posted May 2, 2011, 9:14 PM by theekkathir news
[
updated May 2, 2011, 9:15 PM
]
மதுரை, மே15 -
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ளது வில்லூர் கிராமம். இங்கு நிலவும் தீண்டாமைக் கொடு மையை சுட்டிக்காட்டியும் தமிழக அரசு தடுக்கத் தவறியதால், தீண்டா மைக் கொடுமை மீண்டும் தலை தூக்கி அங்கு துப்பாக்கிச்சூடு சம் பவம் வரை நடைபெற்றுள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ளது வில்லூர் கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் தலித் மக்கள் - அரசு அமைத்துக்கொடுத்த பொதுப்பாதையில் வாகனங்கள் ஓட்டிச் செல்ல அனுமதிக்கப்படு வதில்லை. பொதுப்பாதையில் சென் றால் மிக எளிதாக பிரதான சாலை யை அடைந்து விட முடியும். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் சுமார் 1.5 கி.மீ. தூரம் வயல்வெளியில் வாக னத்தை உருட்டிச் சென்றுதான் பிர தான சாலையை அடைய வேண்டிய அவலம் உள்ளது.
தலித் மக்கள் தங்களுக்கு இழைக் கப்படும் தீண்டாமைக் கொடுமை குறித்து, கூறுகையில், எங்கள் கிராமத் தில் எங்களது சமூக மக்கள் பொதுப் பாதையை பயன்படுத்த முடியாது; நாங்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக உள்ளோம்.
இருசக்கர வாகனத்தில் வயல் பாதை வழியாகத்தான் சென்று வருகி றோம். விதைப்புக் காலங்களில், மழை பெய்யும் சமயங்களில் வயல் பகுதி சேறும், சகதியுமாக இருக்கும். நாங் கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால் வேறுவழியின்றி அனு சரித்துச் செல்ல வேண்டியுள்ளது. பொதுப்பாதையில் எங்களை அனு மதிக்கவேண்டும். இதற்கான நட வடிக்கையை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்கவேண்டும், என கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம், டிராக் டருக்கு டீசல் வாங்கச்சென்ற போது எழுந்த பிரச்சனையை ஒட்டி சம் பந்தப்பட்டவர்களிடம் சுட்டிக்காட் டினோம். இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், சனிக்கிழமையன்று இக்கிராமத்தைச் சேர்ந்த முருகன் தனது உறவினர் வீட்டுக் குழந்தை களுக்கு முடியிறக்கும் நிகழ்ச்சிக்காக வெளியூர் புறப்பட்டுச்சென்றுள்ளார். செல்லும்போது தனது செல்பே சியை வீட்டிலேயே வைத்துச் சென்று விட்டார். செல்பேசி இருப்பதை கவனித்த முருகனின் சகோதரர் தங் கப்பாண்டி செல்பேசியை எடுத்து கள்ளிக்குடியில் பேருந்திற்காக காத் திருந்த அவரது அண்ணன் முருகனி டம் கொடுத்துவிட்டு இரவில் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி யிருக்கிறார். இரவு நேரமென்பதால் பொதுப் பாதையில் தமது வீட்டிற்கு சென்றிருக்கிறார். பொதுப்பாதை யில் அவர் செல்வதை ஒரு கும்பல் தடுத்து அவரை தாக்க முற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு, பின்னர் காவல்நிலை யம் சென்று நடைபெற்ற சம்பவத்தை கூறியிருக்கிறார். இதையடுத்து காவல் துறையினர் 5 பேரை பிடித்துச்சென் றனர்.
இதற்கிடையில் ஞாயிற்றுக் கிழமை காலை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வில்லூர் கிராமத்திற்கு சென்று சம்பவம் குறித்து மக்களிடம் விசாரணை நடத்திவிட்டு, மாலை யில் சமாதானக்கூட்டம் நடத்தி பிரச் சனைக்கு தீர்வு காணலாம் எனக் கூறியிருக்கிறார்.
மாலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சென்ற அதிகாரிகள், காவல் துறையோடு இணைந்து சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, பேச்சுவார்த் தைக்கு உடன்படாது கோபமடைந்து சாதி ஆதிக்க சக்தியினரில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் சென்று முரு கன், தங்கப்பாண்டி, லட்சுமியம் மாள் ஆகியோர் வீட்டை கடுமை யாக தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். சுமார் 50ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசப்படுத்தப்பட்ட தாக முருகன் கூறினார்.
தலித் மக்கள் வீடுகள் மீது தாக்கு தல் நடத்தப்பட்டது குறித்து தகவல் கிடைத்தவுடன், காவல்துறையினர், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதி காரிகள் ஆகியோர் சென்று சமரசப் பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற் கொண்டுள்ளனர். இவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. சாதி ஆதிக்க சக்தியினர் அங்கு பாதுகாப் புக்காக சென்ற காவல்துறை வாக னத்தை அடித்து சேதப்படுத்தினர். மேலும் காவல்நிலையம் அருகே கூடி கல்லெறி சம்பவத்திலும் ஈடுபட்ட னர். இதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இருவர் காயமடைந்தனர்.
