posted Apr 29, 2011, 1:59 AM by theekkathir news
[
updated Apr 29, 2011, 2:00 AM
]
நாட்டில் படிக்கத் தகுதி வாய்ந்த 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி வழங்குவது அடிப்படை உரிமை என்று சட்டம் இயற்றப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்து பொன் விழா கண்டபின்னர்தான் இது போன்ற சட்டத்தையே ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றால், கல்வியின் மீது அவர் களுக்குள்ள அக்கறை எந்த அளவிற்கு இருந் தது என்பது தெரிகிறது.இடதுசாரி மாணவர் அமைப்புகளும் வாலிபர் அமைப்புகளும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் பல ஆண்டு களாக வலியுறுத்தி வந்த இந்த கோரிக்கை சட்டமாக்கப்பட்டு ஒராண்டு கூட முடியவில் லை. அதற்குள் இந்த சட்டத்தை சீர்குலைக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன.
கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்ற சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் வரும் கல்வியாண்டிலிருந்து அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதன்படி தனியார் பள்ளிகள், தங்களது பள்ளி யை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மற்றும் நலிந்த பிரிவை சேர்ந்த மாண வர்களுக்கு 25 விழுக்காடு இடங்கள் ஒதுக்க வேண்டும். 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை அமல்படுத்த அரசு விதிமுறைகளை யும் உருவாக்கியது. ஆனால், அவற்றை வெளிப் படையாக அறிவிக்காமல் வைத்திருப்பது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக மாறிவிட்டது.
சென்னை அடையாரில் உள்ள ஸ்ரீ சங்கரா சீனியர் செகன்ட்ரி பள்ளி நிர்வாகம் இந்த சட்டத்தை அமல்படுத்த மறுப்பதோடு இதுதொடர்பாக தனது பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது. அதில் ஏழை, எளிய பிள்ளைகளுக்கு அரசு சட்டத்தின் கீழ் இடங்களை ஒதுக்கினால், பள்ளியின் தரம் குறையும் என்றும், தங்களது குழந்தைகளுக்கு அந்த குழந்தைகளால் பிரச்சனை ஏற்படும் என்றும் கலவரத்தை தூண்டிவிட்டுள்ளது.
சாதாரண சமூகத்திலிருந்து வரக்கூடிய மாணவர்கள் பள்ளிகளில் மோசமாக நடந்து கொள்வார்கள் என்றும், அதனால், மற்ற மாண வர்களின் படிப்பு பாழாகும் என்றும் அப்பள் ளிகள் கூறுவதன் மூலம், அவர்கள் எந்த வர்க் கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், சமூக நீதியை குழி தோண்டி புதைக்க முயற்சிப்பதும் அம்பல மாகியுள்ளது.
ஏழை மாணவர்களுக்காக உள்ளூர் மொழி யில் பாடங்களை கற்றுக்கொடுப்பது இயலாத காரியம் என்றும், அந்த மாணவர்கள் பள்ளிக்கு நாள்தோறும் வரவில்லை என்றாலும் பாடங் களை படிக்கவில்லை என்றாலும் ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாயம் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்பது பிற மாணவர்களை பாதிக் கும் என்றும் நிர்வாகம் கூறியுள்ளதன் மூலம் ஏழை மாணவர்கள் மீதான குரோத உணர்வை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த மாணவர்களுக்கு இலவச கல்வி அளிப்பதால் தற்போது படிக்கும் மாணவர்க ளின் கல்வி கட்டணத்தில் 25 விழுக்காடு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என்று பெற்றோர்களுக்கு நிர்வாகம் மிரட்டல் விடுத் துள்ளது.
ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெறும் உரிமையை பறிக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக மாணவர், வாலிபர் அமைப்புகள் போராடி, சட் டத்திற்கு சவால் விடும் தனியார் பள்ளிகளின் கொட்டத்தை ஒடுக்கவேண்டும். |
|
posted Apr 28, 2011, 1:24 AM by theekkathir news
[
updated Apr 28, 2011, 1:25 AM
]
நாய் செல்லப்பிராணி தான்- பழகி விட்டால் வாலை ஆட்டும் தான். ஆயினும்
நாய்க்கு வெறி வந்துவிட்டால் அது எல்லோருக்கும் ஆபத்து. வெறிநாய்கடியில்
உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகி றது.
உலகெங்கும் 150 நாடுகளில் இந்த வெறி நாய் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் 55 ஆயிரத் திற்கும் அதிகமானோர்
வெறிநாய்க்கடியால் மரணமடைகின்றனர். இதில் 40 விழுக்காட் டிற்கு அதிகமானோர்
15 வயதுக்கும் குறைவான சிறுவர்-சிறுமியரே.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் பேர் வெறிநாய்க்கடியால்
உயிரிழக்கின் றனர். பீகார், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மகா ராஷ்டிரம்,
பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இப்பிரச் சனை மிக அதிகமாக உள்ளது. இந்த
பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறவில்லை என மகிழ்ச்சிக் கொள்ள முடியவில்லை.
ஏனெனில் தமிழகஅரசு நாய்க்கடி சம்பந்தமான விவரங்களை சேகரிக்க வும் இல்லை.
பதிவு செய்யவும் இல்லை.
