அரசு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்ய தடை இல்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார். தேர்தல் முடிவு வெளி யாக ஒரு மாதம் உள்ளது எனவே அரசு பணிகளை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் அனுமதிப் பது குறித்து தீர்வு காண வேண்டும் என்று முதல மைச்சர் கருணாநிதி கூறி இருந்தார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரி டம் கேட்ட போது அவர் கூறியதாவது: சில வாக்குச் சாவடி களில் சனிக்கிழமை (ஏப். 16) மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக் குப்பதிவு முடிந்த பிறகு, அமைச்சர்கள் அரசு பணி தொடர்பாக ஆய்வு கூட் டம் நடத்தலாம். அரசு பணிகள் குறித்து ஆய்வு செய்யலாம். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அதி காரிகள் இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள் ளக் கூடாது. புதிய திட்டங்களை நடை முறைப்படுத்த முடி யாது என்றாலும் அவசர நடவடிக்கைகளை எடுப் பதற்கான அனுமதி வழங் குவது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். இதுகுறித்து ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிக்கப்படும். தேர்தல் விதி மீறல் தொடர்பாக 62 ஆயிரம் வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன. தேர்தல் கணக்குகளை வேட்பா ளர்கள் ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் தேர்தல் ஆணை யத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு பிரவீன் குமார் கூறினார். |