தற்போது வில்லூர் கிராமத்தில் காவல்துறை உயரதிகாரிகள் உட்பட மதுரை நகர், மதுரை மாவட்டம், விருதுநகர், சிவகங்கை, இராமநாத புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர். ஊர் முழுவதும் காவல் துறை வாகனங்களும், காவல்துறை யினரும் உள்ளனர். ஊரே மயான அமைதியாக உள்ளது. காவல்துறை உயரதிகாரிகள் மஞ்சுநாதா, சஞ்சய் மாத்தூர், அஸ்ராகார்க் வில்லூரில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரி மஞ்சுநாதா திங்களன்று காலை வில்லூரில் செய்தியாளர் களிடம் பேசினார். அப்போது, சாதி இந்துக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக் களை சாதி இந்துக்கள் பொதுப் பாதையில் அனுமதிக்க மறுத்ததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பாது காப்பு பணிக்காக சென்ற காவல் துறை வாகனம் தாக்குதலுக்குள் ளானது. காவல்நிலையம் மீது கல் லெறி சம்பவம் நடைபெற்றது. நிலை மையை கட்டுக்குள் கொண்டு வர நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்தார். காவல்துறை தரப்பில் 12 பேர் வரை காயமடைந் தனர். சம்பவம் தொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.சி., எஸ்.சி. சட்டப்பிரிவுகள் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றார்.
மேலும் ஏற்கனவே வில்லூர் தீண் டாமை கொடுமை குறித்து கடந்த 2010 செப்டம்பர் மாதமே செய்தி வெளியாகியிருந்தது. அப்போது இப் பிரச்சனையின் மீது உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்திருந் தால் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந் திருக்காதே என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தீண்டாமைக் கொடு மைக்கு எதிராக உறுதியான நடவடிக் கையை மேற்கொள்ளும் என்றார்.
டீ குடித்த டம்ளரை கழுவித்தரும் கொடுமை
பொதுப்பாதையில் குடையை விரித்து பிடித்து செல்லமுடியாது. குறிப்பாக இங்கு இரட்டை டம்ளர் முறை உள்ளது. இங்குள்ள டீக்கடை களில் தலித் மக்களுக்கு பிளாஸ்டிக் கப்புகளில் டீ வழங்கப்படுகிறது. இல்லையென்றால் எவர்சில்வர் டம்ளர்களில் டீ வழங்கப்படுகிறது. எவர்சில்வர் டம்ளரில் டீ குடித்து விட்டு அந்த டம்ளரை கழுவி கொடுத்து விடவேண்டும் என்ற நிலைமையும் உள்ளது. பேருந்து நிறுத்தம் உள் ளிட்ட இடங்களில் நாங்கள் தரை யில் தான் அமரவேண்டும் போன்ற நிகழ்வுகளும் இக்கிராமத்தில் உள்ள தாக தலித் மக்கள் கூறியது மேலும் அதிர்ச்சிஅலைகளை ஏற்படுத்தி யுள்ளது.
கண்டுகொள்ளாத தமிழக அரசு
கடந்த செப்டம்பர் மாதம் பொதுப்பாதையில் தலித் மக்கள் இரு சக்கர வாகனத்தில் செல்வதற்கு அனு மதி மறுக்கப்பட்ட சம்பவம் நடை பெற்றபோதே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இவ்விஷயத்தில் தலை யிட்டு, பொதுப்பாதையில் செல் வதை தடுப்பவர்கள் மீது வன் கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும். தீண்டாமைக் கொடுமைகளை உறுதியோடு தடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டி யிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே வில்லூர் தீண்டாமைக் கொடுமை குறித்தும் மாவட்ட நிர் வாகம் தலையிட வேண்டியதன் அவ சியம் குறித்தும் தீக்கதிர் கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பதில் தமிழக திமுக அரசு எப் படி உள்ளது என்பதை வில்லூர் சம் பவம் மீண்டும் அம்பலப்படுத்தியுள் ளது.
-நமது சிறப்பு நிருபர்
|
posted May 2, 2011, 9:12 PM by theekkathir news
[
updated May 2, 2011, 9:13 PM
]
பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் தரப்படுகிறது. திருப்பூர், ஈரோடு, கோவை பகுதிகளில் உள்ள உள்நாட்டு தொழிலான விசைத்தறிகளுக்கு மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. முதலாளிகளில் கூட ஆட்சியாளர்கள் வெள்ளை முதலாளி, கருப்பு முதலாளி என்று பார்க்கிறார்கள். இந்த மின்வெட்டை கண்டித்து மே-5 அன்று சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு சிஐடியு, ஏஐடியுசி, இடதுசாரி தொழிற்சங்கங்கள் முழு ஆதரவு அளிக்கின்றன.
