நாட்டின் பெருமுத லாளிகள் மற்றும் கார்ப்ப ரேட் நிறுவனங்கள் பொய்க் கணக்கின் மூலம் வரி ஏய்ப்பு செய்து அப்பணத்தை வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளனர். அவர் களைக் காப்பாற்றுவதற்காக மத்திய அரசு கடுமையாக முயன்று வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங் களிடமும் பெருமுதலாளிக ளிடமும் பெருமளவில் தேர் தல் நிதி, கட்சி வளர்ச்சி நிதி என்று இடதுசாரிக் கட்சி கள் தவிர அனைத்துக் கட்சி களும் பணத்தை வசூலித்து வருகின்றன. இப்போது உச்சநீதிமன்றத்தின் ஆணைப் படி அவர்கள் மீது நடவ டிக்கை எடுத்தால் காங்கிரஸ் கட்சி பெருமுதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறு வனங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வெளிநாட்டு வங்கி களில் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இரட்டை வரித் தவிர்ப்பு ஒப்பந்தத்தின் காரணமாக அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்று உச்சநீதி மன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி தலைமையிலான அமர்வாயத்திடம் மத்திய அரசின் தலைமை வழக்கறி ஞர் கோபால் சுப்ரமணியம் தெரிவித்தார். எனினும், ஜெர்மன் நாட் டின் லீச்டென்ஸ்டீன் வங்கி யில் பணத்தைப் பதுக்கி யுள்ள 6 பேரின் பெயர்களை வெளியிடச் சம்மதம் தெரி வித்துள்ளது. அவர்கள் மீது அரசு வழக்குத் தொடர்ந் துள்ளது. மேற்குறிப்பிட்ட 6 பேரின் பெயர்களும் ஊடகங்களில் ஏற்கெனவே வெளிவந்து விட்டன. அரசின் விளக் கத்தை ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம், எந்த சட்டத்தின் படி அவர்களின் பெயர்களை வெளியிட முடியவில்லை என்று விளக்குமாறு உத்த ரவிட்டுள்ளது. சுமார் 50 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பி லான பணம் அந்நிய நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட் டுள்ளது. இக்கறுப்புப் பணத்தை வெளிக்கொணர மத்திய அரசு முயற்சிக்க வில்லை என்று பிரபல வழக் கறிஞர் ராம் ஜெத்மலானி பொது நல வழக்குத் தொடர் ந்துள்ளார். அவருடன் பஞ் சாப் மாநில முன்னாள் டிஜிபி கே.பி.எஸ். கில், முன்னாள் மக்களவைச் செயலர் சுபாஷ் காஷ்யப் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் அரசியல் முன்னணிச் செய லாளரும் முன்னாள் உயர் காவல்துறை அதிகாரியு மான ஜே. எப். ரிபெரியோ ஆகி யோரும் இணைந்துள்ளனர். அந்நிய வங்கிகளில் பணம் குவித்துள்ள இந்தி யர்களின் பெயர்களை வெளி யிடுவதில் என்ன தயக்கம் என்று உச்சநீதிமன்றம் கடந்த அமர்வின்போதே அதிருப்தி தெரிவித்துள் ளது. எனினும் மத்திய அரசு கறுப்புப் பண முதலை களைக் காப்பாற்றும் வித மாக அப்பெயர்களை வெளி யிட மறுக்கிறது. வெளிநாடுகளில் பணம் பதுக்கியுள்ளவர்களின் பெயர்கள் அரசிற்குத் தெரி யும் என்று அரசு ஒப்புக் கொண்ட பின்னரே உச்ச நீதி மன்றம் இக்கேள்வியை எழுப்பியது என்பது குறிப் பிடத்தக்கது. |


