் பொதுச்செயலாளராகியுள்ள தீ பஞ்சன் சக்கரவர்த்தி இதில் இடம் பெறுகிறார்.

புதிய தலைமைக்குழு கூடி 17துணைத் தலைவர்களையும், 7பேர் கொண்ட செயற் குகுழுவையும் தேர்வு செய்தது. செயற்குழு வில் கியூபாவிலிருந்துள்ள பெண் தோழர் ஓசீரிஸ் ஓவிடோ தொடர்கிறார்.

சிஐடியுவிலிருந்து ஏ.கே.பத்மநாபன் துணைத்தலைவராகவும், எஸ்.தேவ்ராய் செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். ஏஐடியுசியிலிருந்து தலைவர் பிரமோத் கோகோய் துணைத்தலைவராகவும், எச்.மகாதேவன் செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏஐபிஈஏ பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் நிதிக்குழு உறுப்பினராக உள்ளார்.

ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெ ரிக்கா, ஆஸ்திரேலிய கண்டங்களின் 101 நாடு களிலிருந்து பங்கேற்ற 881 பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் புதிய உணர்வோடும் போராட்ட வேகத்தோடும் உணர்ச்சி பொங்க சர்வதேச கீதம், பல மொழிகளிலுமாய் முழங்க, 16வது உலக தொழிற்சங்க மாநாடு சிறப்புற நிறைவு பெற்றது.

முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனங் களுக்கு எதிராக, சுரண்டலற்ற புதிய உலக மெனும் உலக தொழிற்சங்க சம்மேளன முழக் கம், வரும் நாட்களில் வீறுகொண்டு உலக மெங்கும் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கை எங்கும் பிரதிபலித்தது.

முரசொலி கட்டுரையாளரின் குதர்க்கம்

posted Apr 26, 2011, 2:59 AM by theekkathir news   [ updated Apr 26, 2011, 3:00 AM ]

-க.திருச்செல்வன்

முரசொலியில் திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பரமத்தி சண் முகம், தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கு மே நாள் கொண்டாடத் தகுதி உண்டா என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை யில், “திமுகவும், அதன் தொழிற்சங்க அமைப்பான தொமுசவும் கொண்டாட இருக்கிறது. மற்ற தொழிற்சங்க அமைப்பு களும் கொண்டாடலாம். ஆனால் கம்யூ னிஸ்டுகள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு பொது மக்களிடையே மே நாள் விழாவின் சிறப்பை விளக்கிடப் போகி றார்கள்” என்று குதர்க்கமாகக் கேட்டுள் ளார். கம்யூனிஸ்டுகளுக்கு இருப்பது ஒரு முகம்தான். கட்டுரையாளரின் கட் சிக்கு சர்க்காரியா கமிஷன் முதல் 2ஜி வரை எத்தனையோ முகங்கள் இருக் கின்றன.

யார் ஆட்சியில் இருந்தாலும் தொழி லாளருக்கு எதிரான நடவடிக்கை களைக் கண்டித்து கம்யூனிஸ்டுகள் தான் பெருமளவில் போராட்டங்களை நடத்தியவர்கள் என்பதை தமிழ்நாடு மக் கள் நன் கறிவார்கள்.

திமுக தலைவரின் 5வது முறை ஆட்சியில்தான் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான சங்கம் வைக் கும் உரிமை அடியோடு மறுக்கப்பட்டது. அதனையும் மீறி சங்கம் வைத்தவர்கள் வேலைநீக்கம், இடைநீக்கம், ஊர்மாற்றம், சம்பளப் பிடித்தம் போன்ற தாக்குதல் களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள் ளாகினர். 500க்கும் மேற்பட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு உட்பட பொய் வழக்கு புனையப்பட்டது.

தொழிலாளர்களுக்கு எதிராக முத லாளிகளால் ஏவப்பட்ட பழிவாங்கல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறை, முதலாளிகளின் நலத்துறையாக மாற்றப்பட்டது. கடந்த காலமரபுகள், வாக்குறுதிகள் என அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட் டது.

சமரசப் பேச்சுவார்த்தைக்கு முத லாளிகள் வருவார்களாம். ஆனால் தொழிற் சங்கத்தோடு பேசமாட்டார் களாம். முடிவு எடுக்கமாட்டார்களாம். முதலாளிகளின் முகம் கோணாமல் பார்த்துக்கொள்வார் களாம். இது தானே திமுக ஆட்சியில் தொழிலாளர் நல லட்ச ணமாக இருந்தது.

தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் என மார்தட்டிக்கொள்ளும் திமுக, இந்த தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழி லாளர்கள் காண்ட்ராக்ட், கேசுவல், தினக் கூலி என்ற பேராலே உழைப்புச் சுரண் டலை அனுமதிக்கிற ஆட்சியாகவே தான் இருந்தது.

பாக்ஸ்கான் தொழிலாளர்களின் போராட்டத்தின்போது பொய்வழக்குகள் புனையப்பட்டு, சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் மற்றும் ஏதுமறியா இளந்தொழிலாளர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்து, அவர்கள் பிணையில் வந்துவிடுவார் களே என்று எண்ணி, மேலும் அவர்கள் மீது வழக்கு புனைந்து சிறைச்சாலை யிலேயே அடைத்துவைக்க நீதிமன்றத் திற்கு கைவிலங்குடன் அழைத்து வரப் பட்டதும், சட்டசபையில் முதலமைச் சரே, அவர்கள் 40 கார்களை அடித்து சேதப்படுத்தினார்கள் என்ற கொஞ்சமும் உண்மையில்லாத, நடைபெறாத நிகழ்ச் சியை நடந்ததாக பதிவு செய்து, தொழிலா ளர்களை சமூக விரோதிகள் என சித் தரிக்க முயற்சித்த திமுக தான் மேதினம் கொண்டாட தகுதியுடையதாக கட்டுரை யாளர் கருதுகிறாரோ என்ற ஐயம் ஏற் படுகிறது.

பாக்ஸ்கானில் செயல்படும் திமுக வின் தொழிற்சங்கமான தொ.மு.ச.வை இன்னொரு முதலாளியாகவே தொழி லாளர்கள் பார்க்கின்றனரே சென்னை உயர்நீதிமன்றம் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்க தேர்தலை நடத்த வேண்டுமென்று தொழிலாளர்துறைக்கு உத்தரவிட்டும், அதை உதாசீனப்படுத் தியதுதான் திமுகவின் தொழிலாளர் நலன் காக்கும் கொள்கையா?