முதலமைச்சரின் பொறுப்பில் காவல்துறை உள்ளது. அங்குள்ள பெண்காவலர் பாலியல் தொல்லை என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார். அந்த வழக்கில் நானும் ஒரு கட்சிக்காரராக சேர்ந்துள்ளேன். அந்த வழக்கை தொடர்ந்து நடத்துவோம்.
ஒரு குவிண்டால் நெல்லுக்கு ஒரு பவுன் தங்க நகை வாங்கிய காலம் போய் விட்டது. இன்றைக்கு ஒரு குவிண்டால் நெல் 1200ரூபாய் எனவும், ஒரு பவுன் தங்கம் 16ஆயிரம் ரூபாய் எனவும் விலை நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இதற்கு பெயர்தான் பொருளாதார வளர்ச்சியா? இவற்றிற்கு எதிராக நமது இரண்டு இயக்கங்களும் ஒன்றுபட்டு போராடுவோம்.
-தென்சென்னை மாவட்ட மேதின பேரணி பொதுக் கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., ஆர்.நல்லகண்ணு பேசியதிலிருந்து...
|
posted May 2, 2011, 9:10 PM by theekkathir news
[
updated May 2, 2011, 9:12 PM
]
சென்னை, மே 2-
கல்வி உரிமைச் சட்டத்தை நடை முறைப்படுத்த மறுக்கும் தனியார் பள்ளி களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண் டுமென இந்திய மாணவர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.
நாடு விடுதலையடைந்து 63 ஆண்டு களுக்கு பிறகுதான் அனைத்துக் குழந் தைகளும் கல்வி கற்பதற்கான உரி மையை நிலைநாட்டுகின்ற “அனை வருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம்” கொண்டுவரப் பட்டுள்ளது. மாணவர்கள், கல்வியாளர் கள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் தொடர் போராட்டத்திற்கு பிறகு 2010 ஏப்ரல் 1 முதல் அச்சட்டம் நடை முறைக்கு வந்துள்ளது. அதன்படி கல்வி பெறுவது அனைத்துக் குழந்தைகளின் அடிப்படை உரிமையாக்கப்பட்டுள் ளது.
சமமான மற்றும் தரமான கல் வியை அனைவருக்கும் வழங்கிட சில விதிகள் அச்சட்டத்தில் உருவாக்கப்பட்டுள் ளது. நாடு முழுமைக்கும் பரவியுள்ள தனியார் பள்ளிகள், அருகிலுள்ள நலி வடைந்த பிரிவு மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கையில் 25 சதவீதம் இடங்களை ஒதுக்கி, இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்பதும் கல்வி உரிமைச்சட்டத்தின் முக்கிய விதிகளில் ஒன்று வரும் கல்வியாண்டிலிருந்து ஒன்றாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க் கையின் போது அவ்விதி நடை முறைப்படுத்த வேண்டியுள்ள நிலை யில், தமிழகத்திலுள்ள ஒரு சில தனி யார் பள்ளிகள், அவ்விதியை நடை முறைப்படுத்த மறுத்து பெற்றோர் களை அரசுக்கு எதிராகவும், கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கு எதிராகவும் திருப்பி விடுகின்ற வேலையை செய்து வருகின்றன.
குறிப்பாக சென்னையிலுள்ள அடையாறு சங்கரா மேல்நிலைப் பள்ளி மற்றும் லேடி ஆண்டாள் வெங் கடசுப்பாராவ் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆகியவை, பெற்றோர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் நலிந்த பிரிவினரை தங்கள் பள்ளியில் அனு மதித்தால் பள்ளியின் தரம் மற்றும் ஒழுக்கம் ஆகியவை கெட்டுப்போய் விடும் என்றும், எனவே பெற்றோர்கள் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என் றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல பள்ளிகள் பெற்றோர்களுக்கு இத்த கைய சுற்றறிக்கையை அ¬னுப்ப தயா ராகி வருவதாக கூறப்படுகிறது. தனியார் பள்ளிகளின் இத்தகைய செயல் சமூக நீதிக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது. எனவே, இந்திய மாணவர் சங்கம் இதை வன்மையாக கண்டிக்கிறது.
