posted May 2, 2011, 9:05 PM by theekkathir news
[
updated May 2, 2011, 9:06 PM
]
புதுதில்லி, மே 2-
மனித உயிர்களுக்கும் விலங்கினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் எண்டோசல் பான் பூச்சிக் கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என தொடரப்பட்ட மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அர சுக்கு உச்சநீதிமன்றம் நோட் டீஸ் அனுப்பியது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் எண்டோ சல்பான் பூச்சிக் கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில், இந்தியா முழுவதும், உயிருக்கு அபா யம் விளைவிக்கும் பூச்சிக் கொல்லி மருந்தை தடை செய்வதற்கு மத்திய அர சுக்கு நீதிமன்றம் அறிவு றுத்த வேண்டும் என வேண் டுகோள் விடுக்கப்பட்டி ருந்தது.
எண்டோ சல்பான் பூச்சிக்கொல்லி மருந்தால் அதிகமான நபர்கள் பாதிக் கப்பட்டுள் ளனர். ஏற்கன வே 81 நாடு களில் எண்டோ சல்பான் மருந்துக்கு தடை உள்ளது. மேலும் 12 நாடுக ளில் இந்த அபாயகரமான மருந்தைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள் ளது. கேரளாவில் காசர்கோ டு மாவட்டத்தில் எண்டோ சல்பான் பூச்சிக்கொல்லி மருந்தால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வாலிபர் சங்கத்தினர் தங்களது மனு வில் குறிப்பிட்டு இருந்த னர்.
எண் டோசல்பான் மருந்தால், 500க்கும் மேற் பட்டவர்கள் காசர்கோட் டில் இறந்துள்ளனர். 4 ஆயி ரத்துக்கும் மேற்பட்டவர் கள் உடல் குறைபாடுகள் அடைந்துள்ளனர். காசர் கோடு மாவட்டத்தில் ஆய் வாளர்கள் ஆய்வு செய்த போது, ஆண்கள் பாலின பருவ நிலையை எட்டுவ தில் தாமதம் ஏற்படுவதை கண்டறிந்துள்ளனர்.
எண்டோ சல்பான் பூச்சிக்கொல்லி மருந்தே இதற்கு காரணம் என ஆய் வில் உறுதிபடுத்தப்பட் டுள் ளது. காசர்கோடு மாவட் டத்தில் உள்ள முந்திரித் தோட்டங்களுக்கு எண் டோ சல்பான் பூச்சிக் கொல் லி மருந்து மட்டும் 20 ஆண்டுகள் பயன்படுத்தப் பட்டன.
இந்தப் பூச்சி மருந்து பல ஆண்டுகள் பயன்படுத்தப் பட்டதன் விளைவாக அங் கு சுற்றுச்சூழல் கேடு ஏற் பட்டது. தண்ணீர் மற் றும் நிலப்பகுதிகள் மாசுபட் டன.
வாலிபர் சங்க மனுவை விசாரணை செய்யும் உச்ச நீதிமன்ற பெஞ்ச், மத்திய அரசு உரிய பதில் அளிக் குமாறு நோட்டீஸ் அனுப் பியது. மேலும் மே 11ம் தேதி நடக்கும் விசாரணையில் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் ஆஜராகும்படியும் கூறப் பட்டுள்ளது.
ஜெனிவாவில் நடந்த எண்டோசல்பான் எதிர்ப்பு மாநாட்டில் இந்திய அரசு ஊசலாட்ட நிலையை எடுத் தது. இந்தியாவில் உள்ள பூச்சிமருந்து தயாரிப்பாளர் களின் செல்வாக்குக்கு கட் டுப்பட்ட அரசு தடை தேவையில்லை என்று கூறி வந்தது. ஜெனீவாவில் ஒரு சமரச நிலைக்கு தள்ளப் பட் ட இந்திய அரசு தற்போது தடை குறித்து ஒப்புதல் அளித்துள்ளது.
|
posted May 2, 2011, 9:02 PM by theekkathir news
[
updated May 2, 2011, 9:04 PM
]
புதுதில்லி, மே 2-
1997ம் ஆண்டு நடந்த போலி என் கவுன்ட்டர் வழக்கில் உதவி போலீஸ் கமி ஷனர் உள்பட 10 தில்லி போலீஸ் அதி காரிகளுக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண் டனையை உச்சநீதிமன்றம் திங்களன்று உறுதிப்படுத்தியது.