முதலாளிகளின் மனம் நோகாமல் இருப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் என்ற பேரில் தொழிலாளர் சட்டங் களை புதைகுழிக்குள் போட்டு மூடி மறைத்தது. அவர்கள் செய்யக்கூடிய தொ ழிலாளர் விரோத, தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளை வாய்மூடி, கைகட்டி வேடிக்கை பார்த்த பெருமை திமுக ஆட் சிக்குத்தான் உண்டு.

ரகசிய வாக்கெடுப்பின் மூலம் சங்க அங்கீகாரத்திற்கான சட்டத்திருத்த மசோ தா ஜனாதிபதியின் ஒப்புதலுக்குத் அனுப் பி, நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போட் ட அரசு தனது கட்சி அரசு என்பது கட்டு ரையாளருக்கு தெரியாமல் இருக்குமா?

இந்திய தொழிலாளர் மாநாட்டில், தொமுச சார்பில் கலந்துகொண்ட பிரதி நிதிகள், வேலைநேரத்தை 8 மணிநேரம் என்பதை கூடுதலாக்க வேண்டும் என்று முதலாளிகளின் குரலையே பிரதி பலித்தார்களே, இதுவல்லவோ தொழி லாளர் நலன் காக்கும் தொழிற்சங்கம்?

25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றிவரும் சத்துணவு, அங்கன் வாடி ஊழியர்கள், 8 ஆண்டுகளாக பணி யாற்றிவரும் டாஸ்மாக் ஊழியர்கள் நடத் திய போராட்டங்களை அதிகார ஆணவத் தோடு அடக்கியதையும், அரசு ஊழியர் களை புதிய சட்டமன்ற வளாகத்திற்கு அருகிலேயே அடித்து உதைத்ததும் திமுக ஆட்சியின் வேதனையாகவே தெரிகிறது. இவர்களோடு உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், அரசு போக்குவரத்து தினக்கூலி தொழிலாளர் என அரசு நிறு வனங்களில் பணியாற்றும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொகுப் பூதியம், மதிப் பூதியம் என்ற பெயராலே பணிநிரந்தரமற்று அத்தக்கூலிகளாகவே வைத்திருப்பதுதான் திமுக ஆட்சியின் சாதனையா?

தேர்தலில் தோல்வி உறுதி என்ற எரிச்சலில் மேதினத்iத் சாக்காக வைத்து கம்யூனிஸ்டுகளை இகழ்ந்து, அவரது கட்சித் தலைமையின் கவனத் iத் ஈர்ப்பதற்காக எழுதியுள்ள தாகவே இந்த கட்டுரையை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கடமையைத் தட்டிக் கழிக்கும் அரசுகள்

posted Apr 24, 2011, 9:41 AM by theekkathir news   [ updated Apr 24, 2011, 9:43 AM ]

-எஸ்.நூர்முகம்மது

தினமும் அலைகடலில் உயிரைப் பணயம் வைத்து மீன்பிடி தொழில் செய்வதற் காக பயணம் செய்து கோடிக்கணக்கான அந்நியச் செலவாணியைப் பெற்றுத் தருபவர் கள் மீனவர்கள். மீனவர்களின் வாழ்க்கை யைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டிய ‘செம்மீன்’ என்ற மலையாளத் திரைப்படமும், ‘படகோட்டி’ திரைப்பட பாடலும் காலம் கடந் தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் ஆரம் பித்த பின்னர் தமிழக மீனவர்களின் கடல் வாழ்க்கை நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அன்றாடம் மீனவர்கள் காரணமின்றி இலங் கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப் படுவதும், சித்ரவதைச் செய்யப்படுவதும், மீன வர்கள் குடும்பங்கள், குடும்பத் தலைவனை இழந்து, தந்தையை இழந்து பரிதவிக்கும் நிலையும் தொடர்கதையாகவே இருந்துள் ளன. அப்போதெல்லாம் இலங்கையில் உள் நாட்டுப் போர் நடந்து வந்ததால் கடலில் ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவே, இலங்கை கடற்படை கடலில் எல்லை மீறிச் செல்லும் மீனவர்களையும் அடையாளம் தெரியாமல் சுட்டுவிடுகிறது என்று காரணம் கூறப்பட்டு வந்தது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடி வுக்கு வந்து விட்டது. இனியாவது தமிழக மீன வர்களின் துயர வாழ்வுக்கு முடிவு ஏற்படும் என அனைவரும் நம்பினோம். ஆனால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் இறப்பதும், உடலுறுப்புகளை இழந்து குற்றுயிரும், குலை உயிருமாகத் திரும்புவதும் நின்றபாடில்லை. ஊழல் குற்றச்சாட்டின் பேரில் குடும்ப உறுப்பினர் களுக்கு எதிராகச் சட்டப்படியான நடவடிக்கை வரும் சூழ்நிலையிலும், குடும்பத்தின ருக்கு மத்திய அமைச்சரவையில் விரும்பிய அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் போதும் மத்திய அரசுக்கு நெருக்கடியும், நிர்ப்பந்தமும் செலுத்த தயங்காத தமிழக முதல்வர், தங்கள் கட்சியும் பங்கேற்றுள்ள மத்திய அரசின் மெத்தனத்தால் மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்து, மீன வர்கள் குடும்பங்கள் துயரத்திற்கு உள்ளாகும் போதெல்லாம், மக்களின் கவனத்தைத் திசை திருப்ப பிரதமருக்குக் கடிதம் எழுதுவது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதுவது என்பதோடு தனது கடமை முடிந்து விட்டது என இருந்து விடுகிறார். மத்திய அரசு அதிகாரிகளும் இனி மேல் இத்தகைய தாக்குதல் சம்பவம் நடக் காது என்று சப்பைக்கட்டு கட்டி, தங்கள் கட மையை முடித்து விடுகின்றனர். ஆனால் துயரச் சம்பவங்களோ தொடர்ந்து கொண்டே தான் உள்ளன.