‘கல்வி’ என்பது பெரும்பாலான மக்களின் நலனுக்கான அறிவை உற் பத்தி செய்கின்ற கருவியாக இருக்க வேண்டுமே தவிர ஒரு சிலரின் லாபம், ஆதிக்கம் மற்றும் அதிகாரக் குவியல் என்பதற்கான கருவியாக இருக்கக் கூடாது. அத்தகைய நிலையை ஜன நாயக நாட்டில், அரசு அனுமதிக்கக் கூடாது. முன்னேறிய நாடுகளில் எல் லாம் கல்வி வழங்கும் முழுப்பொறுப் பையும் அரசே ஏற்றுக் கொண்டு செயல்படுத்தி வருகின்றது. அங்கு சம மான கல்வி எல்லோருக்கும் அளிக்கப் படுகின்றது. ஆனால், நமது நாட்டில் கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து மத் திய- மாநில அரசுகள் விலகி தனியாரை தடையின்றி அனுமதித்ததன் விளைவே கல்வி வியாபாரமானதோடு மட்டு மல்லாமல், சமூக நீதியையும், ஜனநாய கத்தையும் புறந்தள்ளி, கொள்ளை லாபத்திற்காக, அரசின் சட்டங் களையே நடைமுறைப்படுத்த மறுக் கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முழு¬ அளவில் நடைமுறைப் படுத்தப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும். மேலும் மறுக்கும் பள்ளி களின் அங்கீகாரத்தை ரத்து செய்து நட வடிக்கை எடுக்க வேண்டுமென்று இந் திய மாணவர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ள சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ்.கனகராஜ், செயலாளர் ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட் டத்தின் இதர விதிகளையும் அனைத் துப் பள்ளிகளும் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டு மென வலியுறுத்தியுள்ளனர்.
|
posted Apr 29, 2011, 7:46 PM by theekkathir news
[
updated Apr 29, 2011, 7:47 PM
]
சென்னை, ஏப். 29-
இலங்கையில் தமிழ் மக்களை கொன்றவர்களுக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி மே முதல்வாரத்தில் தமிழகம் முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநி லச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளஅறிக்கை வருமாறு:
இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையி லான ஆயுத மோதலில் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட் டுள்ளனர். மனித உரிமைகள் அப் பட்டமாக மீறப்பட்டுள்ளது என்று ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள் ளது. இதுதொடர்பாக இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தவர் களுக்கு தண்டனை வழங்கிட வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு ஏற்கெனவே அறிக்கை வெளியிட் டுள்ளது.
2008 செப்டம்பர் முதல் 2009 மே வரை நடைபெற்ற இறுதிக்கட்ட ஆயுததாக்குதலில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் மிருகத்தனமான தாக்கு தலை நடத்தியுள்ளது. கடைசி ஒரு மாதத்தில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் மீது குண்டு போட்டு கொன்று குவித்துள் ளது. சிறையிலடைக்கப்பட்ட கைதி களை துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொன்றுள்ளது என்றும் ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.
இத்தகைய கொடூரமான கொலை களுக்கும், பல்லாயிரம் தமிழர்களின் உயிரிழப்புக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் இலங்கை அரசே பொறுப்பாகும்.
இலங்கை அரசின் கொடிய மனித உரிமை மீறல் குறித்து முழுமையான விசாரணை நடத்திடவும், தமிழர்க ளைக் கொன்று குவித்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கிடவும், இந் திய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்றும்; ஆயுத மோதலின்போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வு கிடைத் திடவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு முழுமையான அதி காரம் கொண்ட மாநில சுயாட்சி கிடைத்திடவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க இந்திய அரசு தனது ராஜ்ய உறவை வலுவாகப் பயன்படுத் திட வேண்டுமென்றும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிரதான நகரங்க ளில் மே முதல்வாரத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தோழர்களும், வர்க்க -வெகுஜன அமைப்பினரும், மனித உரிமைகளை வலியுறுத்தும் ஜனநாயக எண்ணம் கொண்டோரும் சக்தியாக பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறை கூவி அழைக்கிறது.
|
posted Apr 29, 2011, 7:44 PM by theekkathir news
[
updated Apr 29, 2011, 7:46 PM
]
சென்னை, ஏப்.28-
மூன்றாம் நபர் வாகன இன்சூரன்ஸ் பிரிமியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலா ளர் சம்மேளனம் கண்ட னம் தெரிவித்துள்ளது.
சம்மேளனத்தின் தலை வர் ஏ.பி.அன்பழகன், பொதுச் செயலாளர் எம்.எஸ். ராஜேந்திரன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
கடந்த 8 மாதங்களில் 7 முறை பெட்ரோல் - டீசல் விலை உயர்வை மத்திய அரசு அமலாக்கி உள்ளது. விலைவாசி உயர்வால் திண றிக் கொண்டிருக்கும் சாலைப்போக்குவரத்தில் பணியாற்றும் ஊழியர்கள், வாகன உரிமையாளர்கள் மேலும் அதிர்ச்சியுறும் நிலையில் 25.4.2011 முதல் இன்சூரன்ஸ் கட்டணத்தை கடுமையாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
லாரி, கண்டெய்னர், மேக்சிகேப், ஆட்டோ உள் ளிட்ட தனியார் வாகனங் கள், இரு சக்கர வாகனங் கள் வர்த்தக வாகன காப்பீடு பிரிவில் மூன்றாம் நபருக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையை, காப்பீட்டு நிறுவனங்கள் 70 சதவீதம் வரை காப்பீட்டு பிரிமியத் தொகையை கடுமையாக உயர்த்தி வசூலிக்கின்றன.
