நாய் செல்லப்பிராணி தான்- பழகி விட்டால் வாலை ஆட்டும் தான். ஆயினும்
நாய்க்கு வெறி வந்துவிட்டால் அது எல்லோருக்கும் ஆபத்து. வெறிநாய்கடியில்
உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகி றது.
உலகெங்கும் 150 நாடுகளில் இந்த வெறி நாய் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் 55 ஆயிரத் திற்கும் அதிகமானோர்
வெறிநாய்க்கடியால் மரணமடைகின்றனர். இதில் 40 விழுக்காட் டிற்கு அதிகமானோர்
15 வயதுக்கும் குறைவான சிறுவர்-சிறுமியரே. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் பேர் வெறிநாய்க்கடியால் உயிரிழக்கின் றனர். பீகார், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மகா ராஷ்டிரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இப்பிரச் சனை மிக அதிகமாக உள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறவில்லை என மகிழ்ச்சிக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் தமிழகஅரசு நாய்க்கடி சம்பந்தமான விவரங்களை சேகரிக்க வும் இல்லை. பதிவு செய்யவும் இல்லை. இந்தியா முழுவதும் ஒரு சதுர கி.மீட்டருக்கு 25 தெரு நாய்கள் இருப்பதாக அரசின் தோராய மான புள்ளி விவரம் கூறுகிறது. தமிழகத்தில் இதைவிட அதிகம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் கணக்கில்லை. ஒரு காலத்தில் மாநகராட்சிகள் நாய்களை பிடித்துக் கொல்லும். அதற்கென நாய் பிடி வண்டிகளே வரும். இப்போது அத்தகைய வண்டிகள் கிடை யாது. மேனகா காந்தி பாஜக ஆட்சியில் அமைச் சராக இருந்த போது, அவரின் மிருகாபிமானம் அதிகமாகி மனிதனைப் பற்றி கவலைப்படாமல் தெருநாய்களுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டது. தெருநாய்களை கொல்லுவதற்கு பதில், அவற் றுக்கு வெறி நோய் தடுப்பு மருந்து போடுவது என்றும், குடும்ப கட்டுப்பாடு செய்வது என்றும் அரசு முடிவு எடுத்தது. அவ்வப்போது சில இடங்களில் கண்துடைப்பாக இவை நடை பெறுவதும் உண்டு. தெரு நாய்களை இனம் கண்டுபிடித்து இவற்றை மேற்கொள்வது சவாலான பணி என உலக சுகாதார நிறுவனமே ஒத்துக்கொண்டு விட்டது . மறுபக்கம், நகரின், கிராமத்தின் சுகாதார மற்ற சூழ்நிலையும், குப்பை மேடுகளும் தான் வெறி நாய் வளர்கிற களம். அவற்றை தூய்மைப் படுத்தாமல் வெறிநாய் தொல்லையிலிருந்து முழு விடுதலை பகல் கனவே என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஒரு காலத்தில் தொப்புளைச் சுற்றி 14 ஊசி போட வேண்டும். அரசு மருத்துவ மனைகளில் அந்த வாய்ப்பு இருந்தது. இப்போது அது இல்லை. அரசு நாய்க்கடி தடுப்பு ஊசி தயா ரிப்பையும் கைவிட்டுவிட்டது. தனியாரிடம் ஒப் படைத்து விட்டது. நாய்க்கடி மருந்து அரசு மருத் துவமனைகளில் கிடையாது. தனியாரிடம் தான் வாங்க வேண்டும். ஒரு ஊசி 375 ரூபாய். குறைந்தது 5 ஊசி போட வேண்டும். ஆக 1875 ரூபாய் வேண்டும். இதரச் செலவுகள் வேறு. சாதாரண கூலித் தொழிலாளியால் இதை செலவு செய்ய முடியுமா? வசதி படைத்தவர்களுக்கும், பெரிய மனிதர் களுக்கும் நாய் வளர்ப்பது பொழுது போக்கானது. நாய் வீட்டை காவல் காக்கும் என்பது இருப்பவர் களுக்குத் தான். ஏழைகள் , அடித்தள மக்கள் பிழைப்புக்காக ஊர் ஊராய் சுற்றுகிறவர்கள், குழந்தைகள், சிறார்கள் இந்த நாய்க்கடியால் படும் சிரமத்தை ஆட்சியாளர்கள் உணரவே இல்லை. அரசு மருத்துவமனைகள் குறிப்பாக ஒவ்வொரு வட்ட மருத்துவமனைகளிலும் நாய்க் கடி மருந்து கிடைக்கச் செய்வதும்; வட்ட கால் நடை மருந்தகங்களில் நாய்களுக்கு தடுப்பூசி போட நிரந்தர ஏற்பாடும், சுகாதாரமான சூழலை உருவாக்குவ தும் அவசரமான கடமை என்பதை செய்திகள் நமக்கு அறிவுறுத்துகின்றன. அரசு மனித உயிர்களை நாய்களைவிட மலினமாய் எண்ணுவதை கைவிடுவது எப்போது? |