இந்தியா முழுவதும் ஒரு சதுர கி.மீட்டருக்கு 25 தெரு நாய்கள் இருப்பதாக
அரசின் தோராய மான புள்ளி விவரம் கூறுகிறது. தமிழகத்தில் இதைவிட அதிகம்
இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் கணக்கில்லை. ஒரு காலத்தில்
மாநகராட்சிகள் நாய்களை பிடித்துக் கொல்லும். அதற்கென நாய் பிடி வண்டிகளே
வரும். இப்போது அத்தகைய வண்டிகள் கிடை யாது. மேனகா காந்தி பாஜக ஆட்சியில்
அமைச் சராக இருந்த போது, அவரின் மிருகாபிமானம் அதிகமாகி மனிதனைப் பற்றி
கவலைப்படாமல் தெருநாய்களுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டது. தெருநாய்களை
கொல்லுவதற்கு பதில், அவற் றுக்கு வெறி நோய் தடுப்பு மருந்து போடுவது
என்றும், குடும்ப கட்டுப்பாடு செய்வது என்றும் அரசு முடிவு எடுத்தது.
அவ்வப்போது சில இடங்களில் கண்துடைப்பாக இவை நடை பெறுவதும் உண்டு. தெரு
நாய்களை இனம் கண்டுபிடித்து இவற்றை மேற்கொள்வது சவாலான பணி என உலக சுகாதார
நிறுவனமே ஒத்துக்கொண்டு விட்டது .
மறுபக்கம், நகரின், கிராமத்தின் சுகாதார மற்ற சூழ்நிலையும், குப்பை
மேடுகளும் தான் வெறி நாய் வளர்கிற களம். அவற்றை தூய்மைப் படுத்தாமல்
வெறிநாய் தொல்லையிலிருந்து முழு விடுதலை பகல் கனவே என்கிறது உலக சுகாதார
நிறுவனம். ஒரு காலத்தில் தொப்புளைச் சுற்றி 14 ஊசி போட வேண்டும். அரசு
மருத்துவ மனைகளில் அந்த வாய்ப்பு இருந்தது. இப்போது அது இல்லை. அரசு
நாய்க்கடி தடுப்பு ஊசி தயா ரிப்பையும் கைவிட்டுவிட்டது. தனியாரிடம் ஒப்
படைத்து விட்டது. நாய்க்கடி மருந்து அரசு மருத் துவமனைகளில் கிடையாது.
தனியாரிடம் தான் வாங்க வேண்டும். ஒரு ஊசி 375 ரூபாய். குறைந்தது 5 ஊசி
போட வேண்டும். ஆக 1875 ரூபாய் வேண்டும். இதரச் செலவுகள் வேறு. சாதாரண
கூலித் தொழிலாளியால் இதை செலவு செய்ய முடியுமா?
வசதி படைத்தவர்களுக்கும், பெரிய மனிதர் களுக்கும் நாய் வளர்ப்பது பொழுது
போக்கானது. நாய் வீட்டை காவல் காக்கும் என்பது இருப்பவர் களுக்குத் தான்.
ஏழைகள் , அடித்தள மக்கள் பிழைப்புக்காக ஊர் ஊராய் சுற்றுகிறவர்கள்,
குழந்தைகள், சிறார்கள் இந்த நாய்க்கடியால் படும் சிரமத்தை ஆட்சியாளர்கள்
உணரவே இல்லை. அரசு மருத்துவமனைகள் குறிப்பாக ஒவ்வொரு வட்ட
மருத்துவமனைகளிலும் நாய்க் கடி மருந்து கிடைக்கச் செய்வதும்; வட்ட கால் நடை
மருந்தகங்களில் நாய்களுக்கு தடுப்பூசி போட நிரந்தர ஏற்பாடும், சுகாதாரமான
சூழலை உருவாக்குவ தும் அவசரமான கடமை என்பதை செய்திகள் நமக்கு
அறிவுறுத்துகின்றன. அரசு மனித உயிர்களை நாய்களைவிட மலினமாய் எண்ணுவதை
கைவிடுவது எப்போது? |
posted Apr 26, 2011, 7:57 PM by theekkathir news
[
updated Apr 26, 2011, 8:01 PM
]
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறை கேடு தொடர்பான வழக்கில்
துணை குற்றப் பத்திரிகையை மத்திய புலனாய்வுத்துறை தாக் கல் செய்துள்ளது.
முதல்வர் கருணாநிதியின் மக ளும், திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை
உறுப்பினருமான கனிமொழி உள்ளிட்டோரின் பெயர்கள் இந்தக் குற்றப்பத்திரிகையில்
இடம் பெற்றுள்ளன.
இந்த வழக்கில் துணைக்குற்றப்பத்திரிகை ஏப்ரல் 25க்குள் தாக்கல்
செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ உறுதியளித்தது. அதன்படி
தாக்கல் செய்யப்பட்ட துணைக் குற் றப்பத்திரிகையில் கனிமொழி, கலைஞர் தொலைக்
காட்சியின் நிர்வாக இயக்குனரான சரத்குமார் ஆகியோரின் பெயர் இடம்பெற்
றுள்ளன.
இந்த ஊழலில் கூட்டுச்சதியாளர் என்று சிபிஐயினால் கனிமொழி குற்றம்
சாட்டப்பட் டுள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் ஆ.ராசா
மீண்டும் தொலைத் தொடர்புத்துறையைப் பெறுவதற்கு கனிமொழி மேற்கொண்ட
முயற்சிகளும் சிபிஐயினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு புதன்கிழமை கூடும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் தொலைக் காட்சி நிறுவனத்தின் சார்பில்
ரூ.200 கோடி கடன் வாங்கப்பட்டு, வட்டியுடன் திரும்பச் செலுத்தப்பட்டது.