ஏப்ரல் மாதம் 2 ம் தேதி, வழக்கம் போல் இராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். ஒரு படகில் அதன் உரிமையாளரும், மீன்பிடி தொழிலாளியுமான விக்டஸ் என்பவருடன் மாரி முத்து, அந்தோ ணிராஜ், ஜான்பால் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்கின்றனர். சாதா ரணமாக அவர்கள் அனைவரும் மீன்களுடன் 3 ம் தேதி பகலில் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் 3ம் தேதி வரை கரைக்கு வரவில்லை. மறுநாளும் வராததால் குடும் பத்தினர் பதட்டம் அடைகின்றனர். அவர் களும், அங்குள்ள பிற மீனவர்களும் காணா மல் போன மீனவர்களைத் தேடிச் செல்ல முற்படுகின்றனர். ஏதேனும் விபத்தினாலோ, அல்லது கடல் சீற்றத்தினாலோ கடலில் சிக்கியிருந்தால் அவர்களை மீட்டு வரலாம் என மீனவர்கள் கடலுக்குள் விரைகின்றனர். ஆனால் கடலில் ஒரு பகுதியே இந்திய கடல் எல்லை. கடல் சீற்றம், புயல் உட்பட ஏதேனும் காரணத்தால் எல்லைத் தாண்டினால் இலங்கை கடல் எல்லைக்குள் சென்று தான் தேட வேண்டும். ஆனால் அதற்கு அனுமதி பெறுவது என்பதே மிகவும் சிரமமான ஒன்று. தமிழக மீனவர் நல உதவி இயக்குநர் அலுவ லகத்தில் அனுமதி பெற்றாலும் இந்திய கட லோரக் காவல்படை அனுமதிப்பதில்லை. எல்லை தாண்டினால் இலங்கை கடற்படை யினரின் ரோந்து. அவர்களது துப்பாக்கியின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். காணாமல் போன மீனவர்களைத் தேடிச் செல்லவோ, அவர்களைக் கண்டுபிடித்துத் தரவோ இந் திய கடலோரக் காவல்படை எவ்வித உதவி யும் செய்வதில்லை என்று குமுறுகின்றனர் மீனவர்கள். ஒரு வாரம் கடந்த பின்னர் தான் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் ஒரு தகவல் கிடைக்கிறது. இலங்கை டெல்ப் தீவின் அருகில் ஒரு உடல் கரை ஒதுங்கியதாகவும், அதனை அடையாளம் காண வேண்டும் என்றும் கூறப்பட்ட அடிப் படையில், ஒரு மீனவர் குழு இலங்கை செல் கிறது. ஆனால் அவர்கள் அங்கு சென்று அந்த உடலைக் காண்பதற்கு முன்னர் கடும் இடர்பாடுகள், சோதனைகள். இலங்கை கடற்படையினரின் கடுமையான நெருக்கு தல்கள். இதன் பின்னரே அந்த உடலைத் தூரத்திலிருந்து பார்க்க முடிந்தது. அந்த உடல் விக்டஸ் என்ற மீனவரின் உடல் தான் என்று அடையாளம் காணப்பட்டது. ஆனால் அந்த உடல் மிகவும் உருக்குலைந்து காணப் பட்டது. மேலும் கடுமையான காயங்களும் காணப்பட்டன. யாழ்ப்பாண மருத்துவர்களால் பிரேத பரிசோதனைச் செய்யப்பட்டு அங் கேயே இறுதிச் சடங்கு நடந்தது. பிரேத பரி சோதனை செய்த மருத்துவர்கள், சித்ர வதைச் செய்து, கொன்று கடலில் வீசப் பட்டிருக்க வேண்டும் என்று தங்களது அறிக் கையில் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதர மீனவர்கள் குறித்து தகவல் இல்லை. ஆனால் அங்கு சென்ற மீனவர்கள் அங்கு மேலும் 3 உடல்கள் இருப்பதாக பேசிக் கொண்டார்கள் என்றும், ஆனால் தாங்கள் கேட்ட போது மறுத்துவிட்டதாகவும் கூறு கின்றார், அங்கு சென்ற ராபின் என்ற மீனவர். 12ம் தேதி அந்தோணி ராஜ் என்பவரின் உடல் சோலியாக்குடியிலும், 14ம் தேதி ஜான்பால் என்பவரின் உடல் காசிப்பட்டினத்திலும் , ஏப்ரல் 16 ம் தேதி மாரிமுத்து என்ற மீனவரின் உடல் கோட்டைப்பட்டினத்திலும் கரை ஒதுங்கின. இந்த உடல்கள் அனைத்தும் கடு மையான சித்ரவதைக்கு உள்ளாகி உருக் குலைந்த நிலையில் தான் கண்டெடுக் கப்பட்டுள்ளன. இதில் மாரிமுத்து என்ப வரின் உடல் தலையில்லாமல் தான் கரை ஒதுங்கியுள்ளது.

இச்செய்திகள் வந்தவுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு மீனவர்களை இழந்த குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறவும், விபரங்களை அறிந்து வரவும் ஒரு குழுவை அனுப்ப முடிவு செய்தது. அந்த குழுவில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகம்மது, கோயம்புத்தூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் ஆகியோர் இடம் பெற்றிருந் தனர். அக்குழுவினருடன் மீன்பிடி தொழிலா ளர் சங்க (சி.ஐ.டி.யு) மாநில தலைவர் வழக் கறிஞர் செலஸ்டின், மாநில பொதுச் செய லாளர் கருணாநிதி, செயலாளர் எஸ். அந் தோணி, மாவட்ட செயலாளர் கருணா மூர்த்தி, கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், சிவாஜி, முத்துராமு, இராமநாதபுரம் தாலுகா செயலாளர் கருணா கரன் உட்பட பல தோழர்கள் வந்திருந்தனர்.

முதலில் விக்டஸ் என்பவரின் வீட்டிற் குச் சென்றிருந்தோம். அவர் தான் படகின் உரிமையாளர். அவரும் மீன்பிடிதொழிலில் ஈடுபட்டு வந்தார். அவர் தான் மற்ற மூன்று மீன்பிடி தொழிலாளர்களையும் அழைத்துச் சென்றவர். எனவே மீனவர்களைத் தேடும் பணியில் அவரது குடும்பத்தினரே ஈடுபட வேண்டி வந்தது. ரூ.10 லட்சத்திற்கும் அதிக மான மதிப்புள்ள படகு இது வரையிலும் கிடைக்கவில்லை. அது குறித்த எந்த தகவ லும் இல்லை. தேடும் பணியில் பல லட்சம் ரூபாயைச் செலவழித்துள்ளனர். அவரது மனைவி 30 வயது விங்கிஸ்டா துக்கத்தில் வாயடைத்து நின்றார். எதுவும் கூறும் நிலை யில் அவர் இல்லை. குடும்பத் தலைவரையும், வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த படகையும், பணத்தையும் இழந்து நிற்கிறது இந்தக் குடும்பம். அவருக்கு பெரில் எனும் 5 வயது பெண் குழந்தை உள்ளது. தந்தையை இழந்த சோகத்தைக் கூட புரிந்து கொள்ள இயலாத பருவம். அடுத்து ஜான்பால் வீட்டிற்குச் சென்றோம். மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பம். மனைவி ஜெனிஸ்டா கதறினார். அவருக்கு 8 முதல் 1 வயது வரையுள்ள நான்கு குழந்தைகள். இவர்களை எப்படி வளர்க்கப் போகிறேன் என்ற கதறல் அனைவரையும் கலங்கச் செய்தது. நாங்கள் அங்கு சென்ற போது ஒரு குழந்தை தரையில் அமர்ந்து, தங்கள் குடிசையின் முன் ஒரு குவளையில் வெறும் சாதத்தை அள்ளி சாப்பிட்டுக் கொண் டிருந்தது. கல்லையும் கரையச் செய்யும் காட்சி அது. ஜான்பால் உடல் ஆண் உறுப்பு இன்றியே கிடைத்ததாகக் கூறினர். அடுத்து அந்தோணி ராஜ் என்பவரின் வீட்டிற்குச் சென்றோம். அவரது மனைவி சாலியா 4 வயது மகள் ரெமிலாயுடன் கடும் சோகத்தில் உறைந்து கிடந்தார். ஆட்சியாளர்கள் அளித்த நிவார ணமோ, வேறு சிலர் வழங்கிய உதவியோ அந்த குடும்பங்களின் சோகத் துக்கு மருந்தா காது. இழப்புக்கு ஈடாகாது. மாறாக அனைத் தையும் இழந்து கையறு நிலையில் தான் இக் குடும்பங்கள் சோகத்தில் மூழ்கிக் கிடந்தன.