தில்லி கன்னாட் பிளேஸ் பகுதியில், 2 ஹரியானா வணிகர்களை தவறான அடை யாளம் காரணமாக போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இந்த போலி என்கவுன்ட்டர் வழக்கில் உதவி போலீஸ் கமிஷனர் ரதி உள்பட 10 போலீசாருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உயர்நீதி மன்றம் 2009ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தது. 2007ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதியன்று விசாரணை நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த 1997 ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி என் கவுன்ட்டர் சிறப்பு நிபுணரான ரதி தலைமை யிலான குழு ஒரு காரின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. போலீசாரால் தேடப்படும் உத்தரப்பிர தேச தாதாக்கள் என தவறுதலாக மற் றொரு காரை போலீசார் தாக்கினர். இதில் ஹரியானாவின் 2 வணிகர்கள் பரிதாபமாக இறந்தனர்.
|
posted May 2, 2011, 9:00 PM by theekkathir news
[
updated May 2, 2011, 9:01 PM
]
புதுதில்லி, மே 2-
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது 2008ம் ஆண்டு நடந்த நம்பிக்கை வாக் கெடுப்பின் போது பாஜக எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுக்க சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயன்றனர். இந்த ஊழல் மீதான நடவடிக்கை குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் திங்கள் கிழமை கேட்டது.
2008ம் ஆண்டு ஜூலை மாதம் நாடாளு மன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப் பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெற்றி பெற, சில உறுப்பினர்கள் பாஜக எம்பிக்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் அளித்தனர். இந்த லஞ்சம் தரப்பட்ட ஊழல் விவகாரம் மக்களவையிலும் வெளிச்சமிடப்பட் டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பணம் கொடுக்க முயன்ற உறுப்பினர்கள் குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோ மனுத்தாக் கல் செய்திருந்தார்.
இம்மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம். லோதா, அப்தாப் ஆலம் ஆகி யோரைக் கொண்ட பெஞ்ச், குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப் பினர்கள் மீதான நடவடிக்கை நிலை குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் கேட்டது.
குற்றம் இழைத்த நபர்கள் மீது நட வடிக்கை எடுக்காதது குறித்து தில்லி நகர போலீஸ் கமிஷனருக்கும் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
2008ம் ஆண்டு இந்தியா-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை கண்டித்து இடது சாரிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதனால் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு, வெற்றி பெற, 3 பாஜக உறுப்பினர் களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் தரப்பட்டது. இதனை அந்த உறுப் பினர்கள் மக்களவை அரங்கில் கொட்டி காங்கிரஸ் கூட்டணி அரசின் தில்லு முல்லை அம்பலப்படுத்தினார்.
|
posted Apr 29, 2011, 7:52 PM by theekkathir news
[
updated Apr 29, 2011, 7:53 PM
]
புதுதில்லி, ஏப். 29-
புருலியாவில் ஆகாய விமா னத்திலிருந்து ஆயுதங்கள் வீசப் பட்டதன் நோக்கம் மேற்குவங்க இடது முன்னணி அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி வீழ்த்தத்தான் என்று புதிதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளதை அடுத்து, அதன் பின்னணியில் உள்ள முழு சதி வேலைகளையும் வெளிக்கொண்டு வந்திட, பணியில் உள்ள உச்சநீதி மன்ற நீதிபதியைக் கொண்டு விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கோரினார்.
புருலியா தொடர்பாக வெளி யாகியுள்ள விவரங்கள் தொடர்பாக தலைநகர் புதுதில்லியில் வெள்ளி யன்று செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் பிரகாஷ் காரத் கூறிய தாவது:
1995ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்குவங்கத்தின் புருலியா மாவட்டத்தில் விமானம் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்ட சம்பவமா னது நம் நாட்டின் இறையாண் மையின் மீதான மோசமான தாக் குதலாகும். அப்போது நடை பெற்ற புலனாய்வுகளும், நீதி மன்ற விசாரணையும், புருலியா வில் ஆயுதங்கள் வீசப்பட்டதானது அப்பகுதியில் இயங்கிக் கொண்டி ருந்த ‘ஆனந்த மார்க்கம்’ என்னும் அமைப்புக்காகத்தான் என்பதும், மேற்குவங்க இடதுமுன்னணி அர சாங்கத்தைப் பலவீனப்படுத்தி வன் முறை மூலம் வீழ்த்துவதற்காகவே இவ்வாறு ஆயுதங்கள் வீசப்பட்டது என்பதும் நிரூபிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான குற்றத்துடன் பிணைக்கப்பட்டு இன்றளவும் தலைமறைவாக வுள்ள நீல்ஸ் கிறிஸ்டியன் நீல்சன் என்கிற கிம் டேவி என்பவனும், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று, பின்னர் விடுதலையாகியுள்ள பீட்டர் பிளீச் என்பவனும் இப்போது வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் இதன் பின்னணியில் உள்ள சதிச் செயல்கள் குறித்து எண்ணற்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.
புருலியாவில் ஆயுதங்கள் வீசப்பட இருப்பது தொடர்பாக, பிரிட்டிஷ் உளவு ஸ்தாபனமான எம்ஐ5 என்னும் அமைப்பு இந்தி யாவின் ‘ரா’ (ரிசர்ச் அண்டு அனா லிசின் விங்) அமைப்பிற்கு 1995 நவம்பரிலேயே தெரிவித்திருந் தும், சம்பவம் டிசம்பரில் நடை பெற்று ஒரு வாரம் கழித்துத்தான் மத்திய அரசு, மேற்கு வங்க அர சுக்கு இந்தத் தகவலைப் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தது.