இதில் எந்தச் சதியும் இல்லை என்று திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால்,
இந்த விளக்கத்தில் வலு இல்லை. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தொடர்புடைய ஒரு
நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு மட் டும் கடன்தர முன்வந்தது ஏன்? என்ற
கேள்வி இன்னமும் பதில் அளிக்கப்படாமலே உள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணை என்பது திமுக - காங்கிரஸ் உறவு சம்பந்
தப்பட்ட ஒன்றல்ல. ரூ.1லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு தேசத்தின் சொத்து
சூறை யாடப்பட்டுள்ளது. இந்த ஊழலில் தொடர்புடை யவர்கள் யாராக இருந்தாலும்
சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். முறை கேடு
செய்யப்பட்ட தொகை மீட்கப்பட்டு, அர சின் கஜானாவுக்கு கொண்டுவரப்படவேண்
டும். நாட்டின் வளர்ச்சிப்பணிகளுக்கு இந்த தொகை செலவிடப்படவேண்டும்.
மாறாக, திமுக - காங்கிரஸ் பேரத்திற்கு கண் துடைப்பாக சிபிஐ விசாரணை
மாற்றப்பட்டு விடக்கூடாது. ஏற்கெனவே திமுகவிடமிருந்து அதிக அளவு
தொகுதிகளைப் பெற இந்த விசா ரணையை காங்கிரஸ் பயன்படுத்தியதாக விமர் சனம்
உள்ளது. உச்சநீதிமன்றத்தின் நேரடி கண் காணிப்பில் இந்த விசாரணை
நடைபெறுவதால் தான் ஓரளவுக்கு காரியங்கள் நடப்பதாக மக்கள் கருதுகின்றனர்.
இதில் உண்மையில்லாமல் இல்லை.
லோக்பால் மசோதா குறித்து நாடுதழுவிய விவாதம் நடந்துவருகிறது. ஊழலுக்கு
எதிராக மக்களின் தார்மீக கோபம் அதிகரித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல்
மட்டுமின்றி, காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடிக்
குடியிருப்பு ஒதுக்கீட்டு ஊழல், பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும்
இஸ்ரோ தொடர்புடைய எஸ்-பேண்ட் ஊழல், கர்நாடக முதல்வர் எடியூரப்பா
தொடர்புடைய ஊழல் என வெளிச்சத்திற்கு வந்துள்ள அனைத்து ஊழல் தொடர்பாகவும்
நேர்மையான, வெளிப்படையான விசாரணை நடந்தாக வேண்டும். |
posted Apr 26, 2011, 3:01 AM by theekkathir news
[
updated Apr 26, 2011, 3:02 AM
]
எண்டோசல்பான் பூச்சிமருந்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்க
வேண்டும் என்று வலியுறுத்தி கேரள முதல்வர் வி.எஸ்.அச்சு தானந்தன் தலைமையில்
பெரும் திரளான மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி யுள்ளனர்.
எண்டோசல்பானை முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்ற குரல் உலகம் முழு வதும்
எதிரொலித்து வருகிறது. இந்த அபாய கரமான பூச்சிக்கொல்லி மருந்துக்கு 63
நாடுகள் ஏற்கெனவே தடைவிதித்துள்ளன.
கேரள அரசின் சுகாதாரத்துறை, காசர்கோடு பகுதியில் நடத்திய ஆய்வில்
எண்டோசல்பான் பூச்சிமருந்தால் சுமார் 4000பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது
கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பூச்சிமருந்தால் மனிதர்கள் மட்டு மின்றி, தாவரங்களும் விலங்குகளும்
பறவை களும்கூட பாதிக்கப்பட்டுள்ளன. தேனீக் களும்கூட தப்பவில்லை. பல்வேறு
உயிரினங் கள் பாதிப்புக்கு உள்ளாவதால் பல்லுயிர் பெருக்கம்
பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவியல் நிபுணர்கள் நடத்தியுள்ள ஆய்வில் தெரிய
வந்துள்ளது.
எண்டோசல்பான் பூச்சிமருந்து தொடர்ச்சி யாக பயன்படுத்திய பகுதிகளில் அரியவகை தாவரங்கள் அழிந்துவிட்டதாக ஆய்வுகள் தெரி விக்கின்றன.
எண்டோசல்பான் உபயோகத்தை தடுக்க வேண்டும் என்று கேரள அரசு மட்டுமின்றி
இடதுசாரிக்கட்சிகளும், சமூக அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புகளும் விடாப்பிடி
யாக போராடி வருகின்றன. இந்த பூச்சிமருந்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்
உள்பட அனைத்துப் பகுதி மக்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற
கோரிக்கையும் வலுவடைந் துள்ளது.
பிளாச்சிமடா பகுதியில் கோக் நிறுவனம் நடத்திய தண்ணீர்க் கொள்ளையைத் தடுத்து
நிறுத்திய கேரள மக்கள், இன்றைக்கு எண்டோ சல்பானுக்கு எதிராகக்
கிளர்ந்தெழுந்துள்ளனர்.
ஆனால், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு வழக்கம்போல நாடகமாடி வரு
கிறது. எண்டோசல்பான் பூச்சிமருந்தால் தீங்கு நேர்வது உறுதி செய்யப்பட்டால்
அதற்கு தடை விதிக்கத் தயார் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம்
ரமேஷ் சர்வசாதாரண மாகக் கூறுகிறார். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கோ இந்த
மருந்தை தடைசெய்ய வேண்டு மானால் நாடு முழுவதும் கூடுதல் ஆய்வு நடத்
தப்படவேண்டும் என்று கூறியுள்ளார். மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவாரும்
எண்டோசல்பான் கம்பெனிக்கு வக்காலத்து வாங்கும் முறையிலேயே கருத்துத்
தெரிவித் திருக்கிறார்.
கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்மூலம் பல்லாயிரக்
கணக்கானோர் இந்த பூச்சிமருந்தினால் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதும்,
நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருப்பதும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்னமும் கூடுதலான ஆய்வு தேவை என்று பிரதமர் கூறுவதன் மூலம் இன்னும்
எத்தனை ஆயிரம் மக்கள் உயிரிழக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார் என்று
புரியவில்லை.
இந்த பூச்சிமருந்தின் விபரீதத்தை உணர்ந்த தால்தான் அமெரிக்கா உள்ளிட்ட 63
நாடுகளில் இதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எதற்கெடுத் தாலும் அமெரிக்க
பாணியைப் பின்பற்றும் மன்மோகன் சிங், இந்த விஷயத்தில் மட்டும் ஆய்வு தேவை
என்று அங்கலாய்ப்பது ஏன்? இந்திய மக்கள் சோதனை எலிகள் என்ற ஏகாதி பத்திய
கருத்தோட்டத்திற்கு இவரும் உடன் பட்டிருப்பதுதான் காரணமா?
எண்டோசல்பானுக்கு தடைகோரி ஜெனீ வாவில் உலகளாவிய மாநாடு நடைபெறும் நிலையில்
இந்திய மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இயற்கையை நேசிப்பவர்களும்
ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டியது அவசியமாகும். |
posted Apr 24, 2011, 9:38 AM by theekkathir news
[
updated Apr 24, 2011, 9:39 AM
]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகமான எண்ணிக்கையில் மக்கள் பங்கெடுத்ததற்கு,
அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவாளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதை
உறுதிப்படுத்தி யதும், தேர்தல் ஆணையத்தின் பல்வேறு கட்டுப்பாடுகள் மக்களை
ஈர்த்தன என்பதும் இரண்டு முக்கிய காரணங்கள். குறிப்பாக, ஆளுங்கட்சியினரின்
பணம் கடத்தல் உள் ளிட்ட பல்வேறு அத்துமீறல்களை, தேர்தல் ஆணையம் தனக்கு
சாத்தியமான அளவிற்குக் கட்டுப்படுத்தியது. கோடி கோடியாய் பணம்
கைப்பற்றப்பட்ட செய்திகள் மக்களின் கவனத் தைப் பெற்றன.
தேர்தல் முடிவைத் தெரிந்துகொள்ள மே 13 வரை காத்திருக்க வேண்டும் என்பதால்
ஏற்பட்டுள்ள புதிர் நிறைந்த அமைதி ஒருபுறம் இருக்க, வாக்குப்பதிவு
நாளுக்குப் பிறகும் தொடர்கிற சில கட்டுப்பாடுகள் தேவைதானா என்ற வினாவும்
எழுகிறது.
தொழிலாளர்கள் தங்கள் இதயத்தோடு கலந்த மே தின விழாவைக் கொண்டாட முடியாத
சூழல் ஏற்பட்டிருக்கிறது. அன்றைய தினம் ஊர்வலங் களோ, பொதுக் கூட்டங்களோ,
கொடியேற்ற நிகழ்ச்சிகளோ நடத்த அனுமதி மறுக்கப் படுகிறது. இத்தகைய
நிகழ்ச்சிகளை நடத்துவ தற்குத் தடையில்லை என்று ஆணையம் தெளிவுபடுத்தியுள்ள
போதிலும் கூட, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காவல்துறை அதிகாரி கள்
ஒவ்வொரு விதமான அணுகுமுறையுடன் நடந்துகொள்கிறார்கள். ஒரு மாவட்டத்தில்
அனுமதி அளிக்கப்படுகிறது. இன்னொரு மாவட் டத்தில், தேர்தல் நடத்தை விதிகளை
காரணம் காட்டி அந்த அனுமதி மறுக்கப்படுகிறது.
மதம், சாதி, மொழி போன்ற வேறுபாடு களையெல்லாம் தாண்டி தொழிலாளர்களால்
தங்களுடைய உரிமை நாளாகக் கொண்டாடப் படுவது மே தினம். அந்த நாளில் அவர்கள்,
தங்க ளுடைய இன்றைய உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த சிகாகோ போராளிகளுக்கு
நன்றி தெரிவிக்கிறார்கள். போராடிப் பெற்ற உரிமை களைத் தக்க வைக்கவும்,
இன்னமும் மறுக்கப் படுகிற உரிமைகளை நிலைநாட்டவும் உறுதி ஏற்கிறார்கள்.
தொழிற்சங்கங்களால் நடத்தப்படும் இந்த விழா அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி
அல்ல.