சக மீனவர்கள் கூறிய சம்பவங்கள் மிகவும் பரிதாபம். நீண்ட காலமாக இத்தகைய தாக்குதல்களுக்கு மத்தியில் தான் அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமான மீன்பிடி தொழிலைச் செய்து வருகின்றனர். மத்திய அரசோ, மாநில அரசோ அவர்களுக்கு எவ் வித பாதுகாப்பும் வழங்குவதில்லை. ஏதாவது அசம்பாவிதம் நடந்து, மக்கள் மத்தியில் கோபமும், ஆத்திரமும் எழும் போது, ஏதோ சில நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறுவ தோடு சரி. எவ்வித உத்தரவாதமும் இல்லாத வாழ்க்கையைத் தான் அவர்கள் நடத்தி வரு கின்றனர். எனவே தான் கடலில் மீன்பிடிக் கச் செல்லும் மீனவர்களின் உயிருக்கு மத்திய-மாநில அரசுகள் உரிய உத்தரவாதம் அளிக்க வேண்டும். மேலும் கடலோரக் காவல்படையும், இலங்கையில் உள்ள இந்தியதூதரகமும் இந்திய மீனவர்களுக்கு அனுசரணையான அணுகுமுறையைக் கையாள வேண்டும். படகை இழந்துள்ள குடும்பத்திற்கு அதற்கான உரிய இழப்பீட்டை வழங்குவதோடு, வருவாய் ஈட்டித் தந்த கணவரை இழந்து கைக்குழந்தைகளுடன் கண்ணீரில் கரைந்து வரும் இளம் விதவை களுக்கு அரசுப்பணி வழங்கப்பட வேண்டும். வெறும் வெத்து வேட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றும் வழக்கத் தைக் கைவிட்டு, மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் கண்ணீரை நிரந்தரமாகத் துடைக்கும் வகையில் உருப்படியான நடவ டிக்கைகளை எடுக்க வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.

வரவேற்கத்தக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பு

posted Apr 23, 2011, 8:14 PM by theekkathir news   [ updated Apr 23, 2011, 8:15 PM ]

கட்டப்பஞ்சாயத்தைக் கண் டித்தும், கட்டப்பஞ்சாயத் துக்கு நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ துணைபோகும் மாவட்ட ஆட்சியர்/மாவட்டக் காவல் கண் காணிப்பாளர்கள் இடைநீக்கம் செய் யப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித் ததைப் பாராட்டியும் வரவேற்றும் ‘தி ஆசியன் ஏஜ்’ நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது. அதன் விவரம் வரு மாறு:-

மாவட்ட அளவில் கட்டப் பஞ்சாயத்து என்ற பெயரில் நடைபெறும் கொலைபாதகச் செயல்களைத் தடுத்திட எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்ளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டக் காவல்துறையைக் கண்டித்தும், அதற்குள்ள பொறுப்புகளைச் சுட்டிக்காட்டியும் உச்ச நீதிமன்றம் முதன்முறையாக உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது. பாரம்பரியப் பழக்க வழக்கம் என்ற பெயரில் சாதி வெறியர்கள் மேற்கொள்ளும் கிரிமினல் நடவடிக்கைகளை, காதல் மணம் புரியும் அப்பாவி இளைஞர்களையும், இளம்பெண்களையும் பட்டப்பகலில் படுகொலை செய்வதைக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொள்ளும் போக்கை கடுமையாகச் சாடியுள்ளது. இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை எந்தவொரு நாகரிகச் சமுதாயமும் ஏற்றுக் கொள்ள முடியாது. நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாட்டில் உள்ள அனைவரும் நாடாளுமன்றத்தால்/சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்திட உட்பட்டவர்களாவார்கள். இதனை மீறி எவரும் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள முடியாது. தமிழ்நாடு வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், மார்கண்டேய கட்ஜு மற்றும் ஞான் சுதா மிஷ்ரா ஆகியோரடங்கிய டிவிஷன் பெஞ்சு தீர்ப்பளித்திருப்பதுபோல, “கவுரவக் கொலைகளில்” “எந்தவிதமான கவுரவமும் கிடையாது.” இவ்வாறான “சாதி வெறியர்களின் அட்டூழியங்களை’ “முழுமையும் சட்டவிரோதமானவை” என்று குறிப்பிட்டு இவற்றை “எவ்விதத் தயவுதாட்சண்யமுமின்றி நசுக்கி அழித்திட வேண்டும்” என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