புருலியாவில் ஆயுதங்கள் வீசப்பட்ட சமயத்தில் அப்பகுதியில் கலைக்குண்டா என்னும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரேடார் செயல் படவில்லை.
விமானம் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்டபின்னர், அந்த விமானம் சென்னையில் தரையிறக்கம் செய்யப்பட்டு மீண்டும் செல்வ தற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சதித் திட்டம் குறித்து மத் திய அரசுக்கு முன்னமேயே தெரிய வந்திருந்தும், அது தொடர் பான தகவலை, மத்திய அரசு மேற்கு வங்க மாநில அரசுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி, சம்பவம் நடைபெற்ற பின்னர்தான் அது மாநில அரசால் பெறப்பட்டிருக் கிறது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட கிம் டேவி, டென்மார்க்கில் கடந்த பத்தாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்தபோதிலும், அவ னை மீண்டும், இந்தியாவிற்குக் கொண்டுவர இந்திய அரசு எவ் வித முயற்சியும் மேற்கொள்ள வில்லை.
கிம் டேவி தற்சமயம் அளித் துள்ள விவரங்களில், தான் எப்படி மும்பை விமானத் தளத்திலிருந்து நேபாளத்திற்குத் தப்பிச் சென் றேன் என்பதையும் தனக்கு அப் போது நாடாளுமன்ற உறுப்பின ராக இருந்த பப்பு யாதவ் எப்படி முழுமையாக உதவினார் என்ப தையும் தெரிவித்திருக்கிறான். பீகா ரைச் சேர்ந்த இந்த பப்பு யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பீகார் சட்டமன்ற உறுப்பினர் அஜித் சர்க்காரை கொலை செய்த தற்காக ஆயுள் தண்டனை அனுப வித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும், மேற்படி பிளீச்சும், கிம் டேவியும் இந்தியாவில் அதிகாரி கள் பலர் தங்கள் சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்தார்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.
மேற்கு வங்கத்தில் இடது முன் னணி ஆட்சியிலிருப்பது சர்வ தேச சக்திகள் பலவற்றாலும், இந்தி யாவிலேயே பல்வேறு சக்திகளா லும் தாங்கிக் கொள்ள முடியவில் லை. அன்றைய தினம் ‘ஆனந்த மார்க்கம்’ என்றால், இன்றைய தினம் மாவோயிஸ்ட்டுகளைப் பயன்படுத்தி எப்படியாவது இடது முன்னணியை வீழ்த்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக் கிறார்கள்.
மாவோயிஸ்ட் வன்முறையா ளர்களுக்கு மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் உதவியும், ஆதரவும் அளித்து வருகிறது. மத்திய உள் துறை அமைச்சரே, மேற்குவங்கத் தில் நடைபெறும் ‘‘கொலைபாதகச் செயல்களுக்கு’’, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணியைச் சேர்ந்த 265 முன்னணி ஊழியர் கள் கொல்லப்பட்டதற்கு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையே குறை கூறுகிறார்.
புருலியாவில் விமானம் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையான வகை யில் மீண்டும் புலனாய்வு மேற் கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பாக பப்பு யாதவ் விசார ணைக்கு உட்படுத்தப்பட வேண் டும். நம் நாட்டிலிருந்து கிம் டேவி தப்பிச் சென்ற விதம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவன் தப்பிச் செல்ல உதவிய அனைவரும் குற்றவாளிக் கூண் டில் ஏற்றப்பட வேண்டும்.
இந்த சதித் திட்டம் குறித்து மத்திய அரசுக்கு முன்னமேயே தெரிய வந்திருந்தும், அது தொடர் பான தகவலை, மத்திய அரசு உடனடியாக மாநில அரசுக்குத் தெரிவித்து உஷார்படுத்திட முன் வரவில்லை. மாறாக தகவலை பதிவுத் தபால் மூலமாக அனுப்பி வைத்தது. அது சம்பவம் நடை பெற்ற பின்னர்தான் மாநில அர சால் பெறப்பட்டிருக்கிறது.
இவ்வாறு இந்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகள் மெத்தனமாக நடந்து கொண்டிருப்பதால், இப்போது மீண்டும் மத்திய புலனாய்வு அமைப்புகளிடமே இப்பொறுப் பைக் கொடுப்பதில் அர்த்தம் ஏது மில்லை. எனவே பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மூலம் நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இதன் பின் னால் உள்ள சதித்திட்டங்களுக் கான வலைப்பின்னல் வெளிக் கொணரப்பட வேண்டும்.
இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார். (ந.நி.)
|
posted Apr 29, 2011, 7:49 PM by theekkathir news
[
updated Apr 29, 2011, 7:52 PM
]
அகமதாபாத்: குஜராத் இனப்படு கொலையில் பாஜக முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத் தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய் துள்ள ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை அந்த மாநில அரசு திடீரென விலக்கிக் கொண் டுள்ளது.
