இணைப்பு கொடுக்க

இணைவோம்!

RSS feed

வந்தவர்கள்

அமெரிக்கா : ராணுவ அமைச்சராகிறார் உளவுப்பிரிவுத் தலைவர்

posted Apr 29, 2011, 2:44 AM by theekkathir news   [ updated Apr 29, 2011, 2:45 AM ]
வாஷிங்டன், ஏப்.28 -

தற்போது ராணுவ அமைச் சராக இருக்கும் ராபர்ட் கேட்ஸை மாற்றிவிட்டு, அமெரிக்க உள வுப் பிரிவான சி.ஐ.ஏ.வின் இயக் குநர் லியோன் பானெட்டாவை அந்தப் பொறுப்பில் அமர்த்த அமெரிக்காவின் ஜனாதிபதி பாரக் ஒபாமா முடிவு செய்துள் எளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

பாகிஸ்தான் நாட்டின் எல் லைக்குள் சட்டவிரோதமாகப் புகுந்து ஆளில்லா விமானங் கள் நடத்தும் தாக்குதல்களை முடுக்கிவிட்டவர் லியோன் பானெட்டா என்பது குறிப்பிடத் தக்கது. ஐ.நா.வின் எதிர்ப்பை யும் மீறி அப்பாவி மக்களை இந்த ஆளில்லா விமானங்க ளின் தாக்குதல்கள் கொன்று குவித்து வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப் பாவி பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

தனது பதவியிலிருந்து வில கிக்கொள்ள ராபர்ட் கேட்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளதால் தான் இந்த மாற்று ஏற்பாடுகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. இவரும் ராணுவத்துறை அமைச் சராகப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக, சி.ஐ.ஏ.வின் இயக் குநராகப் பணியாற்றினார் என் பது குறிப்பிடத்தக்கது. ஆப்கா னிஸ்தானில் அப்பாவி மக்க ளைக் கொன்று குவிக்கும் ஆக் கிரமிப்பிற்குப் பொறுப்பேற்றி ருக்கும் ராணுவத் தளபதி டேவிட் பெட்ராஸ், சி.ஐ.ஏ.வின் தலை வராக நியமிக்கப்பட விருக் கிறார்.

ஒருவேளை, ஒபாமா மீண் டும் வெற்றி பெற்றால் டேவிட் பெட்ராஸ் விரைவில் ராணுவத் துறை அமைச்சராவார் என்பது தான் ஒபாமா நிர்வாகத்தின் உள்விவகாரத்தகவலாக இருக் கிறது. இந்த மாற்றங்களோடு சேர்த்து மேலும் பலர் மாற்றப் படவிருக்கிறார்கள். அவ்வாறு மேற்கொள்ளப்படும் முக்கிய மான நியமனமாக ஆப்கானிஸ் தான் நாட்டிற்கான அமெரிக் கத் தூதராக ரியான் கிராக்கரை அறிவிப்பதைக் குறிப்பிடு கிறார்கள். ஏற்கெனவே பாகிஸ் தான், இராக், சிரியா, குவைத் மற்றும் லெபனான் ஆகிய நாடு களுக்கு அமெரிக்கத் தூதராக இவர் பணியாற்றியுள்ளார்.

இந்த வார இறுதியில் மாற் றங்களுக்கான அறிவிப்புகளை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கா னிஸ்தானில் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ள வேளையில், தனது அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பிரச் சாரத்தை நடத்துவதில் சிரமம் ஏற்படலாம் என்று பாரக் ஒபாமா கருதுவதுதான் பல மாற்றங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. 

2015- ஆம் ஆண்டில் வெளி யேறிவிடுவோம் என்ற அமெ ரிக்க நிர்வாகத்தின் அறிவிப்பு மேலும் தள்ளிப்போகலாம் என் பதுதான் தற்போதுள்ள நிலை.
Comments