சமீப காலங்களில் சில அரசியல்வாதிகளே ‘சதி’ என்னும் பெயரால் நடைபெறும் உடன்கட்டைப் பழக்கத்திற்கு வக்காலத்து வாங்கியதையும், அரியானா மாநில முதல்வரே கட்டப்பஞ்சாயத்துக்களுக்கு ஆதரவாக விசித்திரமான முறையில் விளக்கமளித்ததைப் பார்த்தோம். வாக்கு வங்கிகள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அரசியல்வாதிகளில் சிலர் இத்தகைய காட்டுமிராண்டித்தன நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் போக்கு இருந்துவருகிறது. இதனால் எளிய அப்பாவி மக்கள் கடும் அச்ச உணர்வுடன் வாழவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரியானாவில் பிவந்தி மாவட்டத்தில் வன்புணர்ச்சிக் குற்றத்தைப் புரிந்து சிறை சென்ற ஓர் தண்டனைக்கைதி, பரோலில் வெளியேவந்தபோது, தங்கள் கிராமத்தைச் சேர்ந்த தங்கள் உறவினர்களான இரு விதவைப் பெண்களை அவர்கள் ஒழுக்கங்கெட்டவர்கள் என்று கூறி அடித்தே கொன்ற கொடூரச் செயல் நடைபெற்றுள்ளது. இந்தக் கொடுமையை நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் மக்கள் அச்ச உணர்வுடன் வெறும் பார்வையாளர்களாக நின்று பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர். இவ்வாறு கொலை செய்தவன், அதன்பின் கொலையுண்ட பிணத்தின் மீதே எவ்விதப் பதற்றமுமின்றி அமைதியாக உட்கார்ந்து கொண்டு ‘ஏதோ சாதனை படைத்துவிட்டோம் என்ற வெற்றிக் களிப்புடன்’ பீடி குடித்துக் கொண்டிருந்திருக்கிறான். வழக்கம்போல் காவல்துறையினர் இரண்டு மணி நேரம் கழித்து அங்கே வந்திருக்கின்றனர். தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இவ்வழக்கு தொடர்பாகவும், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக துறைசார்ந்த நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் விரிவானமுறையில் வரவேற்கத்தக்கதாகும். சட்டத்தின் ஆட்சியை கீழ்மட்டத்தில் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். அவ்வாறு இல்லையெனில் ஜனநாயகம் குறித்த நம் பேச்சுக்கள் அனைத்தும் வெறும் வேஷமேயாகும்.

தமிழில்: ச.வீரமணி

சிஐடியு, ஏஐடியுசி : மேதினச் சூளுரை

posted Apr 23, 2011, 8:12 PM by theekkathir news   [ updated Apr 23, 2011, 8:13 PM ]

தமிழ்நாட்டில் மே தினத்தை சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் இணைந்து கொண்டாட முடிவு செய்துள்ளன. மே தினத்தை சென்னை நகரிலும் மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் ஊர்வலங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் இரண்டு சங்கங்களின் சார்பில் பங்கேற்கும் தலைவர்கள் பட்டியல் ஏற்கெனவே வெளியாகியுள்ளது.

சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள மேதினச் சூளுரை வருமாறு:

கடுமையான முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியில் உலகம் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் சரியாகிவிடும் என்று சொன்ன ஜோதிடங்கள் எல்லாம் பொய்த்துப் போயின. சரிந்து விழும் நிறுவனங்களை காப்பாற்ற அமெரிக்க அரசும் இதர ஏகாதி பத்திய நாடுகளின் அரசாங்கங்களும் எடுத்த நடவடிக்கைகள் வெற்றிபெற வில்லை.

நெருக்கடி நோயின் மூலகாரணமே முதலாளித்துவ முறைமைதான். அதையே மருந்தாகக் கொடுத்தால், நோய் தீருவது எவ்வாறு சாத்தியம்?

உலகம் முழுவதும் 30 கோடிப்பேர் வேலையிழந்து விட்டனர். பிரிட்டனில் பள்ளிக்கூடத்துக்கு வரும் குழந்தை களில் மூன்றில் ஒருவர் பட்டினியாக வரு வதாகவும், வளர்ச்சிக்கு ஏற்ப காலணி களைப் புதிதாக வாங்க முடியாமல், சிறி தாகிவிட்ட காலணிகளில் கால்களை நுழைப்பதால் புண்ணாகிக் கிடப்பதாக வும், பிரிட்டனின் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

வளர்முக நாடுகளின் மக்களை தள்ளி யது மட்டுமல்ல; வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கையும் அவலநிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டது.

தென்அமெரிக்க மக்கள் வாக்குச்சீட் டைப் பயன்படுத்தி, அராஜக ஆட்சி களைத் தூக்கி எறிந்ததை முந்தைய ஆண்டுகளில் பார்த்தோம். கடந்த ஆண்டில் அரபு உலகம் தீப்பற்றி எரிந்து கொண்டுள்ளது. அரசாங்கத்தை எதிர்த்து, ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமானமாய்ச்சேர்ந்து நின்று வீதிகளில் இறங்கிப்போராடுகின்றனர். அவிழ்த்து விடப்படும் அனைத்து அடக்குமுறை களையும் எதிர்த்து நிற்கிறார்கள். டுனீ ஷியாவில் முதலில் எடுத்த போராட்டம் அரசுப்பொறுப்பில் இருந்தவர்களை அகற்றியது. பின்னர் எகிப்தில் 30 ஆண்டு களாகக் கொடூர ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி முடித்து வைக்கப் பட்டது. லிபியாவின் சர்வாதிகாரியான கடாபியை எதிர்த்த போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. யேமன், சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுக ளிலும் தெருக்கிளர்ச்சிகள் நடக்கின்றன.

தமது பொம்மைகளாக இருந்த சர் வாதிகாரிகள் மக்களின் சுனாமி எழுச்சி யில் காணாமல் போன நிலையில், புதிய பொம்மைகளை நுழைக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் தீவிரமாக முயன்று வரு கிறது. இதற்காக போராடும் மக்களுக்கு ஆதரவு தருவது போல பச்சையாக நடித்து வருகிறது.

அத்தனை அதிகாரங்களையும் தனக் குள்ளேயே முடக்கிவைத்துக்கொள்வதா லும், ஜனநாயக சக்திகளை அடக்கு முறைகளால் ஒடுக்கி வைப்பதாலும், லஞ்ச ஊழல்களால் பெரும் செல்வத் தைக் குவித்து சேமித்து வைத்துக் கொள் வதாலும் ஆட்சியைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள யாராலும் முடியாது என இந்தக் கிளர்ச்சிகள் மெய்ப்பித்து விட்டன.

ஒரு மாதத்திற்கு மேலாக பிரான்ஸை நிலைகுலையச்செய்த பிரெஞ்ச் தொழி லாளர் வேலைநிறுத்தம், ஓய்வூதியம் கோரி நடந்தது. ஸ்பெயின், பெல்ஜியம், இங்கிலாந்து, அமெரிக்கா, கிரீஸ், போர்ச் சுக்கல், ஜெர்மனி, தென்கொரியா என அடுக்கடுக்காக வேலையின்மை, சம்ப ளம், வாழ்க்கை மேம்பாடு கோரி தொழி லாளர்கள் போராடினர். உலகத்தொழிற் சங்க சம்மேளனத்தின் 16வது மாநாடு ஏப்ரல் 6 முதல் 10வரை ஏதென்ஸில் நடைபெற்றது. 106நாடுகளிலிருந்து 881 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலக அளவில் தொழிலாளர் போராட்டமும், தொழிற்சங்க ஒற்றுமையும் அதிகரித்து வருகின்றன.