குஜராத்தில் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்பட்ட கொடிய வெறி யாட்டத்திற்கு முதல்வர் நரேந்திர மோடி உடந்தையாக இருந்தார் என அப்போது உளவுப் பிரிவில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குற்றம்சாட்டினார்.
2002ம் ஆண்டு சங்பரிவாரத்தின் வன் முறை உச்சத்தில் இருந்த பிப்ரவரி மாதம் முதல்வர் நரேந்திர மோடி தனது இல்லத் தில் கூட்டிய போலீஸ் அதிகாரிகள் கூட் டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்ட வர்களிடமிருந்து வரும் போன்கள் அல் லது கலவரக்காரர்களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் படி முதல்வர் மோடி தங்களுக்கு உத்தர விட்டதாகவும் பட் கூறியுள்ளார்.
இப்போது விடுமுறையில் உள்ள பட், தனது ஜூனாகத் நகரில் உள்ள தனது குடும்பத்துக்கு தரப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றுள் ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், எனக்கும் குடும்பத் துக்கும் ஒய்- பிரிவு பாதுகாப்பு தரப்பட வேண் டும் என மாநில உளவுப் பிரிவு பரிந்துரைத் துள்ளது. ஆனால், என் குடும்பத்துக்குத் தரப்பட்டு வந்த பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக மாநில டிஜிபி உத்தரவு பிறப் பித்துள்ளார். இதையடுத்து பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
என்னை என்னால் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனது குடும்பத்தின் பாதுகாப்போடு அரசு விளையாடுவது தான் கவலை தருகிறது என்றார்.
|
posted Apr 29, 2011, 7:48 PM by theekkathir news
[
updated Apr 29, 2011, 7:49 PM
]
புதுதில்லி, ஏப். 29-
ஏர் இந்தியா விமான ஊழியர்கள் மற்றும் விமா னிகள் போராட்டம் தீவிர மடைந்துள்ளது. ஏர் இந் தியா தனது 320 சேவை களில் தற்போது 50 சேவை களை மட்டுமே நடத்தி வருகிறது.
மாற்று ஏற்பாடுகள் திட் டத்தின்படி தற்போது 50 விமானங்கள் மட்டுமே இயக் கப்படுகிறது என்று ஏர் இந் தியா அதிகாரி தெரிவித்தார்.
தில்லி, மும்பை விமான நிலையங்களிலிருந்து பல நகரங்களுக்கு 10க்கும் மேற் பட்ட விமானங்கள் இயக் கப்படுகின்றது. இதே போன்று ஒவ்வொரு பெரு நகரங்களிலிருந்தும் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றது. மும்பை -தில்லி-அகமதா பாத்-மும்பை வழித்தடத் தில் அதிக பயணிகளை ஏற் றக்கூடிய போயிங் 777 ரக விமானத்தைப் பயன்படுத்த ஏர் இந்தியா திட்டமிட்டு வருகிறது என்று ஏர் இந் தியா அதிகாரி தெரிவித்தார். மேலும் 4 சிறப்பு விமானங் களை மும்பை-அபுதாபி-மும்பை, சென்னை-சிங்கப் பூர்-சென்னை, கொச்சி-கோழிக்கோடு-கொச்சி மற்றும் கோழிக்கோடு-துபாய்-கோழிக்கோடு போன்ற வழித்தடத்தில் இயக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்போராட்டத்தில் இந்திய வர்த்தக விமானிகள் சங்கம் (ஐசிபிஏ) வைச் சேர்ந்த 800 இந்தியன் ஏர் லைன்ஸ் விமானிகள் கலந்து கொண்டுள்ளனர். நிரந்தர சம்பளம், ஏர் இந்தியா சிஎம்டியை நீக்க வேண்டும் மற்றும் தவறான நிர்வாகம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரி செவ் வாயன்று நள்ளிரவு போராட் டத்தைத் துவங்கினர்.
தற்போது போராடி வரும் 800 விமானிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக 300 எக்சிகியூடிவ் விமானிகளும் போராட்டத்தில் குதித்தனர்.