ஆயினும், அதிகார வர்க்கத்தினர் சிலர், அண் மைக் காலத்தில் தொழிலாளர்களின்
ஜனநாயக இயக்கங்கள் முடக்கப்பட்ட ருசி மாறாதவர் களாக, கெடுபிடி
செய்கிறார்கள். வாக்கு எண் ணிக்கை மையங்கள் அமைந்துள்ள இடங்களி லிருந்து
ஒரு கி.மீ. தொலைவுக்கு அப்பால் பொது நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள ஆணையம்
அனுமதி அளித்துள்ளது. எனினும் பல நகரங்க ளில், காரணமே இல்லாமல் மே தின கொண்
டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதில், அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறை
ஆணவம் தான் வெளிப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் தொழிலாளிகள் தங்கள்
போர்க் குணத்தை எவ்வழியிலும் வளர்த்துக்கொள்ளக் கூடாது என்று விரும்புகிற
இன்றைய கார்ப்பரேட் கனவான்களுக்கு சேவை செய்வதாகத்தான் அதிகாரவர்க்கத்தின்
இந்தப் போக்கு அமைந் திருக்கிறது. சிஐடியு சங்கம் இதற்கு எதிராகக் குரல்
கொடுத்திருப்பதுடன், அதிகாரிகளுக்கு உரிய ஆணை பிறப்பித்திடுமாறு ஆணையத்
தையும் கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருமித்து ஆதரிக்க
வேண்டிய கோரிக்கை இது. |
posted Apr 23, 2011, 7:50 PM by theekkathir news
[
updated Apr 24, 2011, 9:39 AM
]
சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள
கறுப்புப்பணம் எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை
என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
கறுப்புப்பணம் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அதை பொதுமக்
களுக்குத் தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். வங்கிகளில் சில
ஆயிரம் கடன் வைத்திருந்தால்கூட அவர்களது பெயர்களை வங்கிகள் நாளேடுகளில்
வெளியிடுகின்றன. அவர் களது சொத்துகளை முடக்குகின்றன. ஆனால் இந்திய மக்களின்
உழைப்பைச்சுரண்டி சேர்க்கப்பட்ட கறுப்புப்பணத்தை வெளிநாட்டு வங்கிகளில்
முடக்கி வைத்துள்ள கனதன வான்களின் பெயர்களை வெளியிடுவது கூட பெரிய பாவம்
என்று மன்மோகன் சிங் அரசு கருதுகிறது.
இத்தனைக்கும் கறுப்புப்பண விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் மத்திய
அரசை உச்சநீதிமன்றம் மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டித்து வருகிறது.
ஆனால் ஆட்சியாளர்களுக்கு அது கொஞ்சம் கூட உறைக்கவில்லை.
கறுப்புப்பணப் பிரச்சனையில் ஹசன் அலி என்ற ஒரே ஒரு நபரை மட்டும் குறிவைத்து
விசாரணை நடைபெறுவது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க
வேண்டும் என்றும் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம் வைத் துள்ள
மற்றவர்களின் பெயர் ஏன் வெளியே வர வில்லை; இந்த ஒரு நபர் மட்டும்தான்
கறுப்புப் பணம் வைத்துள்ளாரா என்றெல்லாம் உச்சநீதி மன்ற நீதிபதிகள்
சரமாரியாகக் கேள்வி எழுப்பிய அடுத்த நாள், மத்திய நிதியமைச்சர் பிரணாப்
முகர்ஜி, அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை என்று சர்வ அலட்சியமாகப்
பதிலளிக்கிறார்.
உண்மையில் கறுப்புப்பண முதலைகளை பாதுகாக்க மத்திய அரசு அனைத்து வகையி லும்
முயல்கிறது என்பதுதான் விஷயம். அமெ ரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு செய்து
கொள்ள ஆட்சியை பணயம் வைக்கக்கூட துணிகிற ஆட்சியாளர்களுக்கு தேசத்தின்
சொத்தை மீட்பதில் ஏன் இவ்வளவு அலட்சியம்.
கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் யாரும் ஏழை, எளிய மக்கள் அல்ல. ஆட்சி
அதிகாரத் தைப் பயன்படுத்தி கொள்ளையடித்த அரசியல் வாதிகள், தொழிலாளர்களின்
உழைப்பைச் சுரண்டிய பெருமுதலாளித்துவ நிறுவனங்கள், லஞ்ச ஊழலில் திளைக்கும்
உயர் அதிகார வர்க் கத்தினர்தான் கறுப்புப்பணத்தின் ஊற்றுக்கண் ணாக
விளங்குகின்றனர்.
தேசத்தையே அதிரவைத்த ஸ்பெக்ட்ரம் ஊழலின் மூலமாக பெறப்பட்ட பணம் கூட
வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட் டுள்ளதாக விசாரணையில்
தெரியவந்துள்ளது. இவ்வாறு ஊழல் மூலமாகக் கிடைத்த பணமும் வரிஏய்ப்பு
மூலமாகச் சுருட்டப்பட்ட பணமும் தான் கறுப்புப்பணமாக மாறி வெளிநாட்டு
வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு அளிக்கும் உணவு மானியத்தை வெட்டுகிறது மத்திய அரசு. உர
மானியத்தை குறைக்கிறது. பெட்ரோல் - டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி
அதிர்ச்சி கொடுக்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள
கறுப்புப்பணத்தை வெளிக்கொணர்ந்தால் கோடிக்கணக்கான இந்திய மக்கள் பலன்
பெறுவார்கள். ஆனால், கறுப்புப்பணத்தை வெளிக்கொணரும் அரசியல் உறுதி அரசுக்கு
இல்லை என்பதே உண்மை. இந்த விஷயத்தில் அவர்களுக்கு இருப்பது கறுப்பு மனமே. |
posted Apr 21, 2011, 7:20 PM by theekkathir news
[
updated Apr 21, 2011, 7:21 PM
]
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து முடிவுகளுக்காக காத்திருக்கும்
நிலையில், ஆட் சியைவிட்டு அகல இருக்கும் திமுக அரசு கடைசி காலத்திலும்
மக்களுக்கு துன்பத்தையே அளித்துவிட்டுச் செல்கிறது. கடந்த 5 ஆண்டு களாக
பொய்யான வாக்குறுதிகளையே அளித்து மக்களை ஏமாற்றி வந்த அந்த அரசு மின்வெட்
டை மட்டும் மறைக்க முடியவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக மாநிலத்தில் அறி விக்கப்படாமல் இருந்த மின்வெட்டு கடந்த
3 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப் பட்டது. ஆனால்,
அறிவிக்கப்பட்டதற்கும் அதிக மாக மின்சாரத்தை வெட்டிய சாதனைதான் திமுக
அரசின் சாதனையாகும். ஒரு காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து உபரி மின்சாரம்
கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு விற்ற நிலைமை மாறி, இன்று பல
மாநிலங்களிடம் மின் சாரத்திற்காக கையேந்த வேண்டிய நிலை மையை திமுக அரசு
ஏற்படுத்திவிட்டது.