இதனை தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மும், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மும் (சிஐடியு) இணைந்து வன்மையாக கண்டிக்கின்றன.
ஜெனரல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன் சூரன்ஸ் மற்றும் ஓரியண் டல் இன்சூரன்ஸ் ஆகிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே இருந்தபோது காப்பீட்டுக் கட்டணம் முறையாக இருந்து வந்தது. அந்நிய நாட்டு தனி யார் காப்பீட்டு நிறுவனங் கள் இத்தொழிலில் ஈடுபட மத்திய அரசு அனுமதித்த தின் விளைவாக தொடர்ந்து அவர்களின் கொள்ளை லாபத்திற்காக பிரிமியத் தொகையை உயர்த்தும் சூழ் நிலை உருவாக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் அவ திப்படும் வாகன உரிமை யாளர்களை மேலும் இன் னலுக்கு தள்ளியுள்ளது. இதன் விளைவாக வாகனங் களில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கும் பணி கிடைப்பதில் சிரமத்திற்கு உள்ளாக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. சமீபத் தில் பத்திரிகைகளில் மேலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என செய்திகள் வந்துள்ளன.
1.4.2010 தேதிய கணக் கீட்டின்படி தமிழகத்தில் ஒரு கோடியே 21 லட்சம் வாகனங்களுக்கு மேல் சாலையில் இயக்கப்படுகின் றன. அதே போன்று இரு சக்கர வாகனங்களின் எண் ணிக்கை 1 கோடியை தாண் டியுள்ளது.
தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ள போது ஐஆர்டிஏ உத்தர வின்படி இன்சூரன்ஸ் நிறு வனம் மூன்று சக்கர வாக னத்திற்கு பிரிமியத்தொகை ரூ.2416 என்று செலுத்த வேண்டிய தொகையை 25.4.2011 முதல் ரூ.3414 ஆக செலுத்த வேண்டுமென கட் டாயப்படுத்தி வசூலித் துள்ளது.
இதுபோன்று இதுவரை மூன்றாம் நபர் வாகன காப் பீட்டிற்கான பிரிமியத் தொகை 4 அல்லது 5 ஆண் டுகளுக்கு ஒரு முறை திருத்தி அமைக்கப்பட்டு வந்தது. இனி பிரிமியக் கட்டணத் தொகை குறித்து ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு மேற் கொள்ளப்படுமாம்.
ஒவ்வொரு வாகனமும் கோரும் சராசரித்தொகை, இழப்பீடு கோரி வரும் விண்ணப்பங்களின் கால அளவு, ஆண்டின் சராசரி பணவீக்கம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படை யில் கட்டணம் நிர்ணயிக் கப்படும் என்று இன்சூ ரன்ஸ் ரெகுலேட்டரி அன்டு டெவலப்மென்ட் அத்தா ரிட்டி நிறுவனம் (மத்திய அரசு) கொடுத்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள் ளது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களி லும் செயல் படுகின்ற மோட் டார் வாகன ஓட்டுனர் மற் றும் உரிமை யாளர் சங்கங் களும் ஒன்றி ணைந்து மத் திய - மாநில அரசுகளின் இது போன்ற கொள்கையை எதிர்த்த போராட முன்வர வேண்டும்.
|
posted Apr 29, 2011, 2:31 AM by theekkathir news
[
updated Apr 29, 2011, 2:33 AM
]
இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வியாழ னன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இலங்கையில் ராணுவத்திற்கும் விடு தலைப்புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதலில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது என ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐ.நா.சபை அமைத்த மூவர் குழு இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்து வெளி யிட்டுள்ள அறிக்கை, இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளின் மீது தொடுத்த இறுதிக்கட்ட ஆயுத தாக்குதலில் (2008 செப்டம்பர் முதல் 2009 மே வரை) வன்னி பகுதியில் சுமார் 3,30,000 அப்பாவி தமிழ் மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் பல்லாயிரக் கணக்கான இலங்கை தமிழர்கள் கொல் லப்பட்டுள்ளனர். மேலும் எண்ணற்றோர் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர். பெரும் எண்ணிக்கையில் அப்பாவித் தமிழர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் யுத்தத்திற்குப் பிறகு ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டனர் என தெரிவிக்கிறது.
ஆயுத மோதலின்போது பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு வழங்கச் சென்ற குழுவினர் மீதும், மருத்துவமனைகள் மீதும், ஐ.நா. சபை அலுவலகங்கள் மீதும். ஆயுத மோதலில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், நிவாரணம் வழங்கிடவும் சென்ற செஞ்சிலுவைச் சங்கத்தினர் மீதும் இலங்கை ராணுவம் தாக்குதல் தொடுத் துள்ளது.