|
posted Apr 29, 2011, 2:41 AM by theekkathir news
[
updated Apr 29, 2011, 2:44 AM
]
புதுதில்லி, ஏப். 28-
மேற்குவங்கத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையிலான இடதுமுன்னணி அரசின்மீது பழிசுமத்தி எப்படி யேனும் வீழ்த்தவேண்டும் என்ற தீய நோக்கத்தோடு, அம்மாநிலத் தில் உள்ள புருலியா மாவட்டத் தில் பெருமளவில் மர்மமான முறையில் ஆயுதங்கள் குவியல் குவியலாக வீசப்பட்ட சம்பவத் தில் முதன்மைகுற்றவாளியான கிம் டேவி என்பவர், தற்போது இடதுசாரி அரசுக்கு எதிராகத் தான் இந்த சதித்திட்டத்தை நிறைவேற்றினோம் என்றும், இதுகுறித்து இந்திய அரசுக்கு அனைத்துவிவரங்களும் முதலி லேயே தெரியும் என்றும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அரசியல் அரங்கில் கிம் டேவியின் இந்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1995ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்திலுள்ள ஜோவ்பூர் ஜால்தா பகுதியில் மர்மமான முறையில் ஆகாய மார்க்கமாக குவியல் குவியலாக ஆயுதங்கள் வீசப்பட்டன. மறு நாள் காலை ஆயுதக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நாடு முழுவதும் இடதுமுன் னணி அரசுக்கு எதிராக செய்தி கள் பரப்பப்பட்டன. பெருமளவு ஆயுதங்களை மர்மமான முறை யில் இறக்குமதி செய்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி உள் ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் இந்த ஆயுதங்களைக் கொண்டு எதிர்க்கட்சியினரை கொன்றுகுவித்துவருகிறார்கள் என்றெல்லாம் திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் நாடு முழு வதும் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
இந்த சம்பவத்தில், புருலியா உட்பட பல்வேறு பகுதிகளில் இயங்கிய ஆனந்த மார்க்கிகள் என்ற அமைப்பை சேர்ந்தவர் களே குற்றவாளிகள் என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. ஆனந்த மார்க்கிகள் அமைப் பிற்காக தீவிரவாத குழு வைச் சேர்ந்த கிம் டேவி என்ப வரும் பீட்டர் பிளீச் என்பவரும் இந்த காரியத்தை செய்தார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் முதன் மை குற்றவாளிகளான மேற் கண்ட இருவரும் இந்தியாவிலி ருந்து தப்பிப்பதற்கு மத்திய அரசு நிர்வாகமே ஏற்பாடு செய்தது. புருலியா ஆயுத வீச்சு சம்பவத் திற்குப்பின்னால், இடதுமுன் னணி அரசுக்கு எதிராக மம்தா வின் திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாவோயிஸ்டுகளின் உதவியுடன் ஏராளமான முயற்சி களை செய்தவண்ணம் இருக் கின்றனர்.
இந்தப்பின்னணியில், 15 ஆண்டுகளுக்குப்பின்னர், புரு லியா ஆயுத வீச்சு சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு உண்மைகளை, இந்த சம்பவத்தில் முதன்மைக் குற்ற வாளியான நீல்கிறிஸ்டியன் நீல் சன் என்ற கிம் டேவி, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிருபருக்கு அளித்த நீண்ட பேட்டியில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இந்த வழக்கில் தற்போது இந் தியாவுக்கு தன்னைக் கொண்டு வர அரசு முயற்சிக்கிறது என் றும், மறுபுறத்தில் அதே மேற்கு வங்கத்தில் மற்றொரு நாச காரியத்திற்காக சிலர்தன்னை நாடுவதாகவும் குறிப்பிட்டுள்ள கிம் டேவி, இந்தப்பின்னணி யிலேயே உண்மைகளை வெளி யிட முடிவு செய்ததாக டைம்ஸ் நவ் நிருபரிடம் ஒப்புக்கொண்டி ருக்கிறார்.
புருலியாவில் ஆயுதம் வீசுவ தன் மூலம், இடதுமுன்னணி அரசு ரகசியமாக ஆயுதக்குவிப் பில் ஈடுபடுகிறது என்ற பிரச் சாரத்தை நடத்தி, அதன்மூலம் அங்கு குடியரசுத்தலைவர் ஆட் சியை அமல்படுத்திவிட முடியும் என்ற எண்ணத்துடன், அரசியல் சக்திகளின் ஆதரவுடன் ஆனந்த மார்க்கிகள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் தன்னை கூலிக்கு அமர்த்திக்கொண்டன என்று கிம் டேவி தனது பேட்டியில் கூறியுள்ளார்.
புருலியாவில் ஆயுதம் வீசப் பட உள்ள நிகழ்வு குறித்து பிரிட் டிஷ் உளவுத்துறையின் தகவல் மூலம் இந்திய அரசுக்கு முன்கூட் டியே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் அப்போதைய மத்திய ஆட்சியிலிருந்த கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்பிரிக்கா, மத்திய அமெ ரிக்கா உள்பட பல்வேறு பகுதி களில் கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற பல காரியங்களுக்கு பணியாற்றி இருப்பதாகவும், கத்தோலிக்க தேவாலயம், கிரீன் பீஸ் போன்ற அமைப்புகள், இந்தியாவில் ஆனந்த மார்க்கிகள் போன்ற அமைப்புகள் என உல கம் முழுவதும் ஏராளமான தன் னார்வத் தொண்டு நிறுவனங்க ளுக்காக பணியாற்றி இருப்பதாக வும் கிம் டேவி கூறியுள்ளார்.