வடசென்னையில் 1000 மெகாவாட், தூத்துக் குடியில் 2000 மெகாவாட்,
ஜெயங்கொண்டத் தில் 1000 மெகாவாட் என்று அறிவிப்புகளை சட்டப்பேரவையில்
ஆண்டுதோறும் பட்ஜெட் உரையின்போது வெளியிடுவதையே வழக்கமா கக் கொண்ட திமுக
அரசு, அந்த திட்டங்கள் நிறைவேற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில் லை
என்பதைத்தான் மாநிலத்தில் நிலவும் மின்பற்றாக்குறை எடுத்துக்காட்டுகிறது.
கோடை காலத்தில் மின்வெட்டு கடுமை யாக இருக்கும் என்று தெரிந்துதான்
சட்டப்பேர வைத் தேர்தலை ஏப்ரல் மாதத்திலேயே நடத்த வேண்டும் என்று திமுக
அரசு ரகசியமாக தேர் தல் ஆணையத்திற்கு கோரிக்கை அளித்தது. மே மாதத்தில்
தேர்தல் வைத்திருந்தால் திமுக வுக்கு டெபாசிட் கூட கிடைத்திருக்காது. தேர்
தலை அவசர அவசரமாக நடத்துகிறார்கள் என்று ஆணையத்தின் மீது திமுக தலைமை
பொரிந்து தள்ளினாலும் உள்ளுக்குள் மகிழ்ச்சி யாகவே இருந்தது.
இந்த நிலையில் மாநிலத்தில் மின்சார நிலைமை மிகக் கடுமையான நிலைக்கு சென்று
விட்டதால், தமிழக அரசு வியாழனன்று அதிகா ரப்பூர்வமாக மின்வெட்டு குறித்த
அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநி லங்களில்
மின்பற்றாக்குறை உள்ளதாகவும், எனவே 50 கோடி ரூபாய் அளவிற்கு நாள்தோ றும்
பிற மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்கியும் நிலைமையை சரிக்கட்ட
முடியாமல் உள்ளது என்றும், எனவே வேறு வழியின்றி வீட்டு உபயோகத்திற்கான
மின்சாரத்தில் நாள் ஒன் றுக்கு தற்போது இரண்டு மணி நேரம் மின் வெட்டு
என்பதற்கு பதிலாக மூன்று மணி நேரம் பகலில் மின்வெட்டு செய்ய முடிவு
செய்யப்பட் டுள்ளதாக அறிவித்துள்ளது.
தலைநகர் சென்னையில் இதுவரை மின் வெட்டு இல்லாமல் இருந்த நிலைமைக்கு மாறாக,
நாள்தோறும் பகலில் ஒரு மணிநேரம் மின்வெட்டு செய்யவும் மின்வாரியம் முடிவு
செய்துள்ளதாகவும், இதற்காக பெரிதும் வருந்து வதாகவும் தமிழ்நாடு மின்சார
வாரியம் கூறியுள் ளது. சொன்னதை செய்த அரசு மட்டுமல்ல, சொல்லாததையும் செய்த
அரசு திமுக அரசு என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச் சர்
கருணாநிதியிலிருந்து அக்கட்சியின் கடைசி தொண்டர் வரை முழங்கியதைப்
பார்த்தால் மின் வெட்டு என்ற திமுக அரசின் தேர்தல் அறிக்கை யில் இடம் பெறாத
வாக்குறுதியைதான் சொன் னார்கள் போலும். |
posted Apr 20, 2011, 1:28 AM by theekkathir news
[
updated Apr 20, 2011, 1:29 AM
]
கொளுத்தும் கோடை வெயிலிலும் வீழ்ச்சி யில்லா பங்குச்சந்தையாக கல்வி
வியாபாரம் தற்போது சூடுபிடித்திருக்கிறது. கல்வி வியாபாரப் போட்டியில்
தினசரி நாளிதழ்களின் முதல் பக்க தலைப்பு செய்தியையே பின்னுக்குத் தள்ளி
விளம்பரமாய் முன்நிற்கிறது.
நீச்சல் குளம் இருக்கிறது. 25 ஆயிரம் சதுர அடியில் உள்விளையாட்டு அரங்கம்
இருக்கி றது. நானூறு மீட்டர் ஓடு தளம் இருக்கிறது. என்றெல்லாம் விளம்பரம்
வெளியாகிறது. இது வெல்லாம் எந்த வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு என்று
தெரியுமா? மழலையர் பள்ளியில் இருந்து 5ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு
வியாபாரப் போட்டியில் தனியார் பள்ளிகளின் விளம்பரம் 5 நட்சத்திர சொகுசு
விடுதிகளுக்கு இணையான வசதிகளை நாங்கள் செய்திருக் கிறோம். எங்கள்
பள்ளியில் மாணவர்களை சேருங்கள் என அழைப்பு மேல் அழைப்பு வந்த
வண்ணமிருக்கிறது.