தாக்குதலுக்கு ஆளாகி பலத்த காயத்துடன் உயிருக்குப்போராடிய தமிழ் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வும், நிவாரணம் வழங்கவும் இலங்கை ராணுவம் அனுமதிக்காத காரணத்தா லேயே உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
ஆயுத மோதலின்போது விடுதலைப் புலிகள் அப்பாவித் தமிழர்களை கேடய மாக பயன்படுத்தியது. சிறுவர்களை கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்தது உள்ளிட்ட மனித உரிமைமீறல் நடவடிக் கைகளை ஐ.நா.குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டி இருப்பினும், இலங்கை ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதல் கள் காரணமாகவே உரிமைக்காக போரா டிய தமிழர்களும், அப்பாவி தமிழ் மக்களும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள் ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல்களாகும்.
இத்தகைய கொடிய மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசா ரணை நடத்திட வேண்டும். மனித உரிமைகளை மீறி, பல்லாயிரம் தமிழர் களை கொன்று குவித்தவர்கள் மீது மனித உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத் திட வேண்டும். இதனை செயல்படுத்தும் வகையில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கிட, மத்திய அரசு தனது ராஜ்ய உறவை பயன்படுத்தி, இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேலும், ஆயுத மோதல்கள் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும், ராணுவ முகாம்களில் அடைத்து வைக்கப்பட் டுள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் இன்னும் முழுமையான புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை. சம உரிமை, மொழி, கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் மற்றும் வாழ்வாதார பிரச்ச னைகளிலும் முழுமையான அதிகாரம் கொண்ட மாநில சுயாட்சி வழங்கிடவும், நீண்டகாலமாக தீர்க்கப்படாத இத்தகைய பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வும் இலங்கை அரசு இதுவரை உருப்படி யான எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை.
எனவே, ஒன்றுபட்ட இலங்கைக்குள் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியாக நிரந்தரத் தீர்வு காண, இலங்கை யில் உள்ள அனைத்து தமிழர்கள் அமைப் புகளோடும் பேச்சுவார்த்தை நடத்திடவும், இலங்கைஅரசை நிர்ப்பந்திக்க இந்திய அரசு தனது ராஜ்ய உறவை வலுவாக பயன்படுத்திட வேண்டுமென மார்க் சிஸ்ட்கட்சி வலியுறுத்துகிறது. |
posted Apr 29, 2011, 2:31 AM by theekkathir news
[
updated Apr 29, 2011, 2:31 AM
]
சென்னை, ஏப். 28-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தொழிலாளி வர்க்கம் போராடி, உயிர்த் தியாகம் செய்து தனது உரிமைகளை நிலைநாட்டிய பெருமைமிக்கது மே தினக் கொண் டாட்டங்கள். என்றும் போல இன்றும் வெகு விமர்சையுடன் மே தின விழாவை நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளி வர்க்கத்தை அறைகூவி அழைக்கிறது.
இந்த ஆண்டு மே தினத்தை நடத்துவதற்கு ஆயத்தங்கள் செய்து கொண்டிருக்கும் வேளையில், மாவட்ட நிர்வாகங்களும், காவல்துறையும் அதீதமான கெடுபிடிகளைச் செய்து வருகின் றன. பல இடங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப் பதைக் காரணம் காட்டி, மே தின விழாவிற்கு அனுமதி மறுக்கப் படுகிறது. மே தினத்தின் சிறப்பு அம்சமே அன்று அனைத்து தொழிற்சாலை வாயில்களிலும், பணியிடங்களின் முன்பும், பொது இடங்களிலும் செங்கொடி ஏற்றிக்கோஷமிட்டு, இனிப்பு களை வழங்குவதுதான். எனவே செங்கொடி ஏற்றக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் கூறுவது ஏற்புடையதல்ல; சினிமா பட சுவரொட்டிகளும், வர்த்தக விளம்பரங்களும் கூட சுதந்திரமாக ஒட்டிக்கொள்ள அனுமதிக்கப்படும்போது, மே தின சுவரொட்டி ஒட்டக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து கடிதம் கொடுக்கப்பட்டது. அச் சமயம் மே தினக் கொண்டாட்டங்கள் நடத்த அனுமதி கோரி னால், அவற்றை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்ற றிக்கை அனுப்புவதாக அவர் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்தின் 18-4-2011 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 437/6/2011 (ஐளேவவ) கூறுவதாவது:-