மேற்குவங்கத்தில் தான் செய்த பணியின் நோக்கம், இடதுசாரி அரசை ஒழித்துக்கட்ட வேண் டும் என்பதே என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இறையாண்மை மீதான தாக்குதல் சிபிஎம் கடும் கண்டனம் | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
1995ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்கு வங்கம் புருலியா மாவட்டத்தில் விமானத்திலிருந்து ஆயுதங்கள் வீசப்பட்ட சம்பவமானது, வன்முறையை உபயோகித்து மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தை பலவீனப்படுத்தி அப்புறப்படுத்திட வேண்டும் என்கிற சதித்திட்டத்தின் ஒரு பகுதியே என்பது தற்போது வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் பிரதானமாகக் குற்றஞ் சாட்டப்பட்டவர்களான கிம் டேவி மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட பீட்டர் பிளீச் ஆகியோர் என்ன சொல்லியிருந்தபோதிலும், இவ்வாறு சர்வ தேச வலைப்பின்னல் மூலமாக விமானத்திலிருந்து அவர்கள் ஆனந்த மார்கிகள் இயக்கத்தவருக்காக ஆயுதங்கள் வீசப்பட்டிருந்த போதிலும், அவர்களின் இலக்கு இடது முன்னணி அரசாங்கம்தான். விமானம் மூலம் ஆயுதங்கள் வீசப்படலாம் என்பது குறித்து அப்போது மத்திய அர சாங்கத்தை பிரிட்டிஷ் உளவுத்துறை எச்சரித்திருந்தது தெரிய வந்திருக் கிறது. ஆயினும், மத்திய அரசாங்கம் இவ்விஷயத்தை மேற்கு வங்க மாநில அரசுக்குக் காலத்தில் தெரிவிக்கத் தவறிவிட்டது. இந்நிகழ்வு தொடர் பாக 1990ஆம் ஆண்டிலேயே அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவரால், மக்களவையில், ஆனந்த மார்கிகள் அயல்நாடுகளிலிருந்து ஆயுதங்கள் பெற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன என்று அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார். ஆயினும் மத்திய அரசு அதனை கவலையுடன் எடுத்துக்கொள்ளவில்லை.
பிரிட்டிஷ் உளவுத் துறை அளித்திட்ட முக்கியமான தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசு ஏன் செயல்படத் தவறிவிட்டது என்பதற்கான விளக்கத்தை மத்திய அரசு அளிக்கவேண்டியது அவசியம். அதேபோன்று நம் நாட்டிலிருந்து கிம் டேவி தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டது எப்படி என்பதையும் அரசு விளக்கிட வேண்டும். மேலும், கிம் டேவியை டென் மார்க்கிலிருந்து மீளப் பெற அரசு எவ்வித அக்கறையும் காட்டியதாகவும் தெரியவில்லை.
புருலியா ஆயுதங்கள் வீசப்பட்ட நிகழ்வானது நாட்டின் இறை யாண்மை மீது தொடுக்கப்பட்ட மோசமான தாக்குதலாகும். அரசியல மைப்புச் சட்டத்திற்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்திற் கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு கொடூரமான சதியாகும்.
பல்வேறு கம்யூனிச எதிர்ப்பு சக்திகள் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்திற்கு எதிராகக் குறிவைத்து செயல்பட்டு வந்ததற்கு புருலி யாவில் விமானம் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்ட நிகழ்வு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும். இத்தகைய சூழ்ச்சிகள் இன்றளவும் தொடர்கின்றன. |
|
|
posted Apr 29, 2011, 2:40 AM by theekkathir news
[
updated Apr 29, 2011, 2:41 AM
]
உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் நிர்காஜானி கிராமத் தில் கொத்தடிமையாக வேலை செய்ய மறுத்த தலித் கொலை செய்யப்பட்டு, அவரது சடலத்தை சாலையில் இழுத் துச் சென்ற கொடுமை நடைபெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல் வேறு பகுதிகளில் இப்போதும் பணக் கார உயர்சாதியைச் சேர்ந்தவர்கள், தலித்துகளைக் கொத்தடிமைகளாக நடத்துவதும், கொத்தடிமைகளாக இருந்து வேலை செய்ய மறுப்பவர் களைக் கொலை செய்வது உட்பட பல் வேறு கொடூரமான சித்ரவதைகளுக்கு உட்படுத்துவதும் நடைபெற்றுக் கொண் டுதான் இருக்கின்றன.
முசாபர் நகர் மாவட்டம் நிர்காஜானி கிராமத்தில் கரம்சந்த் (வயது 42) என் பவரை தங்கள் கிராமத்தில் உள்ள பணக்காரர்களின் வயல்களில் வேலை செய்ய மறுத்ததற்காக கொலை செய்து, அவரது சடலத்தை சைக்கிளில் வைத்து ஊர்வலமாகக் கிராமத்திற்குள் எடுத் துச் சென்றுள்ளனர். தங்களுக்கு வேலை செய்ய மறுக்கும் எவராக இருந்தாலும் இந்தக் கதிதான் ஏற்படும் என்று மற்ற தலித்துகளை மிரட்டியுள்ளனர்.
பின்னர் பிணத்தைச் சுற்றி நின்று கோரமான முறையில் நடனமாடி விட்டு, பிணத்தை வாய்க்காலில் எறிந்து விட் டுச் சென்றுவிட்டனர்.