கல்வி என்பது அறிவுநுட்பத்திற்கான அடித் தளமாக இருந்து, எதிர்காலத்தை
வழிநடத்திட ஏதுவாக இருக்க வேண்டும். அதுதான் சிறந்த கல்வியாக இருக்கும்
என்ற கோட்பாடு இன்று தலைகீழாக மாற்றப்பட்டிருக்கிறது. கல்வி என்பது பணம்
சம்பாதிக்கும் தொழில் சூத்திர மாக மாற்றப்பட்டுள்ளது. எவ்வளவு பணம்
சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ அந்த அளவிற்கு அந்த கல்விச்
சூத்திரத்தின் விலையும் உயர்த்தி நிர்ணயிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில்
கல்வி என்பது பொருளீட் டுகிற முதலீடாக முன்நிறுத்தப்படுகிறது. அதற்
கேற்றவாறு ஆசிரியர்களும் விற்கிறவர்களாக மாற்றப்பட்டு இருக்கின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் இந்த அவலத்தை அரங்கேற்ற எல்லாவிதமான அடித்தளத்தையும்
அமைத்து சீராட்டி பாராட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியே புற்றீசல்களாய்
தனியார் கல்வி நிறுவனங்கள் புறப்பட்டுள்ளன. திரைகடல் ஓடி திரவியம்
தேடியவர்களெல்லாம் இன்று கல்வி நிறுவனங்களை அமைத்துக்கடைவிரித்து உட்
கார்ந்திருக்கின்றனர். அமைச்சர்கள் முதல் சாராய வியாபாரிகள் வரை கூட்டுச்
சேர்ந்து ‘லாபம்’ வற்றாத ஜீவநதிகளாக கல்வி வாணி பத்தை
நிலைநிறுத்தியுள்ளனர்.
ஆனால் நமது அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு
குடிமகனுக்கும் 14 வயது வரை கல்வியை இலவசமாகவும் தரமாகவும் தரவேண்டும்
என்று சொல்கிறது. ஆனால் அந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கும் கட்டுப்படாத
உலகமயம் இந்தியாவிற்குள் புகுந்து கல்வியை கடைச்சரக்காக மாற்றியிருக்
கிறது. கல்வியை விலைக்கு வாங்க ரூபாய் நோட்டுகள் வரிசையில் நிற்கின்றன.
கந்தல் பையோடு வரும் காசில்லாதவனுக்கு ஏக்கப் பெருமூச்சே மிஞ்சுகிறது.
தனியார்மயம்தான் வளர்ச்சியின் தாரக மந்திரம் என பாடம் எடுக்கும்
அமெரிக்காவில் கூட 15 சதவிகிதம் கல்வி மட்டுமே தனியார் கையில் உள்ளது.
ஆனால் இந்தியாவிலோ 96 சதவிகிதம் தனியாருக்குத்தான் அனுமதி. இருக்கும் கதவை
அகலத்திறந்து விட்டு, மத்திய அரசு அவர்களுக்கு கை கட்டி காவலுக்கு
நிற்கிறது. அனைவருக்கும் பேதமின்றி சமமான கல்வி கிடைத்திட உலகமயக்
கொள்கைகளை அடியோடு அகற்றிட வேண்டும். அப்போதுதான் எட்டா உயரத்தில்
இருக்கும் கல்வி, சாதாரண மக்களின் கைகளுக்கு எட்டும் நிலை வரும். |
posted Apr 18, 2011, 6:45 AM by theekkathir news
[
updated Apr 18, 2011, 6:47 AM
]
இராமேஸ்வரத்திலிருந்து ஏப்ரல் 2ம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்ற 4
தமிழக மீனவர் கள் காணாமல் போனார்கள். இவர்களில் மூவ ரது உடல்
மீட்கப்பட்டது. மாரிமுத்து என்ற மீன வரின் கதி என்ன ஆனது என்பது தெரியாமல்
இருந்தது. இந்நிலையில் அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த உடல் மாரிமுத்துவின் உடல்தான் என் பதை அவரது குடும்பத்தினரும்
உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த நான்கு மீனவர்களும் இலங்கை கடற்படையினரால்
கொல்லப்பட்டதாக மீன வர்கள் கூறுகின்றனர். இலங்கை கடற்படையின ரும் இதை
உறுதியாக மறுக்கவில்லை.
இலங்கை கடற்படையினரின் கொலை வெறிக்கு தமிழக மீனவர்கள் பலியாவது தொடர்
கதையாகி வருகிறது. இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்து வந்த நிலையில்
விடுதலைப்புலி களுக்கு உதவுவதாகக் கூறி தமிழக மீனவர் களை இலங்கை
கடற்படையினர் வேட்டை யாடினர்.
இப்போது உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து விட்டதாக இலங்கை அரசே
அறிவித்துவிட்ட நிலையிலும், தமிழக மீனவர்கள் பலியாவது தொடர்கிறது. சர்வதேச
கடல் எல்லையைத் தாண்டி தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதால்தான் அவர்கள்
கொல்லப்படுவதாக இலங்கை அரசு இந்த அராஜகத்தை, அக்கிரமத்தை நியாயப்
படுத்துவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிப்பது என்பது ஒரு உலகளாவிய
பிரச்சனை. கடல் எல்லை உள்ள எல்லா நாடுகளிலும் இந்தப் பிரச்சனை உள்ளது.
இந்திய எல்லைக் குள் நுழையும் இலங்கை மீனவர்கள் யாரும்
சுட்டுக்கொல்லப்படுவதில்லை. அவர்கள் அதிக பட்சம் கைது செய்யப்பட்டு,
பின்னர் அந்த நாட்டி டம் ஒப்படைப்பது என்பதே நடைமுறையாக உள்ளது.