“வாக்கு எண்ணிக்கை மையங்களிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் எந்தவித ஊர்வலமோ, பொதுக்கூட் டமோ நடத்தக்கூடாது; மே தினக் கொண்டாட்டங்களை, மற்றபடி சாதாரணமாக அமலில் உள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்திக்கொள்ளலாம்”
எனவே, தேர்தல் ஆணையச் சுற்றறிக்கையில் கூறியுள்ள படியும், தலைமைத் தேர்தல் அதிகாரி அளித்துள்ள வழிகாட்டு தல் படியும், வாக்கு எண்ணும் மையத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வெளியே கொடியேற்றுதல், தோரணம் கட்டுதல், ஊர் வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துதல் உட்பட அனைத்து சிறப்பு அம்சங்களுடன் மே தினத்தை வண்ணமயமாக நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் உரிமை தினமான மே தினத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது புரட்சி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. வெல்க மே தினம் |
|
posted Apr 29, 2011, 2:29 AM by theekkathir news
[
updated Apr 29, 2011, 2:30 AM
]
கிருஷ்ணகிரி, ஏப். 28-
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கல்வித்துறை அதிகாரி மீது ஆசிரியை பாலியல் புகார் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் இப்புகாரை ஒப்படைத்து உண்மையை கண்டறிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட் டம் சூளகிரி வட்டார கூடு தல் தொடக்க கல்வி அலுவ லராக ஹரி கேசவராவ் உள் ளார். இவரது கட்டுப்பாட் டில் 85 பள்ளிகள் உள்ளன. பெத்த சிகரவப்பள்ளி அரசு துவக்கப்பள்ளியில் ஆசிரி யையாக பணியாற்றுபவர் பாண்டிசெல்வி (25). இவர் தனக்கு ஹரிகேசவராவ் மூலம் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சி யரிடம் புகார் அளித்துள் ளார். திங்களன்று (ஏப்.25) அளிக்கப்பட்ட இப்புகார் மீது நடவடிக்கை எடுக்கு மாறு மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சி. மகேஸ்வரி யிடம் ஆட்சியர் ஒப்படைத் தார். மறுநாள் இருதரப்பி னரையும் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து காவல் ஆய்வாளர் சந்திர காந்தா விசாரணை நடத் தினார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முத்துச் சாமி முதல் சில ஆசிரியர் அமைப்பினர்களும் ஹரிகேச வராவுக்கு ஆதரவாக காவல் நிலையத்திற்கு வந்து வாதா டினார்கள். இறுதியாக தில்லியில் ராணுவத்தில் பணியாற்றும் பாண்டி செல்வியின் கணவர் ஈஸ்வ ரனை தொடர்பு கொண்டு பாண்டிசெல்வியின் புகாரை கல்வித்துறைக்கு மாற்ற சம் மதம் பெற்றனர். அன்று மாலை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்ட பாண்டி செல்வி இரவு 7.45 மணிக்கு தனி நபராக வெளியே வந்தார். அதன் பிறகு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முத்துச் சாமியை சந்தித்து இப்பிரச் சனை குறித்து கேட்ட போது இரு தரப்பிலும் விளக்கம் கேட்டு அதனடிப் படையில் விசாரணை மேற் கொள்ளப்படும் என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சுகா தாரத்துறை ஆகியவற்றில் 2007ஆம் ஆண்டு இது போன்ற பாலியல் புகார்கள் எழுந்தன. பாலின பாகு பாடுக்கு எதிராக ஆயிரத் துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆட்சியர் அலு வலகம் முன்பு உண்ணாவிர தம் இருந்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்து அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செய லாளர் உ.வாசுகி பங்கேற்று பேசினார். அதையொட்டி 2007 செப்டம்பர் 17 அன்று மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட் டார். அதில் அரசுத்துறை சார்ந்த மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரி யும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், தொல்லைகள் தொடர்பான புகார்கள் மீது விசாரணை மேற்கொள்ள மாவட்ட அளவிலான 9 உறுப்பினர் களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக வும், இக்குழு மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தலைமையில் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டி ருந்தது. இந்திய அரசியல் சாசன சட்டத்தின் கீழ் ஆண், பெண் பாகுபாடின்றி சம உரிமையை நிலை நிறுத் தும் வகையில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள ஒரு முக்கிய தீர்ப்பின் அடிப் படையில் இந்த விசார ணைக் குழு அமைக்கப்பட் டுள்ளதாகவும் அந்த செய் திக்குறிப்பில் அன்றைய மாவட்ட ஆட்சியர் சந் தோஷ்பாபு தெரிவித்திருந் தார்.
