புதுதில்லி, மே 2- மனித உயிர்களுக்கும் விலங்கினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் எண்டோசல் பான் பூச்சிக் கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என தொடரப்பட்ட மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அர சுக்கு உச்சநீதிமன்றம் நோட் டீஸ் அனுப்பியது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் எண்டோ சல்பான் பூச்சிக் கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், இந்தியா முழுவதும், உயிருக்கு அபா யம் விளைவிக்கும் பூச்சிக் கொல்லி மருந்தை தடை செய்வதற்கு மத்திய அர சுக்கு நீதிமன்றம் அறிவு றுத்த வேண்டும் என வேண் டுகோள் விடுக்கப்பட்டி ருந்தது. எண்டோ சல்பான் பூச்சிக்கொல்லி மருந்தால் அதிகமான நபர்கள் பாதிக் கப்பட்டுள் ளனர். ஏற்கன வே 81 நாடு களில் எண்டோ சல்பான் மருந்துக்கு தடை உள்ளது. மேலும் 12 நாடுக ளில் இந்த அபாயகரமான மருந்தைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள் ளது. கேரளாவில் காசர்கோ டு மாவட்டத்தில் எண்டோ சல்பான் பூச்சிக்கொல்லி மருந்தால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வாலிபர் சங்கத்தினர் தங்களது மனு வில் குறிப்பிட்டு இருந்த னர். எண் டோசல்பான் மருந்தால், 500க்கும் மேற் பட்டவர்கள் காசர்கோட் டில் இறந்துள்ளனர். 4 ஆயி ரத்துக்கும் மேற்பட்டவர் கள் உடல் குறைபாடுகள் அடைந்துள்ளனர். காசர் கோடு மாவட்டத்தில் ஆய் வாளர்கள் ஆய்வு செய்த போது, ஆண்கள் பாலின பருவ நிலையை எட்டுவ தில் தாமதம் ஏற்படுவதை கண்டறிந்துள்ளனர். எண்டோ சல்பான் பூச்சிக்கொல்லி மருந்தே இதற்கு காரணம் என ஆய் வில் உறுதிபடுத்தப்பட் டுள் ளது. காசர்கோடு மாவட் டத்தில் உள்ள முந்திரித் தோட்டங்களுக்கு எண் டோ சல்பான் பூச்சிக் கொல் லி மருந்து மட்டும் 20 ஆண்டுகள் பயன்படுத்தப் பட்டன. இந்தப் பூச்சி மருந்து பல ஆண்டுகள் பயன்படுத்தப் பட்டதன் விளைவாக அங் கு சுற்றுச்சூழல் கேடு ஏற் பட்டது. தண்ணீர் மற் றும் நிலப்பகுதிகள் மாசுபட் டன. வாலிபர் சங்க மனுவை விசாரணை செய்யும் உச்ச நீதிமன்ற பெஞ்ச், மத்திய அரசு உரிய பதில் அளிக் குமாறு நோட்டீஸ் அனுப் பியது. மேலும் மே 11ம் தேதி நடக்கும் விசாரணையில் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் ஆஜராகும்படியும் கூறப் பட்டுள்ளது. ஜெனிவாவில் நடந்த எண்டோசல்பான் எதிர்ப்பு மாநாட்டில் இந்திய அரசு ஊசலாட்ட நிலையை எடுத் தது. இந்தியாவில் உள்ள பூச்சிமருந்து தயாரிப்பாளர் களின் செல்வாக்குக்கு கட் டுப்பட்ட அரசு தடை தேவையில்லை என்று கூறி வந்தது. ஜெனீவாவில் ஒரு சமரச நிலைக்கு தள்ளப் பட் ட இந்திய அரசு தற்போது தடை குறித்து ஒப்புதல் அளித்துள்ளது. |