தன் தந்தையைக் காப்பாற்ற வந்த கரம்சந்தின் மகன் மோனு என்பவரை யும் கிராமத்தினர் தாக்கியுள்ளனர். மோனு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம யத்தில் காவல்துறையினரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் போபா காவல்நிலைய அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, கொலை செய்தவர்கள் கிராமத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
நடந்தது என்ன?
உத்தரப்பிரதேசம் மற்றும் பல்வேறு வட மாநிலங்களில் ‘பேகார்’ அல்லது ‘பேகாரி’ என்னும் கொத்தடிமை முறை மத்தியகாலக் கட்டத்திலிருந்து அம லில் இருந்து வந்தது. இதன்படி தலித் துகள் கிராம உயர்சாதியினருக்கு கட்டா யமாக உடல் உழைப்பை இலவசமாக நல்கிட வேண்டும். அவர்களில் ஒரு சில பேருக்கு பெயரளவில் ஏதோ கூலி வழங்கப்படும். தலித்துகள் எவரேனும் தங்களுக்கு என்று சொந்தமாக நிலம் வைத்திருந்து அதனைப் பார்த்துப் பரா மரிக்கவேண்டியிருந்தாலும், அத னைப் புறக்கணித்துவிட்டு உயர்சாதி யினரின் நிலங்களைத்தான் அவர்கள் பார்த்து, பராமரித்திட வேண்டும்.
இந்தக் கொடுமையான சட்டத்தை 1976ஆம் ஆண்டு மத்திய அரசு ஒழித்து விட்டது. ஆயினும் நடைமுறையில் இன்னும் பல பகுதிகளில் இது நடந்து வருகிறது.
சம்பவத்தன்று கரம்சந்த்தும் அவ ரது மகன் மோனுவும் தங்களுடைய வய லில் வேலை செய்து கொண்டிருந்தி ருக்கிறார்கள். அப்போது அக்கிராமத் தைச் சேர்ந்த உயர்சாதி நிலப்பிரபுக் களான அம்ரேஷ், தனபால் மற்றும் ரமேஷ் சிங் என்பவர்கள் மேலும் பத்து பேருடன் அவ்விடத்திற்கு வந்துள்ள னர். கரம்சந்திடம் வேலையை நிறுத்தி விட்டு தங்கள் வயலுக்கு வந்து கோதுமை அறுவடையைச் செய்திட வேண்டும் என்று கோரியுள்ளனர். கரம் சந்த் அவர் கள் காலில் விழுந்து கும்பிட்டு, தன் னால் வர இயலாது என்று மறுத்திருக் கிறார். உடனே அவர்கள், அவரைத் தாக்கியிருக்கின்றனர். அவர்கள் தாக்கு தல்களிலிருந்து தப்புவதற்காக கரம் சந்த், அங்கிருந்த கோவிலின் உச்சிக்கு ஏறிச் சென்றிருக்கிறார். அப்போது அம் ரேஷ், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். சம்பவ இடத்திலேயே கரம்சந்த் உயிர் பிரிந்துவிட்டது.
பின்னர் அவர்கள் கரம்சந்த் உடலை, சைக்கிளில் வைத்து, கிராமத்திற்குள் ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். தங்கள் கட்டளையை மீறும் எவராக இருந்தாலும் அவர்கள் இவ்வாறு கொல் லப்படுவார்கள் என்று கூச்சலிட்டுள் ளனர்.
கரம்சந்த் உடலைத் தன்னிடம் ஒப் படைத்துவிடுமாறு அவரது மனைவி ராஜேஷ்குமாரி கேட்டுள்ளார். அதற் கும் அவர்கள் அவரைப்பார்த்து கொக்க ரித்து, பிணத்தைத் தர மறுத்துவிட்ட னர். பின்னர் கரம்சந்த் சடலத்தை ஒரு வாய்க்காலில் எறிந்துவிட்டுச் சென்று விட்டனர்.
இது தொடர்பாக ஐவரைக் கைது செய்திருப்பதாகவும், 12 பேர் தலை மறைவாக இருப்பதாகவும் முசாபர்நகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.பி. சிங் தெரிவித்திருக்கிறார். (ந.நி.) |
posted Apr 29, 2011, 2:38 AM by theekkathir news
[
updated Apr 29, 2011, 2:39 AM
]
புதுதில்லி, ஏப். 28-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன் றத்தின் பொது கணக்குக் குழு (பிஏசி) உருவாக்கிய வரைவு அறிக்கையை நிரா கரிக்க வேண்டும் என 11 எம்.பி.க்கள் கூறியுள்ளனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிம ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்ட தாக சிஏஜி தெரிவித்த நிலை யில், ஊழல் நபர்களைக் கண்டறிய சிபிஐ, அமலாக் கப் பிரிவு விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவும் (பிஏசி) 2ஜி குறித்த வரைவு அறிக்கை யை தயாரித்துள்ளது. இந்த வரைவு அறிக்கையில், ஆ. ராசாவின் முறைகேட்டுக்கு பிரதமரும் மறைமுகமாக துணை போனார் என விமர் சிக்கப்பட்டிருந்தது.