நம் பாரத தேசத்தில், இந்த ஆண் டுக்கு, ஊழல் ஆண்டு எனப் பெயர் சூட்டி விடலாம் என எண்ணும் வகையில் சிக ரத்தை தொட்ட ஊழல்கள் நடந்துள்ளன.

ஊழல் தடுப்பு ஆணையராக, ஊழல் செய்த பி.ஜே.தாமஸ் என்பவரை அரசு நிய மித்தது. உண்மை வெளிப்பட்டபின்பும், அவர் வெளியேறவில்லை ; கடைசியில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுத்தான் அவர் பதவி பறிக்கப்பட்டது. கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பை, அமைச்சர்களும், அதிகாரி களும், ராணுவ உயர் அதிகாரிகளும் சேர்த்து ஆக்கிரமித்துக்கொண்ட கொடு மையும் உச்சநீதிமன்றத் தலையீட்டா லேயே நடவடிக்கைக்கு ஆளானது.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விற் பனையில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல், அதை மறைக்க அமைச்சர்கள் பேசிய பேச்சுக்கள், அமைச்சர்களை நியமிப்பதில் இடைத்தரகர்களின் ஆதிக் கம் குறித்து வெளியான ஒலிநாடாக்கள், மத்தியஅமைச்சர் ஆ.ராசா வீட்டில் சோத னை, அவரது ராஜினாமா, கைது, சிறை யில் அடைத்தது. தமிழ்நாட்டில் முதல்வர் குடும்பத்தினரே மத்திய புலனாய்வுத் துறையால் விசாரணைக்கு ஆளானது, அவர்களது தொலைக்காட்சி நிறுவனம் சோதனைசெய்யப்பட்டது என பல அத்தி யாயங்கள் கொண்டதாக விரிந்து கொண்டே போகிறது.

இடதுசாரிகள் ஆதரவைத் திரும்ப பெற்றபின்பு, தனது ஆட்சியை நிலைக்கச் செய்ய கோடி கோடியாய் காங்கிரஸ் கட்சி லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங் களும் வெளியாகி இருக்கின்றன.

“இந்த நாட்டில் என்னதான் நடந்து கொண்டு இருக்கிறது” என்று உச்சநீதி மன்றமே திகைத்துக்கேட்கும் அளவுக்கு மத்திய ஆட்சியில் உள்ள கூட்டணி அரசும், அதற்குத்தலைமை ஏற்கும் காங் கிரஸ் கட்சியும் நாட்டை தரம் தாழ்த்தி இழுத்துக்கொண்டு சென்றன.

அதேநேரத்தில் மகளிர் 33சதவீத இட ஒதுக்கீடு மசோதா இன்னமும் நிறைவேற் றப்படவில்லை. உணவுப்பாதுகாப்பு மசோதாவைப் பற்றி ஏராளமாக விவாதித் தும் கூட, இதுவரை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தக்கூட இல்லை.

விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. அடுத்தமாதம் சரியாகிவிடும் என்று அலுக்காமல் பொய் சொல்கிறது அரசாங்கம். பதுக்கல்காரர்களும், கள்ளச் சந்தையினரும் பகிரங்கமாகத் திரிகின்ற னர். வெங்காயவிலை 100 ரூபாயை தாண் டியபோது, ஒரு பதுக்கல்காரனைக்கூட இந்த அரசால் கைதுசெய்ய முடியவில் லை. அவ்வளவு பலவீனமாக இந்திய அரசுஇருக்கிறது.

அதே நேரத்தில் பன்னாட்டு கார்ப் பரேட் நிறுவனங்களுக்கும், உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கும் எண்ணிலடங் காத சலுகைகளை வாரி வழங்கி வருகி றது. ஆனால் ஏழை மக்களின் அவலங் களை நோக்கிக் கண்ணைத் திருப்ப மறுக்கிறது.

மத்திய அரசின் தொழிலாளர் விரோ தக்கொள்கைகளைக் கண்டித்து, ஐஎன் டியுசி உள்ளிட்ட இந்திய தொழிற்சங்கங் கள் இணைந்து போராடி வருகின்றன. இந்தியத் தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கைகளை இந்த ஒற்றுமை தோற்று விக்கிறது. செப்டம்பர் 7ல் நடந்த வேலை நிறுத்தம் இந்தியாவில் மிகப்பெரிய வேலைநிறுத்தமாகும். மார்ச் 5ல் சிறை நிரப்பும் போராட்டத்தில்10லட்சம் தொழி லாளர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அதன் முடிவு தெரிய ஒருமாதக்காலம் காத்தி ருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஓர் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை தந்து, எதிர்த்தரப்பினரை ஆள் பலம் கொண்டு அச்சுறுத்தி, அதிகாரி களைத் தனது விருப்பத்திற்கேற்ப வளைத்து கடந்த ஆண்டுகளில் இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றிபெற் றது. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக் கும் இந்த நடைமுறைக்கு திருமங்கலம் பார்முலா என்று ஊடகங்கள் பெயர் வைத்தன. இந்தப் பொதுத்தேர்தலில் ஊழல் நடைமுறைகளை எதிர்த்து மக்கள் அணிதிரண்டுள்ளனர்.

இந்த பொதுத்தேர்தலிலும் அவ்வாறே நடத்த எத்தனித்ததை,தேர்தல் ஆணை யம் எதிர்த்து நின்றது பாராட்டுக்கு உரிய அம்சமாகும். முன்பு போல பணப்பரிவர்த் தனைகளை பகிரங்கமாக நடத்தமுடியா மல் ஆணையம் தடுத்தது. ஆனாலும் ரக சியமாக “ஓட்டுக்கு துட்டு” தரப்பட்டது. பல கோடி ரூபாய்களை ஆணையம் கைப்பற்றியது. அது ஒரு சிறிய பகுதியே. எனினும் “ஆட்சி கையில் இருந்தால் எதையும் செய்யலாம்; அதை தடுத்து நிறுத்துவதற்கு வழியே இல்லை” என்று ஏங்கி கிடந்த மக்களுக்கு, ஆணையத் தின் நடவடிக்கையால், ஜனநாயகத்தின் மீது மீண்டும் ஒரு பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை காணாத அளவுக்குத் திரண்டு வந்து வாக்களித்தது இதனை நிரூபிக் கிறது.