தற்போது பாண்டி செல்வியின் புகார் காவல் துறை, கல்வித்துறை என பந்தாடப்படுகிறது. தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே. அகோரத்திடம் இது குறித்து கேட்டபோது, உச்ச நீதிமன்றம் வழங்கிய பிரபல மான விசாகா வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் பணிபுரியும் பெண்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க வேண்டும். இதற் கான அரசாணைகள் உள் ளன. பாண்டி செல்வியின் புகார் சமூக நலத்துறை அலு வலர் தலைமையிலான குழு வினரால் விசாரிக்கப்பட்டு நியாயம் வழங்கப்பட வேண்டும். அரசு ஊழியர் சங்கத்தின் மகளிர் துணைக் குழுவின் பிரதிநிதித்துவம் அக்குழுவில் இருக்க வேண் டும் என்று ஏற்கெனவே கேட்டுள்ளோம். மீண்டும் அதை வலியுறுத்துவதோடு இணைத்து பாண்டிசெல்வி புகார் மீதான விசாரணை குறித்து ஆட்சியருக்கு வேண்டுகோள் கடிதம் அளித்திருப்பதாக அகோ ரம் கூறினார். |
posted Apr 29, 2011, 2:27 AM by theekkathir news
[
updated Apr 29, 2011, 2:28 AM
]
சென்னை, ஏப். 28 -
எண்டோசல்பானை தடைசெய்ய வலியுறுத்தி, மே 3-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்து மாறு, விவசாயத் தொழிலாளர் களுக்கு அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.மணி ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக் கையில் இதுபற்றி மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:
எண்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்தானது, புற்று நோய் உட்பட 150-க்கும் மேற் பட்ட நோய்கள் உண்டாவற்கு காரணமாக உள்ளது. இந்தியா வில் பூச்சிக்கொல்லி மருந்து கள் அதிகமாக பயன்படுத்தப் படுகின்றன. குறிப்பாக எண்n டாசல்பான் அதிகமாக பயன் படுத்தப்படுகிறது. 2001-ல் மத் திய அரசு எண்டோசல்பான் மருந்தை தடை செய்தது. பின் னர் 2004-ல் ஆட்சிக்கு வந்த மத்திய ஆட்சியாளர்கள் தடை யை நீக்கி விட்டனர். எண் டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்தினை, அமெரிக்க நிறு வனமான மான்சாண்டோ உற்பத்தி செய்த போதிலும், அதனை அமெரிக்காவில் உப யோகப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் எடுபிடியான மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் கட்சி, இந் தியாவில் அதை தடை செய்ய மறுத்து வருகிறது.
ஏற்கெனவே, பல ஆய்வு கள், எண்டோசல்பானை உபயோகிப்பதால், மனித உயிரிழப்பு, கால்நடை உயிரி ழப்பு, தாவரங்கள் அழிதல், மண் விஷமாவது, உள்ளிட் டவைகள் ஏற்படுவதை உறுதி செய்துள்ளன. ஆனால், விசா ரணைக் கமிஷன் அமைப்ப தாக மத்திய அரசு நாடகமாடு கிறது.
கலவை தயாரிப்பிலும் எண்டோசல்பான் தெளிப்பி லும் ஈடுபடும் விவசாயத் தொழிலாளர்கள் பெருமளவு நேரடியாகப் பாதிக்கப்படு கின்றனர். பாதிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலா ளர்களின் மரணங்கள், எவ் வித விசாரணையுமின்றி சாதா ரண மரணமாக முடிகின்றன..
எனவே, எண்டோசல் பான் உபயோகத்திற்கு, இந்திய அரசு தடை விதிக்க வேண் டும்; கார்ப்பரேட் நிறு வனங் களின் கொள்ளை லாபத்திற்கு, இந்திய மக்களையும், கால் நடைகளையும், பயிர்களை யும், சுற்றுச்சூழலையும் காவு கொடுப்பது, நிறுத்தப்பட வேண்டும்.
ஏற்கெனவே, சத்துக்குறை வால் அவதிப்படும், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வை, சீர்குலைக்காதே என வலி யுறுத்தி, மே மாதம் 3-ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துமாறு, மாவட்டக்குழுக்களைக் கேட் டுக் கொள்கிறோம். இதே தேதியில், தமிழ்நாடு விவசாயி கள் சங்கமும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதால், அதனுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
posted Apr 29, 2011, 2:26 AM by theekkathir news
[
updated Apr 29, 2011, 2:27 AM
]
சென்னை, ஏப். 28-
தேர்தல் விதி மீறல் தொடர்பான வழக்குகள் மீது 6 வாரத்துக்குள் பரி சீலனை செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத் திற்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அதே நேரத் தில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்துவிட் டது.
சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில் கூறியிருந்ததாவது:
தமிழக சட்டசபை தேர் தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுத்துள்ளனர். இது வரை 1800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தேர் தல் ஆணையம் அறிவித் துள்ளது. தேர்தல் வழக்கு களை விரைவாக விசாரிக்க வேண்டும். காங்கிரஸ் எம்எல்ஏ வேல்துரை வழக்கில், 5 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அந்த நிலை நீடிக்கக் கூடாது.
தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடக்க வாக் காளர்களுக்கு பணம் கொடுப் பதை கட்டுப்படுத்த வேண் டும். பணம் பட்டுவாடா தொடர்பான 1800 வழக்கு களை உடனடியாக விசா ரித்து, அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி யிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் வியாழ னன்று (ஏப். 28) விசாரித் தனர். பின்னர் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
மனுதாரரின் கோரிக் கையை தேர்தல் ஆணையம் 6 வாரத்துக்குள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண் ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது. வாக்கு எண் ணிக்கை ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிர மாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், மனுதா ரரின் கோரிக்கையை உடன டியாக பரிசீலிக்க முடியாது என தேர்தல் ஆணைய வழக் கறிஞர் கூறியிருப்பதை ஏற் றுக் கொள்கிறோம். வழக்கை இத்துடன் முடித் துக் கொள்கிறோம் |
|
|