இந்த வரைவு அறிக்கை குறித்த ஆலோசனை வியா ழக்கிழமை நடைபெற்றது. 21 உறுப்பினர்கள் கொண்ட குழு முன்னிலையில் ஆலோ சனை நடந்தது. இதில் 9 உறுப்பினர்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யைச் சேர்ந்தவர்கள். இந்தக் கூட்டணியில் 7 காங்கிரஸ் எம்.பி.க்கள், 2 திமுக எம்.பி. க்கள் தலா ஒரு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. க்கள் வரைவு அறிக்கையை நிராகரிக்க வேண்டும் எனக் கூறினர்.
கருத்துக்களை தெரி வித்த உறுப்பினர்கள், குழு வின் தலைவர் முரளி மனோ கர் ஜோஷிக்கு எழுதியக் கடிதத்தில் வரைவு அறிக் கையை நிராகரிக்க வேண் டும் என கூறியிருந்தனர்.
பிஏசி ஆலோசனைக் கூட்டம் 3 மணி நேரம் நடந்த போதும், உரிய முடிவு இல் லாததால் மாலை 4 மணி வரை தள்ளிவைக்கப்பட் டது. பிஏசி வரைவு அறிக் கையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீடு இழப்பு விவகாரத்தை முடித்து விடலாம் என பிரத மருக்கு பரிந்துரைத்த அப் போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தையும் கடுமை யாக விமர்சிக்கப்பட்டிருந் தது. பி.ஏ.சி. வரைவு அறிக் கை விவாதிக்கப்படுவதற்கு முன்னர் வெளியே கசிந்தது குறித்து ஐக்கிய முற்போக் குக்கூட்டணி உறுப்பினர் கள் கடும் அதிருப்தி தெரி வித்தனர்.
பிஏசி ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே கடுமையான வேறுபாடு காணப்பட்டது. ஒவ்வொரு உறுப்பினரும், தனது கருத்தைப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட னர். பிஏசி குழுவில் சிபிஎம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதாதளம், சிவசேனை கட்சியை சேர்ந்த தலா ஒரு உறுப்பினர்களும் உள் ளனர். (பிடிஐ) |
|
posted Apr 29, 2011, 2:37 AM by theekkathir news
[
updated Apr 29, 2011, 2:38 AM
]
கொடிய பின்விளைவுகளை உண்டாக்கும் எண்டோசல்பான் பூச்சிமருந்திற்கெதிராக கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந் தன் போராடி வருகிறார். தேசம் முழுவதும் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்தைத் தடை செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தும்படி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந் தன் கடிதம் எழுதியுள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் எண்டோசல் பான் மருந்தின் கொடிய பின் விளைவுகள் காரணமாக 400 பேர் உயிரிழந்துள்ளனர். நூற் றுக்கணக்கானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் அத்தீய விளைவுகள் குறித்து விரிவாக அனைத்து மாநில முதல்வர் களுக்கும் கேரள முதல்வர் அச்சு தானந்தன் கடிதம் எழுதியுள் ளார். மேலும், எண்டோசல் பான் மருந்தைத் தடை செய்யு மாறு மத்திய அரசை வலியு றுத்தி ஏப்ரல் 29 வெள்ளியன்று வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
காசர்கோடு மாவட்டத்தில் எண்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்தினால் உயிரிழந் தவர்கள் பற்றிய ஆய்வறிக்கை மற்றும் எண்டோசல்பான் ஏற் படுத்தியுள்ள சுற்றுச்சூழல் சீர் கேடுகள் குறித்த அறிக்கைகளின் நகல்களையும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அனுப்பி யுள்ளார்.
எண்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்திற்கு உலகளாவிய அளவில் தடைவிதிக்கவேண்டும் என்று வலியுறுத்தி சுவிட்சர் லாந்து நாட்டில் பெர்சிஸ்டண்ட் ஆர்கானிக் பொலுட்டன்ட்ஸ் மாநாடு நடைபெறுகிறது. இதை யொட்டி எண்டோசல்பான் பூச் சிக்கொல்லிக்குத் தடை விதிக் குமாறு வலியுறுத்தி 87 வயதான முதல்வர் அச்சுதானந்தன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத மிருந்தார். இதைப்போல் அனைத்து மாநில முதல்வர் களும் எண்டோசல்பான் மருந் தைத் தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். உலகில் வாழும் அனைத்து உயிரி னங்களுக்கும் ஏற்படக்கூடிய அபாயத்தை உணர்ந்து 80 நாடு கள் எண்டோசல்பான் பூச்சிக் கொல்லிக்குத் தடைவிதித்துள் ளன. ஆனால் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசு இப்பூச்சிக் கொல்லிக்குத் தடைவிதிக்க தயங் குகிறது என்று அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார். |
|