தமிழகத்தில் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்குஅதிக சலுகைகள் கொடுத்து கதவை திறந்துவிட்டது மாநில அரசு. அதே நேரத்தில் நடுத்தர, சிறு,குறு தொழில்கள் அழிக்கப்பட்டன. வரலாறு காணாத மின்வெட்டு, தொழில்களை நாசப்படுத்திவிட்டது. பாரம்பரியத் தொழில்களான கைத்தறி, பீடி, கயிறு தயா ரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நலிந்து, அதில் பணிபுரிந்தோர் நடுவீதிக்குத் தள் ளப்பட்டனர். நிரந்தரத்தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, எங்கும், எதிலும், ஒப்பந்தத் தொழிலாளர் முறை கொண்டுவரப்பட்டுவிட்டது.

தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான சட்டம், சுமங்கலித் திட்டம் என்ற நவீன பஞ்சாலைக்கொத்தடிமை முறைக்கு தீர்வு, ஒப்பந்தக்கூலிமுறை ஒழிப்பு, தொழிலாளர் சட்டங்களை அமலாக்கு தல், சமவேலைக்கு சம ஊதியம், குறைந் தபட்ச ஊதியத்தை அதிகரித்து கறாராக அமல் செய்தல், அமைப்புசாரா வாரியங் களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக் குத்தீர்வு, நல உதவிகளை அதிகரித்தல் என தமிழகத்தொழிற்சங்க இயக்கம் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற் றாமலேயே தனது ஆட்சியை முடித்து விட்டது தற்போதைய அரசு. புதிய அரசு இவற்றை நிறைவேற்ற வேண்டும். முடக்கி வைக்கப்பட்டு, செயலிழந்து விட்ட தொழிலாளர் துறையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். இல்லாவிடின் தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் தீவிரப்படும்.

ஐந்து மையமான கோரிக்கைகளை முன்வைத்து ஐஎன்டியுசி உட்பட இந்தி யாவின் அனைத்து தொழிற்சங்கங்களும் சேர்ந்து நடத்தும் இயக்கம் மேலும் வலுப் பெற வேண்டும். இந்த ஒற்றுமையை மேலும் முயன்று கட்ட வேண்டும். தொடர்ந்து வரும் கூட்டு இயக்கங்களை அதிக சக்தியுடன் நடத்தவேண்டும். ஏதுமற்றவர்களாய் இருந்த தொழிலாளி வர்க்கம், போராடிப் போராடித்தான் புதிய உரிமைகளை வென்றெடுத்தது. தொழி லாளி வர்க்கத்திற்கு போராடுவதைத் தவிர உத்தரவாதமான வேறு வழிகள் இல்லை.

இந்த உரிமைப்போரில் உலகம் முழு வதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது உயிரை இழந்துள்ளனர். பல லட்சக் கணக்கானவர்கள் தமது உடமைகளை இழந்தனர். அவர்களின் மாபெரும் தியா கங்களைப் பெருமையோடு நினைவு கூர்ந்து, அந்தப்போராளிகளின் வாரிசுக ளாகப் புதிய போராட்டங்களை முன்னெ டுக்க இந்த மே நன்னானில் உறுதி யேற்போம்.

பருவ மாற்றமும் உலக உணவுப் பாதுகாப்பும்

posted Apr 21, 2011, 7:55 PM by theekkathir news   [ updated Apr 21, 2011, 8:00 PM ]

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தின் தேசிய வேளாண் புதுமைத்திட்டத்தின் சார்பில் புதிய வேளாண் வாழ்வு ஆதாரங்கள் பற்றிய குறும்படம் வெளி யீட்டு விழாவும், பருவ மாற்றம் மற்றும் உலக உணவுப் பாதுகாப்பும் என்ற தலைப்பில் அண் மையில் சிறப்புரை நடைபெற்றது. இவ்விழா வில் மணிலாவில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் ஜீக்ளர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பலநூறு வேளாண் நிபுணர்கள், உழவியல் துறை வல்லுநர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பல்துறை பேராசிரியர்கள் கலந்துகொண்ட இச்சிறப்புரையில் அவரின் முக்கிய கருத்து கள் நெல் சாகுபடியில் ஏற்பட்டுள்ள புதிய சவால்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

நெல் சாகுபடியில் புதிய சவால்கள்

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக நெல் சாகுபடி பரப்பளவு குறைந்து வரும் நடைமுறைச் சூழல் கவலை அளிக்கிறது. உலக நெல் உற்பத்தியின் தேவை கூடி வரு கின்ற நிலையில் 2035ம் ஆண்டில் 114 மில்லியன் டன்கள் வரை தேவை என்ற நிலையில், நிலம், நீர் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நெல் சாகுபடியில் இருந்து விலகி வருவது வளரும் நாடுகளில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய உதவாது.

தற்போதைய உற்பத்திச் சூழலை நீடிக்கச் செய்யவே அதிகப்படியான நெல் உற்பத்தி யில் ஈடுபட வேண்டியது அவசியம். இந்தியா வில் தேவையான அளவு நெல் உற்பத்தி இல் லையென்றால் உலகின் உணவுப்பாதுகாப்பே கேள்விக்குறியாகிவிடும். குறிப்பாக பருவ மாற்றம் காரணமாக கடலின் உயரம் அதிகரிக் கும். மழையின் அளவில் பெரிய மாறுபாடுகள் மற்றும் வெப்பத்தின் அளவும் அதிகரிக்கும் போது நெல்லின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்த கைய நடைமுறைச் சூழலில் பருவ மாற்றத் திற்கு ஏற்ப புதிய வறட்சி மற்றும் கடும் வெள் ளம், புயலை தாங்கி வளரும் எதிர்ப்பு ரக உற் பத்தியில் ஈடுபட வேண்டியது அவசியம். தற் போது சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் உலகின் மிகப் பெரிய மரபணு செல்வங்களை பாதுகாத்து வரும் சூழலில் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல், சீதோஷ்ண சூழலை தாங்கி வளரும் புதிய நெல் ரகங்களை வேளாண் நிபுணர்கள் உருவாக்க தேவையான விதை ரகங்களை வழங்கி, வேளாண் ஆராய்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. குறிப் பாக இரவில் வெப்பத்தின் அளவு 1 டிகிரி செல்சியஸ் அளவில் கூடும்போது நெல் உற் பத்தி 10 சதவீதம் வரை குறைவதாக வேளாண் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சுமார் 100 சதவீதம் வரை மகரந்தச் சேர்க்கை பாதிக்கப் படும் நடைமுறைச் சூழலில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை பாதுகாக்கவும், மழையின் அளவு மாறுபடும் போது உற்பத்தி மற்றும் உற் பத்தித் திறனை பாதுகாக்கும் நோக்கில் புதிய உழவியல் தொழில்நுட்பங்கள் உருவாக்கப் பட்டு வருவதாக தெரிவித்தார். தற்போது உள்ள நெல் சாகுபடி முறையில் உள்ள பாரம்பரிய நீர்ப்பாசன முறையில் மாற்றம் செய்து நெல் பயிரின் வேர்களுக்கு மட்டும் தண்ணீர் பாசனம் உள்ளது போன்ற புதிய வேளாண் தொழில் நுட்பங் கள் வாயிலாக நெல்லின் உற்பத்தி, உற்பத்தித் திறன் பாதுகாக்கப்படுவ தாக தெரிவித்தார்.

