இணைப்பு கொடுக்க

இணைவோம்!

RSS feed

வந்தவர்கள்

கடாபி மாளிகை மீது அமெ. குண்டுவீச்சு

posted Apr 26, 2011, 2:57 AM by theekkathir news   [ updated Apr 26, 2011, 2:58 AM ]
திரிபோலி: திரிபோலி யில் லிபிய ஜனாதிபதி மும் மர் கடாபியின் அலுவலகம் அமைந்துள்ள கட்ட டத்தை திங்களன்று காலை அமெரிக்கப் போர் விமா னங்கள் குண்டுவீசி சேதப் படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த குண்டுவீச்சில் பொதுமக்களில் 45 பேர் காயமடைந்ததாகவும், 15 பேர் கவலைக்கிடமாக உள் ளதாகவும் லிபிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடாபி யைக் கொல்ல நடந்த முயற்சி இது என அவர் உறுதியாகக் கூறினார்.

இந்த குண்டுவீச்சில் கடாபியின் அலுவலகத்தில் உள்ள வரவேற்பறை பலத்த சேதமடைந்தது.

திங்களன்று அதிகாலை போர்விமானங்களின் குண்டுவீச்சால் திரிபோலி யின் மத்தியப் பகுதியில் கடும் அதிர்வு ஏற்பட்டது. திரிபோலியின் பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு 12.10 மணியளவில் குண்டு கள் வீசப்பட்டதாக தக வல்கள் குறிப்பிடுகின்றன.

Comments