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு
ஒப்பந்தத்தின் படி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப்பகுதியில்
மீன்பிடிக்கும் மீனவர்கள் கூட கொலை செய் யப்படுகின்றனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீன வர்கள் கொலை செய்யப்படும் போதெல்லாம்
தமிழக அரசுத்தரப்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும், மத்திய அரசு தனது
கவலையை இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளதாக சமாளிப் பதும் தொடர்ச்சியாக
நடந்து வருகிறது.
இப்போதும் கூட மத்திய அயல்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த பிரச்சனை
குறித்து இலங்கை அரசிடம் விவாதிப்பதாக உறுதி கூறியுள்ளார் என்று தகவல்கள்
வெளி யாகியுள்ளன.
மத்திய அரசு தனது கண்டனத்தையும், எதிர்ப் பையும் உறுதியான முறையில் இலங்கை
அரசிடம் தெரிவித்து, இந்தப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இந்திய மீன வர்களை பாதுகாப்பது கடலோர காவல்படை யின் பொறுப்பு என்று
அறிவுறுத்தப்பட வேண் டும். கூட்டுரோந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இயற்கைச் சீற்றம், மீன் குஞ்சுபொறிக்கும் காலத்தில் மீன்பிடிக்கத்தடை போன்ற
பிரச் சனைகளால் பாதிக்கப்படும் மீனவர்கள், இலங் கை கடற்படையின்
தாக்குதலுக்கு உள்ளாவது கொடுமையிலும் கொடுமை. இதைத் தடுப்பது மத்திய-மாநில
அரசுகளின் கடமை. |
posted Apr 15, 2011, 9:20 PM by தீக்கதிர் செய்திகள்
[
updated Apr 15, 2011, 9:28 PM
]
உலக அளவில் சுகாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் நாம் செல்ல வேண்டிய இலக்கு இன்னும் வெகுதொலைவில் இருக்கிறது என்பதையே ஒவ்வொரு புள்ளிவிபரமும் நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு நாளும் உலக அளவில் 7 ஆயிரம் சிசுக்கள் இறந்தே பிறக்கின்றன என்று மருத்துவ ஏடு லான்செட் தனது ஆய்வறிக்கையில் தெரி வித்திருக்கிறது. குறிப்பாக வளரும் நாடுகளான இந்தியா, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட 10 நாடுகளில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் குழந்தை சிசுக்கள் இறந்தே பிறக்கின்றன என புள்ளி விப ரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் குறிப்பாக இந்தியாவில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 20 முதல் 66 குழந்தைகள் இறந்தே பிறக்கின்ற ன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி சிசுக்கள் இறந்தே பிறப்பதற்கு மருத்துவ ரீதியான பிரச்சனைகளும், உடல் ரீதியான பிரச்சனைகளும் காரணமாக இருக்கின்றன. அதில் பெரும்பாலும் கருத்தரிப்பு காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நோய்களே பிரதான மான காரணமாக இருக்கின்றன. கர்ப்பிணி பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்து இல்லா மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியவை காரணமாக இருக்கிறது. மேலும் பிரசவ காலத் தில் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களும் ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது. ஏன் கர்ப்பகாலத்தில் கூட பெண்கள் இவ்வாறு நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்? இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்ததில், அதாவது 90 சதவிகித நோய்கள் தண்ணீர் மூலமே பரவுகிறது என்று தெரிய வந்திருக்கிறது. அப்படியென்றால் நாட்டில் சுகாதாரமான குடிநீர் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெ டுத்து வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடி யும். ஆனால் இதையெல்லாம் உணர்ந்து இந் திய அரசு அதற்கான வருமுன் காக்கும் திட்டங் களை தீட்டியிருக்கிறதா என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதைவிட இன்னும் கொடுமை என்னவென்றால், சுத்தமான குடிநீர் என்பது இன்று வியாபாரப் பொருளாக இந்தியாவில் கோலோச்சுகிறது. உலகமயக் கொள்கை என்று இந்தியாவிற் குள் என்று புகுந்ததோ அன்றில் இருந்து கொஞ் சம் கொஞ்ச மாக சுகாதாரமான குடிநீர் வழங்கும் பொறுப்பில் இருந்து இந்திய அரசு தன்னை விடு வித்துக் கொண்டே வருகிறது. அதன் எதிரொலி தான் கோக்ககோலா பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நமது நிலத்தில் உள்ள நல்ல தண் ணீரை உறிஞ்சி நமக்கே விற்கும் அவலம் ஏற் பட்டிருக்கிறது. இது ஒருபுறம் என்றால், மறுபுறம் மக்களுக்கான சுகாதாரத்தை பேணிக்காத்து உத்தரவாதப்படுத்த வேண்டிய அரசு அந்த பொறுப்பில் இருந்தும் தன்னை கொஞ்சம் கொஞ் சமாக விடுவித்து வருகிறது. இதுநாள் வரை தொற்று நோய் பரவுவதை தடுப்பது என்பது அரசின் கடமையாக இருந்து வந்தது. இன்று அந்த தொற்று நோய் மருந்தை கூட அரசு மருத்துவமனைகளிலேயே காசுக்கு விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது காசு உள்ளோருக்கே சுகாதாரம் என்ற பாகுபாட் டினை அரசே கடைப்பிடிக்கும் அவலம் அரங் கேற்றப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் அடிப் படை காரணமாக உலகமயக் கொள்கையே இருந் து வருகிறது. எனவே அனைத்து மக்களுக்கும் பாகுபாடின்றி சுகாதாரம் பேணிக்காத்திட உலக மயக் கொள்கையை இந்தியாவை விட்டு விரட்டிடுவது என்பது ஒரு முக்கியப் பணி யாகும். உலகமயம் கருவறை சிசுவுக்கும் எதிரானது. |
|