கடல் சார் நெல் விவசாயம்

தற்போது கடலின் அளவு மட்டம் பெருகி வரும் பருவ மாற்றச் சூழலில் 2050ம் ஆண்டுக ளில் 50 சதவீதம் நெல் உற்பத்தியை தந்து வரும் டெல்டா நிலங்களை கொண்ட வள ரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என் றார். அதற்கு ஏற்ப மாறிவரும் சூழலில் உப்புத் தண்ணீரில் வளரும் புதிய ரக நெல்லை உரு வாக்கும் முயற்சியில் வேளாண் விஞ்ஞானி கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். புதிய ரக உற்பத்தியில் விவசாயிகளை ஈடு படுத்தி மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற்று வருவதாகவும் விவசாயிகளிடையே ஏற்படும் வேளாண் விரிவாக்க முயற்சிகள் ஆக்கப்பூர்வமான பலன்களை தரும் நடை முறைச் சூழலில் தற்போது சிறு விவசாயிகள் இயற்கை சீற்றங்களில் இருந்து பாதிக்காமல் தவிர்க்க சுவர்ணா 1 நெல் ரகம் இந்தியாவில் 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு விவ சாயிகளின் வயல்களில் வேளாண் நிபுணர் களால் சோதிக்கப்பட்டு வருகிறது. தற்போ தைய பருவ மாற்றத்தின் காரணமாக பாதிக் கப்படுவது வளரும் ஆசிய நாடுகளின் ஏழை சிறு மற்றும் குறு விவசாயிகள் என்று தெரி வித்த ராபர்ட் ஜீக்ளர், தற்போதைய நெல் மற்றும் மக்காச்சோளம் மாறி மாறி பயிரிடும் விவசாயிகளின் சாகுபடி முறை காரணமாக நிலத்தின் இயற்கை வளம் குறைந்து வருவ தாகவும் தெரிவித்தார். தங்க அரிசி (ழுடிடனநn சiஉந) வாயிலாக ஊட்டச்சத்து குறைபாடுகளை குழந்தைகளிடம் குறைக்கும் முயற்சிகள் வெற்றி பெற்று வருவதாகவும் வைட்டமின்-ஏ சத்துக்களை இயற்கை முறையில் கிடைக் கச் செய்வது குறித்த ஆராய்ச்சிகளை சர்வ தேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் மேற் கொண்டு வருவதாக தெரிவித்தார். தற்போ தைய வேளாண் கொள்கைகள் குறுகிய கால தேர்தல் பலன்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதாகவும், நீண்ட கால வளர்ச்சி மற்றும் வேளாண் உற்பத்திது திறன் பெருக்கத்திற்கு நெல் ஆராய்ச்சி பணிகளை நீண்டகால அளவில் மேற்கொள்ளவும் உல கின் உணவுத் தேவையை நிறைவு செய்ய பொதுத்துறை வேளாண் முதலீடுகள் ஒரு முக்கியத் தேவையாக உருவாகிவிட்டதாக வும் தெரிவித்தார்.

தற்போது நெல் சாகுபடி முறையில் ஒரு வருடத்தில் அதிகளவு சாகுபடிப் பணிகளை மேற்கொள்வது பாரம்பரிய நெல் சாகுபடி பகுதிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் பெருக்கத்திற்கு காரணமாகிவிட்டதாகவும், தடுப்பு பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பல வேளாண் பிரச்சனைகளுக்கு காரணமாகி விட்டதாகவும், நீண்ட கால பொதுத்துறை வேளாண் ஆராய்ச்சிகள் வாயிலாக இப்பிரச் சனைகளுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும் என்றார்.

எனவே ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்கவும், நெல் விவசாயிகளின் நலன் களை பாதுகாக்கவும் தேவைப்படும் உழவி யல் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளை உரு வாக்க தற்போதைய வேளாண் கட்டமைப்பு களுக்கு தேவையான பயிற்சிகளை, தொழில் நுட்ப உதவிகளை சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் என்றும் தெரிவித்தார். தற்போதைய நிகழ் மற்றும் எதிர்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிய தலைமுறை வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் புதிய ரகங்களை உருவாக்கும் வேளாண்மை முயற்சிகள் தொடரும் என்றார்.

வேளாண் கலந்துரையாடல்

அண்ணாமலைப் பல்கலைக்கழக பேரா சிரியர்கள், வேளாண் வல்லுனர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முன்னோடி விவசாயிகள், முனைவர் ராபர்ட் ஜீக்ளரிடம் பல கேள்விகள் கொண்ட கலைந்துரையாடல் நிகழ்ச்சி பின்பு நடைபெற்றது. விஞ்ஞானிகளின் பல சந்தேகங் களுக்கு தனது பதிலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் ஆராய்ச்சிப் பணிகளை சர்வதேச நெல் ஆராய்ச்சி மையம் மேற் கொள்ள வில்லை என்றும் சீனா நெல் ஆராய்ச்சியாளர்கள் இப்புதிய வேளாண் பணி களை மேற்கொண்டு வருவதாகவும் தெரி வித்தார். பின்னர் நீரழிவு நோயாளி களுக்கு உரிய நெல் ரக ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் வெகு விரை வில் புதிய ரக மருத்துவ குணமுள்ள நெல் ரகங்களை உருவாக்கவும் முயற்சிகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார். அண்ணா மலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் ராமநாதன், பல துறைத் தலை வர்கள், புல முதல்வர்கள் கலந்துகொண்ட இவ்விழாவின் ஏற்பாடுகளை தேசிய வேளாண் புதுமைத் திட்டத்தின் சார்பில் உழவியல்துறைத் தலைவர் முனைவர் கதிரேசன் தலைமை யிலான விஞ்ஞானிகள் குழு சிறப்பாக செய் திருந்தது.

ராபர்ட் ஜீக்ளர்
தலைவர்,
சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம்,
மணிலா

தமிழாக்கம் : முனைவர் தி.ராஜ்பிரவின், உதவிப் பேராசிரியர், வேளாண்மை விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

1-10 of 60